அது இஸ்ரோ மையமா.. நூலகமா.. கோவையின் அடையாளத்தையே மாற்றப்போகும் பெரியார் நூலகத்தில் இவ்வளவு வசதிகளா
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு மிக குறுகிய காலமே உள்ளது. அதிமுக பலமாக உள்ள கொங்கு மண்டலத்தில் கோலோச்சுவதற்கு திமுக பல்வேறு அஸ்திரங்களை கையில் எடுத்து வருகிறது. திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு திருப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலேயே தான் அதிக முறை சென்றது கோவை தான் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் காந்திபுரம் பகுதியில் ரூ.300 கோடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் பெரியார் நூலகத்தில் இடம்பெற்றுள்ள வசதிகள் மற்றும் அது எப்போது திறக்கப்படும் என்று அப்டேட் வெளியாகிவுள்ளது.
கோவை மாவட்டம் கல்வி, தொழில், மருத்துவம் ஆகியவற்றில் பெரிய வளர்ச்சியை எட்டி வருகிறது. இதனால் கோவையின் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கோவையின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. விமான நிலையம் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

விமான நிலையம் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஏராளமான மேம்பாலங்களை இறக்கி, கோவை மக்களின் ஆதரவை பெற்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவை மாவட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
கோவை பெரியார் நூலகம்
சமீபத்தில் தான் கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழி பூங்கா திறக்கப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆர்எஸ்புரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைக்கவுள்ளார்.
இதேபோல பெரியார் நூலகம், தங்கநகை பூங்கா, ஐடி பூங்கா உள்ளிட்ட திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒண்டிப்புதூர் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், கோவை மாவட்டத்திற்கு பல சர்ப்ரைஸ்களை அறிவிக்க திமுக திட்டமிட்டுள்ளது.
கோவை காந்திபுரம் பகுதியில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2024 ஆம் ஆண்டு அறிவித்தார். இதற்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறை பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கோவையின் இதய பகுதியான காந்திபுரம் பகுதியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் கட்டிடம் கட்டப்பட்டு் வருகிறது. 1.98 சதுரடி பரப்பளவில் 7 தளங்களில் கட்டுமானம் அமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் விரைவில் நிறைவு செய்யப்பட்டு நூலகம் திறக்கப்படவுள்ளது.
வசதிகள்..
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், "தரை மற்றும் முதல் தளத்தில் அறிவியல் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் பிரிவுகளில் அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோளரங்கம், இன்குபேஷன் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஏழாவது தளத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏஐ, ரோபோடிக்ஸ், விர்சுவல் ரியாலிட்டி குறித்த மையம் உள்ளது. 1.2 லட்சம் புத்தகங்களை பராமரிக்கும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் நூலகம், குழந்தைகள் விளையாட்டு பகுதி, ஆடிட்டோரியம் அமைக்கப்பட்டு வருகிறது. 181 கார்கள், 451 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி் செய்யப்பட்டுள்ளது. விண்வெளிக்கு செல்லும் வடிவத்தில் லிப்ட் அமைக்கப்படுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 30 பேர் செல்லலாம். தற்போதுவரை 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இன்னும் எலக்ட்ரிகல், இன்டீரியர் பணிகள் மட்டுமே மீதமுள்ளன.
பொங்கல் முடிந்ததும்..
வருகிற ஜனவரி 15 ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்." என்றனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பொங்கல் பண்டிகை முடிந்த சில நாட்களில், கோவை பெரியார் நூலகம் திறக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications