Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை டூ கேரளா போறீங்களா.. போக்குவரத்து மாற்றம்.. மரப்பாலம் பிரச்னைக்கு தீர்வு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம், சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மரப்பாலம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்தப் பாலத்தை இடித்துவிட்டு கட்டப்படவுள்ளதால் இன்று (16.5.2025) முதல் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்து காவல்துறை அறிவித்துள்ளது.

கோவை மரப்பாலம் பகுதி என்பது சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. கோவையில் இருந்து கேரளா செல்வதற்கும், கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்துக்குள் நுழைவதற்கும் இந்த வழிதான் பயன்படுத்தப்படுகிறது. அங்குள்ள ரயில்வே பாலத்துக்கு கீழ் உள்ள சிறிய சுரங்கம் வழியாகத்தான் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனம் வரை அனைத்து வாகனங்களும் செல்லும்.

coimbatore-police-announced-traffic-diversion-for-marappalam-work-attention-for-tn-kl-people

இது பிரிட்டிஷ் காலத்தில் மரத்தினால் கட்டப்பட்டது. அதன் காரணமாக தான் மரப்பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. அப்போது அது இரு வழிப்போக்குவரத்தாக இருந்தது. பிறகு அது கான்கிரீட் சுரங்கமாக மாற்றப்பட்டு ஒரு வழிப்போக்குவரத்தாக மாற்றப்பட்டது. அந்த வழியில் தினசரி சராசரியாக 30,000க்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்லும்.

விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதனால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பாலத்தின் அகலம் 5.5 மீட்டர் தான். எனவே ஒரு நேரத்தில் ஒரு வாகனம் தான் செல்ல முடியும். எதிர்புறத்தில் உள்ள வாகனங்கள் அதுவரை காத்திருந்து தான் கடக்க முடியும்.

ஒவ்வொரு நாளும் வேலை, தொழில், கல்வி நிமித்தமாக அந்த வழியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கிறார்கள். யாருக்கும் உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை. பீக் ஹவர்ஸ் மற்றும் விடுமுறை நாட்களில் 1-2 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் வரிசையில் நிற்கும். இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளனார்கள்.

உரிய நேரத்தில் மருத்துவமனை சிகிச்சைக்கு கூட செல்ல முடியாதளவுக்கு மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்கு பயந்தே மக்கள் மதுக்கரை மார்க்கெட் வழியாக 4 கி.மீ தொலைவு சுற்றி சென்று வருகிறார்கள். சாலை மற்றும் சுரங்கத்தை அகலப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இதையடுத்து தற்போதுள்ள சுரங்கத்தை இடித்துவிட்டு புதிய சுரங்கம் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. 9 மீட்டர் அகலத்தில், மொத்தம் இரண்டு பாலம் கட்டி 4 வழிப்போக்குவரத்தாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், கோவை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சேலம்- கொச்சின் தேசிய நெடுஞ்சாலை, மரப்பாலத்தில் அமைந்துள்ள ரயில்வே கீழ்பாலத்தை திரும்பக்கட்டும் பணி நடைபெற உள்ளது. அதனால் 16.05.2025 முதல் கோவையிலிருந்து பாலக்காடு மற்றும் பாலக்காட்டிலிருந்து கோவைக்கு செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் மரப்பாலம் சாலை கீழ் பாலம் வழியாக செல்ல இயலாது.

இந்நிலையில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் நகரப்பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் (ஒருவழிப்பாதை) மதுக்கரை சந்திப்பில் இடது புறம் திரும்பி குவாரி ஆபீஸ் சாலை குரும்பபாளையம் சாலை மதுக்கரை மார்க்கெட் சாலை வழியாக செட்டிபாளையம் பிரிவுக்கு செல்ல வேண்டும்.

கனரக வாகனங்கள் (இருவழிப்பாதை) ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி குறிச்சி, ஈச்சனாரி சாலை வழியாக சென்று (NH 544) சேலம் கொச்சின் சாலையில் கற்பகம் கல்லூரி சந்திப்பில் வலது புறம் திரும்பி செல்ல வேண்டும்.

பள்ளி வாகனங்கள் மற்றும் கல்லூரி வாகனங்கள் (இருவழிப்பாதை) ஆத்துப்பாலம் சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி குறிச்சி கண்ணமநாயக்கனுர் சாலை இடதுபுறம் திரும்பி சேலம் கொச்சின் சாலை சென்று வலதுபுறம் திரும்பி செல்ல வேண்டும்.

தமிழகம், கேரளா ஆகிய இரண்டு மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்துகள் ஆத்துப்பாலம் சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பில் வலது புறம் திரும்பி குறிச்சி கண்ணமநாயக்கனுர் சாலை வலதுபுறம் திரும்பி மதுக்கரை மார்க்கெட் வழியாக செட்டிபாளையம் பிரிவுக்கு செல்ல வேண்டும்.

பாலக்காட்டிலிருந்து கோவை வழியாக வரும் நகரப்பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் (ஒருவழிப்பாதை) செட்டிபாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி விறகுக்கடை பாலம் வழியாக சென்று ஏசிசி தொழிற் சாலை வழியாக செல்லவேண்டும்." என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+