மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டு பேக்கரியில் தில்லாலங்கடி மருமகள்? அசிங்கப்பட்ட கோவை நகராட்சி கவுன்சிலர்
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு இந்த சம்பவம் வெளி உலகுக்கு தெரியவந்து அதற்கு மேல் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த கொடுமையான செயலை செய்தது நகராட்சி கவுன்சிலர் என்பதும் அம்பலமாகி உள்ளது.. என்ன நடந்தது மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில்?
மருமகளின் கள்ளக்காதலனை கழுத்தை நெரித்து கொன்று தீ வைத்து எரித்த நகராட்சி கவுன்சிலர் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு தனது 2 மகன்களுடன் கைது செய்யப்பட்டார்.

மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் உள்ளது தேவைய்யா நகர் பகுதி... இங்கு வசித்து வருபவர் அப்துல் ஹக்கீம்.. 39 வயதான இவர் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார்...
இந்நிலையில் சம்பவத்தன்று மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியை சேர்ந்த 32 வயது ஆரிஸ் என்பவர் தன்னுடைய 38 வயது நண்பர் கவுதம் என்பவருடன் அப்துல் ஹக்கீம் கடைக்கு வந்திருந்தார்.
என்னுடைய அண்ணி சுமையா (29)வுடன் நீ நெருங்கி பழகியதால்தான், என் அண்ணன் அலாவுதீன் (36) காணாமல் போய்விட்டார் என்று சொல்லி வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் தகராறாக வெடித்துள்ளது. இறுதியில் அப்துல் ஹக்கீமை, ஆரிஸ் கத்தியால் குத்திவிட்டார். எனினும், அப்துல் ஹக்கீம் உயிர் பிழைத்துவிட்டார்.
சுமையா எங்கே
இந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆரிஸ், கவுதம் இருவரையும் கைது செய்து விசாரித்தனர். அப்போதுதான் அப்துல் ஹக்கீமுக்கும், மாயமானதாக சொல்லப்படும் அலாவுதீனின் மனைவி சுமையாவிற்கும் தகாத உறவு இருந்துள்ளதும், பிறகு கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்தே அலாவுதீன் மாயமாகிவிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அலாவுதீன் எங்கே போயிருப்பார்? என்று பல்வேறு கோணங்களில் மீண்டும் விசாரணையை துவங்கினார்கள்.. அப்போதுதான் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு பல பகீர் தகவல்கள் கிடைத்தன..
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டு
அதாவது, காணாமல் போன அலாவுதீன் வாடகைக்கு கார் ஓட்டி வந்திருக்கிறார்.. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் கார் ஸ்டாண்டில் உள்ள கார்களை வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார்.. இதே பஸ் ஸ்டாண்டில் மேட்டுப்பாளையம், காரமடை நகராட்சி கவுன்சிலர் ரவிக்குமார் என்பவரின் மகன் 33 வயது சரண்குமார் பேக்கரி, டீக்கடையை ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார். ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த
இந்த கடைக்கு அலாவுதீன் அடிக்கடி டீ குடிப்பதற்காக சென்று வருவார்.. சரண்குமார் பேக்கரியில் இல்லாதபோது, அவரது 27 வயது மனைவி பேக்கரியை கவனித்து கொள்வாராம். அப்போதுதான், அலாவுதீனுக்கும், பூஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுவே நாளடைவில் தகாத உறவில் முடிந்துள்ளது.
பேக்கரி கல்லா பணம்
அலாவுதீன் வாடகைக்கார் ஓட்டி வருவதால் பணத்தேவைக்கு கஷ்டப்பட்டு வந்துள்ளார். இதனால் பேக்கரியில் உள்ள கலெக்ஷன் பணத்தை அலாவுதீனுக்காக பூஜா அடிக்கடி எடுத்து தந்துள்ளார்.. பேக்கரியில் உள்ள மொத்த பணத்தையும் எடுத்தால் சந்தேகம் வந்துவிடும் என்பதற்காக, வெளியிலுள்ள பலரிடமிருந்தும் கடன் பெற்று ஜிபே மூலம் அலாவுதீனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஒருகட்டத்தில் பூஜாவின் கள்ளக்காதலும் கல்லாவில் இருந்து பணம் மாயமாவது குறித்தும் அறிந்த சரண்குமார், பூஜாவை கண்டித்துள்ளார்... மேட்டுப்பாளையத்தில் இருந்தால் அலாவுதீனுடன் தொடர்ந்து பழகுவார் என்பதால், பூஜாவை மங்களூருவில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்.
அலாவுதீன் மாயம்
இதற்கு பிறகு 2024 ஏப்ரல் 14ம் தேதி அதாவது அலாவுதீன் மாயமான தினத்தன்று, சரண்குமாரும், அவரது அண்ணன் மணிகண்டன் (35), இவர்களது அப்பா கவுன்சிலர் ரவிக்குமார் ஆகியோர் நேரில் அழைத்து கண்டித்திருக்கிறார்.. அப்போது இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கை கலப்பாகிவிட்டது.
சரண்குமார், மணிகண்டன், ரவிக்குமார் 3 பேரும் சேர்ந்து அலாவுதீனை தாக்கி, கழுத்தை பிடித்து நெரித்து கொன்றுள்ளார்கள்.. பிறகு போலீசில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக அலாவுதீனின் சடலத்தை காரில் எடுத்து சென்று காரமடை சாலையில் உள்ள குட்டையூர் மாதேஸ்வரன் கோவில் பின்பக்கம் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்கள்.
தடயமில்லாமல் தந்தை, மகன்கள்
பிறகு மறுநாள் காலை, மீண்டும் அங்கு சென்று, தீயில் எரியாமல் மிச்சமிருந்த மண்டை ஓடு, எலும்புகளை தடயமேயில்லாமல் மீண்டும் எரித்து விட்டு வந்துள்ளனர்..
இந்த கொலை நடந்து ஒன்றரை வருடங்களுக்கு பிறகு, சமீபத்தில்தான், அலாவுதீனின் மனைவி சுமையாவின் கள்ளக்காதல் அவரது ஆரீஸூக்கு தெரியவந்துள்ளது..
ஒருவேளை தன்னுடைய அண்ணன் காணாமல் போனதற்கு அப்துல்ஹக்கீம் தான் காரணமாக இருக்கும் என்ற சந்தேகத்தில் அவரிடம் விசாரித்துள்ளார்.. அப்போதுதான் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கத்திகுத்து வரை சென்றிருக்கிறது. இதை விசாரிக்க போலீசார் போனபோதுதான், பேக்கரி பூஜாவின் பெயர் அடிபட்டது.
கோவை நகராட்சி கவுன்சிலர்
உடனே மங்களூரில் இருந்து ஊருக்கு வந்திருந்த பூஜாவை, போலீசார் நேரில் வரவழைத்து விசாரித்தபோது, தன்னுடைய கள்ளக்காதல் குறித்தும், கணவர் சரண்குமார் தன்னை கண்டித்ததுடன் அலாவுதீனுடன் தகராறில் ஈடுபட்டதையும் போலீசாரிடம் சொன்னார்.
உடனே போலீசார் சரண்குமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோதுதான், மாயமான அலாவுதீனை தன்னுடைய தந்தை நகராட்சி கவுன்சிலர், மற்றும் சகோதரருடன் சேர்ந்து கொன்றது அம்பலமாகியிருக்கிறது.
இறுதியில் அலாவுதீனை கொலை செய்த சரண்குமார், அவரது அண்ணன் மணிகண்டன், இவர்களது அப்பாவும், நகராட்சி கவுன்சிலருமான ரவிக்குமாரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், கவுன்சிலரே கொலை செய்திருப்பது மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை தந்து வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications