Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாந்தி வருவதாக கூறி 2 பேர் தப்ப முயற்சி.. துப்பாக்கிச்சூடு நடந்தது ஏன்? கோவை கமிஷனரின் பரபர தகவல்

கோவை நீதிமன்ற வளாகம் அருகே நேற்று ஒருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி கோவை மாநகர போலீஸ

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வீட்டுக்கு புறப்பட்ட கோகுல் என்பவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்நிலையில் தான் இருவரும் வாந்தி வருவதாகவும், தலை சுற்றுவதாகவும் கூறி தப்ப முயன்ற நிலையில் அரிவாளால் போலீசாரை தாக்கியது தெரியவந்துள்ளது. இந்த வேளையில் நடந்த பரபரப்பான சம்பவம் குறித்து கோவை மாநகர போலீஸ் ஆணையர் பாலகிருஷ்ணன் முக்கிய தகவல்களை கூறியுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு ஸ்ரீராம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோகுல் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த கோகுல் கோவை 3வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று கையெழுத்திட்டார்.

அதன்பிறகு அவர் தனது நண்பர் மனோஜ் என்பவருடன் அங்கிருந்து புறப்பட்டார். நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் உள்ள டீக்கடைக்கு இருவரும் சென்றனர். அப்போது ஒரு கும்பல் இருவரையும் திடீரென்று வழிமறித்து ஆயுதங்களால் தாக்க முயன்றது.

2 பேர் மீது துப்பாக்கிச்சூடு

2 பேர் மீது துப்பாக்கிச்சூடு

இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் ஓடினர். விரட்டி சென்ற கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியது. இதனால் இருவரும் கீழே சரிந்து விழுந்து துடிதுடித்தனர். இதில் கோகுல் இறந்த நிலையில் மனோஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக தனிப்படைகள் அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் தான் கோகுல் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஜோஸ்வா, கவுதம் ஆகியோர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற நிலையில் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததும் தெரியவந்துள்ளது. காலில் குண்டு காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 கோவை ஆணையர் விளக்கம்

கோவை ஆணையர் விளக்கம்

இந்நிலையில் கோவை மாநகர போலீஸ் ஆணையர் பாலகிருஷ்ணன் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். துப்பாக்கிச்சூடு எதற்காக நடந்தது? அங்கு என்ன நடந்தது? என்பது பற்றி அவர் விரிவாக கூறினார். இதுபற்றி கோவை மாநகர போலீஸ் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது.

குன்னூரில் இருந்து தப்பியோட்டம்

குன்னூரில் இருந்து தப்பியோட்டம்

கோவை நீதிமன்ற வளாகத்தின் அருகே நேற்று கொலை நடந்தது. இந்த வழக்கில் கோகுல் என்பவர் சிலரால் கொலை செய்யப்பட்டார். மனோஜ் என்பவர் தலையில் காயமடைந்தார். அவரது புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கோகுல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஊட்டி குன்னூரில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் குன்னூர் சென்று விசாரித்தனர். அவர்கள் பதுங்கிய இடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கிருந்து அவர்கள் அனைவரும் தப்பித்து சென்றது தெரியவந்தது.

 கோத்தகிரியில் சிக்கிய கும்பல்

கோத்தகிரியில் சிக்கிய கும்பல்

பின்பு ஊட்டியில் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அங்கும் சோதனை செய்யப்பட்டது. அங்கிருந்து அவர்கள் தப்பித்து சென்றனர். இந்த நிலையில் கோத்தகிரிக்கு 4 பைக்குகளில் செல்வதாக தகவல் கிடைத்தது. உடனடியாக நீலகிரி மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கப்பட்டது. இதையடுத்து நீலகிரி மாவட்ட போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது கோத்தகிரிக்கு அருகே பைக்கில் சென்றவர்களை கோத்தகிரி போலீசார் பிடித்து தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 வாந்தி வருவதாக கூறி..

வாந்தி வருவதாக கூறி..

தனிப்படை போலீஸ் எஸ்ஐ முத்து இருளப்பன், யூசுப் உள்பட போலீசார் கோத்தகிரியில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மேட்டுபாளையம் ரோட்டில் வந்தபோது வாந்தி வருவதாகவும், தலை சுற்றுவதாகவும், இயற்கை உபாதை செல்ல வேண்டும் எனவும் கூறினார்கள். இதையடுத்து வாகனம் நிறுத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட ஜோஸ்வா, கவுதம் ஆகியோர் வாகனத்தில் இருந்து இறங்கினர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் தப்பித்து ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர்.

போலீஸ் மீது தாக்குதல்-துப்பாக்கிச்சூடு

போலீஸ் மீது தாக்குதல்-துப்பாக்கிச்சூடு

அப்போது ரோட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் புதரில் பதுக்கி வைத்திருந்த அரிவாளை எடுத்து இருவரும் காவலர் யூசுப்பை தாக்கினர். இதில் யூசுப்பின் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து எஸ்ஐ அவர்களை எச்சரித்தார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. மாறாக போலீசாரை தாக்க முயன்றனர். இதனால் போலீசாரின் பாதுகாப்பு கருதி அவர்களை துப்பாக்கியால் சுட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரின் கால்களிலும் துப்பாக்கியால் சுடப்பட்டது. இருவரின் கால்களிலும் காயம் ஏற்பட்டது. மேட்டுபாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவர்கள் 2 பேரையும் கோவை சிஎம்சியில் அனுமதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கைதானவர்களின் பெயர் விபரம்

கைதானவர்களின் பெயர் விபரம்

இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகள் மற்றும் பொதுமக்கள் எடுத்த வீடியோக்களின் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஜோஸ்வா, கவுதம் ஆகியோர் துப்பாக்கியால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர ஜோஸ்வாவின் சகோதரர் டேனியல், ஹரி என்ற கவுதம், அருண் குமார், பரணி சவுந்தர், சூர்யா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+