அப்பார்ட்மென்ட் டார்கெட்.. ஆட்டோ பயணம்.. கோவை அடுக்குமாடி குடியிருப்பு கொள்ளை பின்னணி
கோவை: கோவை மாநகர் கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஒரே நேரத்தில் 12 வீடுகளில் புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் காவல்துறையினர் மூன்று பேரை சுட்டுப் பிடித்ததுள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள், எதற்காக கோவை வந்தனர், இந்த கொள்ளை சம்பவத்திற்கு எப்படி திட்டமிட்டனர் என்பது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

துணி வியாபாரம்
விசாரணையில் அவர்கள் குனியமுத்தூர் பகுதியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு காவல்துறை சென்றபோது குற்றவாளிகள் காவல்துறையினரை தாக்க முயற்சி செய்தனர். இதில் ஒரு காவலருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. எனவே தற்காப்பிற்காக குற்றவாளிகளை சுட்டுப் பிடித்துள்ளோம். இதுதொடர்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இர்ஃபான், கள்ளு ஆரிஃப், ஆசிஃப் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குனியமுத்தூர் பகுதியில் 12 பேர் வீடு எடுத்து தங்கி அலுமினிய பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்கள். அவர்களுடன் இந்த மூன்று பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்து தங்கியுள்ளனர். துணி வியாபாரம் செய்வதாக சொல்லி தங்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 42 பவுன் தங்க நகை, 34 கிராம் கவரிங், 500 கிராம் வெள்ளி, ரூ.1.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3 மணி நேரத்தில் சம்பவம்
அவர்களின் குற்ற பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகளின் கைரேகைகளை சேகரிக்கப்பட்டு, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளோம். கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகமான குடியிருப்புகள் இருந்ததால் அங்கு சென்றுள்ளனர். 3 மணி நேரத்தில் திருடிவிட்டு தப்பியுள்ளனர்.
உள்ளூர் குற்றவாளிகள் யாரேனும் இவர்களுக்கு உதவியுள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றவாளிகள் மூன்று பேரும் ஒரு நாள் முழுவதும் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் குற்றவாளிகளை பிடித்துள்ளோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் துப்பாக்கியை பயன்படுத்தினோம்.
சிசிடிவி கேமரா
இந்த சம்பவத்தில் பார்த்திபன் என்ற காவலருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நன்றாக இருக்கிறார். குடியிருப்பில் காவலாளிகள் இருக்கும்போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கவுண்டம்பாளையம் குடியிருப்பு நிர்வாகிகளிடம் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்." என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications