கோயம்புத்தூர் திகைச்சிடுச்சு.. "கருப்பா" இருக்கியே.. இரவெல்லாம் துடித்த மணப்பெண்.. கடைசியில பாருங்க
கோயம்புத்தூர்: கோவை மகிளா கோர்ட் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது.. இந்த தீர்ப்பானது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்கவைத்து வருகிறது. என்ன காரணம்?
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சத்தீஸ்கரில் ஒரு சம்பவம் நடந்தது.. துர்க் அம்லேஷ்வர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் சோன்வானி 40 வயதாகிறது.. இவரது முதல் மனைவி இறந்துவிடவும், சங்கீதா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்துகொண்டார். ஆனால், சங்கீதா கருப்பு நிறமாக இருப்பதாக ஆனந்த் அடிக்கடி சொல்லிக்காட்டி வந்துள்ளார்..

சங்கீதா: கேலி, கிண்டலும் செய்துள்ளார்.. இதனை சங்கீதா ஆரம்பத்தில் கண்டுகொள்ளவில்லையானாலும், நாளுக்கு நாள் கணவரின் கிண்டல் அதிகமாகி கொண்டே போனது. எனவே, அதை கண்டித்துள்ளார். அப்போதும் கணவர், நிறத்தை வைத்து இழிவாக பேசுவதையே வழக்கமாக கொண்டிருந்தார்.
கோபத்தின் உச்சத்துக்கு சென்ற சங்கீதா, வீட்டிலிருந்த கோடாரியை எடுத்து கணவரை தாக்கினார். அத்துடன், அந்தரங்க உறுப்பையும் வெட்டி எறிந்து, கொலையும் செய்தார். இதற்கு பிறகு சங்கீதா கைதாகி சிறைக்கு சென்றுவிட்டார்.. நிறத்தை வைத்து பிரச்சனை செய்யும் கணவனை சங்கீதா இப்படி டீல் செய்துள்ளார் என்றால், இதே போல ஒரு கணவன் நம்முடைய கோவையிலும் இருக்கிறார். அந்த வீட்டில் என்ன நடந்தது என்று பாருங்கள்.
மாரிச்செல்வி: கோவை ஆடீஸ் வீதியை சேர்ந்தவர் கணேஷ்குமார்.. 35 வயதாகிறது.. இவருக்கும், நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்த மாரிச்செல்வி என்ற பெண்ணுக்கும் கடந்த 2018, டிசம்பரில் திருமணம் நடந்தது.. மாரிச்செல்விக்கு 23 வயதாகிறது.. ஆனால், அடுத்த மாதமே, அதாவது, 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ம் தேதி மாரிச்செல்வி திடீரென தற்கொலை செய்துகொண்டார்.. திருமணமான ஒரு மாதத்துக்குள் மாரிச்செல்வி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரேஸ்கோர்ஸ் போலீஸார் இது தொடர்பான வழக்கை பதிவு செய்து விசாரித்தனர்.. அப்போதுதான், மாரிச்செல்வி மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது..
தொந்தரவு: மாாிச்செல்வி கருப்பாக இருப்பதையே கணவர் கணேஷ்குமார் அடிக்கடி சொல்லிக்காட்டி வந்துள்ளார்.. மேலும் மன ரீதியாகவும் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.. அதனாலேயே புதுமணப்பெண், மனமுடைந்த மாாிச்செல்வி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தற்கொலைக்கு முன்பு மாரிச்செல்வி ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.. அதில் "என்னுடைய மாமனார், மாமியார் நல்லவங்கதான்.. ஆனால், என் கணவருடன் வாழ முடியாது.. என்னுடைய அப்பா, அம்மா வீட்டிற்கு சென்று, அவர்களுக்கு பாரமாக இருக்கவும் விரும்பவில்லை" என்று எழுதி வைத்திருந்தார்.. இந்த கடிதத்தின் அடிப்படையில், மாரிச்செல்வியை தற்கொலைக்கு தூண்டுதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் கணேஷ்குமார் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன், அதிரடியாக கைதும் செய்தனர்.
சிறைத்தண்டனை: இந்த வழக்கு விசாரணை கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.. அரசு தரப்பில் வக்கீல் ஜிஷா ஆஜராகி வாதாடினார்.. அனைத்து சாட்சி விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் தற்போது தீர்ப்பு தரப்பட்டுள்ளது. அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட கணேஷ்குமாருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.500 அபராதமும், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பளித்தார்.
இந்த "நிறவெறி" காலம் காலமாக, வல்லரசு நாடுகளில்தான் தலைதூக்கி அப்பாவி உயிர்களை பலிகடா ஆக்கி வருகிறது என்றால், இந்தியாவிலும் ஆக்கிரமித்து கொண்டிருப்பது தொடர்ந்து வேதனையை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications