கிரீன் சிக்னல் கொடுத்த ரயில்வே..மாற்றத்துக்கு தயாராகும் கோவை மரப்பாலம்.. நிம்மதியில் இருமாநில மக்கள்
கோவை: கொச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மரப்பாலம் ரயில்வே சுரங்கத்தின் வழியாகத்தான் தமிழகம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த வாகனங்களும் வரும். அதில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் அந்தப் பாலத்தை அகலப்படுத்துவது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கோவை - பாலக்காடு சாலையில் மரப்பாலம் என்ற பகுதி உள்ளது. ரயில்வே பாலத்துக்கு கீழ் உள்ள சுரங்கத்தின் வழியாகத்தான் தமிழ்நாடு - கேரளாவுக்கு வாகனங்கள் செல்லும். ஆங்கிலேயர் காலத்தில் முன்பு மரத்தினால் ஒரு பாலம் கட்டப்பட்டது. அதனால் அது மரப்பாலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. முன்பு அது இருவழிப்போக்குவரத்தாக இருந்தது. நாளடைவில் அது கான்கிரீட் பாலமாக புனரமைக்கப்பட்டு ஒருவழிப்போக்குவரத்தாக மாற்றப்பட்டது.

அங்கு தினசரி இரு மாநிலங்களிலும் இருந்து சுமார் 30,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்தப் பாலம் 5.5 மீட்டர் அகலம் கொண்டது. அகலம் மிகவும் குறைவு என்பதால் அந்தப் பாலத்தின் வழியாக ஒரு சமயத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். எதிரில் வரும் வாகனம் காத்திருந்துதான் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.
இதன் காரணமாக தினசரி அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும். சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி நெருக்கடியில் சிக்கித் தவிப்பது வழக்கமாக உள்ளது. இதனால், நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதேபோல மாணவர்கள், பணிக்கு செல்வோர், கனரக வாகனங்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். நீண்ட காலமாக உள்ள இந்தப் பிரச்னையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்தப் போக்குவரத்துக்கு நெரிசலுக்கு பயந்தே பொதுமக்கள் பலரும் 4 கிலோ மீட்டர் சுற்றிச் சென்று மதுக்கரை மார்க்கெட் சாலைப் பகுதியை பயன்படுத்தும் நிலை உள்ளது.
மரப்பாலம் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். 5.5 மீட்டர் அகலம் கொண்ட அந்தப் பாலத்தை இடித்துவிட்டு 9 மீட்டர் அகலத்தில் ஒரு பாலமும், அதற்கு அருகில் 9 மீட்டர் அகலத்தில் மற்றொரு பாலமும் கட்டப்படவுள்ளது. 9 மீட்டர் அகலப் பாலத்தில் 1.5 மீட்டர் அகலத்தில் நடைபாதையும் அமைக்கப்படும். இது 4 வழிப் பாதையாக அமைய திட்டமிட்டுள்ளனர்.
பாலம் கட்டப்படவுள்ள 9 மீட்டர் அகலத்திற்கு கான்கிரீட் பாக்ஸ் தயாரிக்கப்பட்டு, அதனை பாக்ஸ் புஸ்ஸிங் தொழில்நுட்பத்தில் பொருத்தப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து, 4 வழிச்சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கூறுகையில், "மரப்பாலத்தை இடித்துவிட்டு கட்டும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
தற்போதுள்ள தேவைக்கேற்ப பாலத்தை வடிவமைப்பதற்கான அனுமதியை தெற்கு ரயில்வேயின் முதன்மை பாலம் பொறியாளரிடம் 31.12.24 வழங்கியுள்ளார். மரப்பாலம் பாலக்காடு ரயில்வே டிவிஷனின் கீழ் வருகிறது. அதனால் அவர்களுடைய ஆலோசனை கேட்கப்பட்டு பாலப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
இந்தப் பணிகளின்போது ரயில்வே போக்குவரத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விரைவில் நிலம் கையகப்படுத்தி பணிகளை தொடங்கவுள்ளோம்." என்றார். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ரயில்வே நிர்வாகத்தின் பணிகள் தான் எஞ்சியுள்ளன. எங்கள் துறையில் விரைவில் இதற்கு நிர்வாக அனுமதி கொடுத்து விடுவார்க்ள. அதன் பிறகு டெண்டர் விடப்படும்." என்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications