சந்து பொந்திலும் ரோந்து.. புத்தாண்டு கொண்டாட்டம் கோவை போலீஸ் எச்சரிக்கை
கோவை: நாளை இரவு 2025 புத்தாண்டு பிறக்கவுள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளன. இந்நிலையில் கோவை மாநகரில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக காவல்துறை சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் கடைபிடிக்க வேண்டியவற்றை குறிப்பிட்டுள்ளனர்.
2025 புத்தாண்டு நாளை இரவு பிறக்கவுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக கோவை மாநகர காவல்துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “புத்தாண்டு தினத்தையொட்டி கேளிக்கை மற்றும் விருந்துகளுக்கு ஏற்பாடு செய்துள்ள ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், விடுதிகள் மற்றும் உள்ளரங்குகள் ஆகியவற்றின் நிர்வாகங்கள் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் தொடர்பான விஷயங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாவண்ணம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.

வாகனப்போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் மற்றும் அவர்களது சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் தகுந்த பாதுகாப்பு காவலர்களை (Security Guard) நியமிக்க வேண்டும். அதேபோன்று கேளிக்கை விருந்துகளுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்து போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான பொருட்கள், நடமாட்டம் குறித்து தெரியவந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதை தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர் வீட்டிற்கு பாதுகாப்புடன் செல்வதற்கு தேவையான ஓட்டுநருடன் கூடிய (மாற்று) வாகனத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.
புத்தாண்டு தின கேளிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டாளர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை பணி முடிந்ததும் அவர்களின் வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்புவதற்கு தேவையான வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை பரிசோதித்து அவைகள் முழுமையாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைகளுக்கு மேலாக அனுமதிச் சீட்டோ அல்லது கூப்பன்களோ வழங்க கூடாது. புத்தாண்டு விருந்து கொண்டாட்டங்களின் போது அநாகரிகமாவும், ஆபாசத்தன்மையுடனும் கூடிய நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
சட்டவிரோத போதைப் பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அவ்வாறு நிர்வாகம் தடுக்க தவறி அதன் மூலமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மதுஅருந்திவிட்டு பிரச்னை ஏற்படுத்துபவர்கள், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபவர்கள்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், வாகனப் பந்தயத்தில் (Racing) ஈடுபடுபவர்கள், இருசக்கர வாகனங்களில் சைலன்சர்களை நீக்கிவிட்டு அதிக சத்தத்துடனும், ஒலிப்பான்களை ஒலிக்கச்செய்துகொண்டும் வாகனம் ஓட்டுபவர்கள். பொதுமக்கள் நடமாட்டத்திற்கும். வாகனப்போக்குவரத்திற்கும் இடையூறு செய்யும் விதமாக அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அனைத்து மேம்பாலங்களிலும் புத்தாண்டு இரவு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வாகன விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரை மீட்க அண்ணா சிலை, கொடிசியா சந்திப்பு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகில் மற்றும் உக்கடம் ஆத்துப்பாலம் சந்திப்பு ஆகிய இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்படும்.
பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள காலியிடங்கள் மற்றும் திடல்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. மது அருந்துவதை அல்லது பொதுஅமைதிக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக சுற்றுக் காவல் ரோந்து பணி மேற்கொள்ளப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கும் விதமாகவும். பிற குற்றச்செயல்களை தடுக்கும் விதமாகவும் குறிப்பாக செயின் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டும் கோவை மாநகரில் 23 நான்கு சக்கர வாகன ரோந்துகளும் 60 இரு சக்கர வாகன ரோந்துகளும் ரோந்து பணியில் ஈடுபடும்.
அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்கள் உதவிக்கு 04222300970, 9498181213 வாட்ஸ்ஆப் எண் 8190000100 தொடர்பு கொள்ளலாம். பெண்கள் மகளிர் அவசர உதவி எண் 1091 தொடர்பு கொள்ளலாம்.” என்று கூறியுள்ளனர்.
-
கோவையில் கேபிள் டிவியில் ஓடிய விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்.. உரிமையாளரை கைது செய்த போலீஸ் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை!












Click it and Unblock the Notifications