ஓரினசேர்க்கை செயலி.. ஆண்களை தனியாக அழைத்து உல்லாசம்.. நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல் கைது
கோவை: மொபைல் ஆப் மூலம் ஆண்களை ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கும் கும்பல், அவர்களை நிர்வாணபடுத்தி வீடியோ எடுப்பதும், சமூகவலைதளங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இது தொடர்பாக இரண்டு கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ள போலீசார் மேலும் ஒரு மாணவனை வலைவீசி தேடி வருகின்றனர். கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (34).
இவர் கோவையிலுள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார். கங்காதரன் தன்னுடைய செல்போனில் ஓரினைச் சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் (BLUED APP) செயலி ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார்.

ஓரின சேர்க்கையாளர்களுக்கான செயலி
இந்நிலையில் கடந்த மார்ச் 27-ம் தேதி இந்த செயலி மூலம் கங்காதரனை தொடர்பு கொண்ட பிரசாந்த், ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார். சாய்பாபா காலனி பகுதியிலுள்ள தனியார் மருத்துவனையின் பின்புறம் உள்ள ரயில்பாதை அருகே பிரசாந்த், தனது நண்பர்களான நிசாந்த் மற்றும் மாணிக்கம் ஆகியோரையும் உடன் அழைத்து சென்றுள்ளார்.

கங்காதரன்- பிரசாந்த்
நள்ளிரவு 2.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த கங்காதரன்- பிரசாந்த் இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது, அதை மறைந்திருந்த நிசாந்த் மற்றும் மாணிக்கம் இருவரும் வீடியோ பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டிய மூவரும், கங்காதரனை தாக்கியதாக தெரிகிறது.

மிரட்டி பணம் பறித்த கும்பல்
பின்னர் கையிலிருந்த 2500 ரூபாய் ரொக்கம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசில் தெரிவித்தால் வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் அச்சத்தில் இருந்த கங்காதரன் சம்பவம் தொடர்பாக நேற்று சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மூன்று இளைஞர்கள் மீது வழக்கு
அதன் பேரில் 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்), 397 (கொலை அல்லது கொடூரமான காயத்தை ஏற்படுத்தும் முயற்சியுடன் கொள்ளை அல்லது கொள்ளை) மற்றும் 506 (ii) (மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு பதிவு செய்த போலீசார் மூன்று இளைஞர்களையும் வலைவீசி தேடி வந்தனர்.

இருவர் கைது ஒருவருக்கு வலை
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரசாந்த் மற்றும் நிசாந்த் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள போலீஸார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான மாணிக்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

விசாரணையில் திடுக் தகவல்
போலீசார் இருவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் சிவானந்தா காலனி பகுதியைச் பிரசாந்த் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரியிலும், நிசாந்த் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

3 மாணவர்கள்
மூன்று மாணவர்களும் இணைந்து பிரபல ஒரின சேர்க்கையாளர்களுக்கான டேட்டிங் செயலி மூலம் ஆண்களை குறிவைத்து ஓரின சேர்க்கைகு அழைத்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டதோடு அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

10 க்கு மேற்பட்டோரிடம் பணம் பறிப்பு
இதுவரை பத்துக்கும் மேற்பட்டோரை, இதேபோன்று ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து மிரட்டி பணம் பறித்து உள்ளதாகவும், கடந்த மார்ச் 9-ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த மருந்தாளுநரிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் செல்போனை பறித்துள்ளதும் போலீஸார் நடத்திய விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications