1 கிராம் 2,500 ரூபாய்.. குறிவைக்கப்படும் கோவை IT இளைஞர்கள்.. போதைப் பொருள் கும்பலை கைது செய்த போலீஸ்
கோவை: கோவையில் IT ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயர் ரக போதைப் பொருளான மெத்தபெட்டமைன் போதைப் பொருளை விற்பனை செய்த கும்பலை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் புழக்கம் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மெத்தபெட்டமைன் போதைப் பொருள், கஞ்சா, கஞ்சா ஆயில், கஞ்சா சாக்லேட், போதை ஊசி, போதை மாத்திரைகள் என பல்வேறு வகையிலான போதைப் பொருள்கள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் புறநகர்ப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், ஐடி இளைஞர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் கோவையில் புறநகர்ப் பகுதிகள் மற்றும் வாடகைக்கு தங்கியிருக்கும் மாணவர்கள், இளைஞர்களின் அறைகள், விடுதிகள் போன்றவற்றில் போலீஸார் அடிக்கடி அதிரடி சோதனை மேற்கொண்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும், கோவையில் போதைப் பொருள் கும்பலின் அட்டூழியம் குறைந்தபாடில்லை. இதனால், பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கோவைக்கு ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் போதை மாத்திரைகளை கடத்தி விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து 1,556 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோவை மாநகர காவல் துறையினருக்கு போதைப் பொருள் விற்பனை குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில், கோவை மாநகர காவல் துணை ஆணையர் உதயகுமார் தலைமையில், துணை ஆணையர், தனிப்படை போலீஸார், கோவை மாநகர மதுவிலக்கு பிரிவு போலீஸார் இணைந்து நேற்று சுமார் மாலை கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டிற்குள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பேருந்து நிலையத்திற்குள் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகில் வைத்து மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த கோவை, ராமநாதபுரம் புளியகுளம் அம்மன் குளத்தைச் சேர்ந்த கோபிநாத் (27) மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மிதலாஜ் ,விக்னேஷ், அஜித், ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து மொத்தம் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 195 கிராம் மெத்தப்பட்டமைன் போதைப் பொருள் மற்றும் பணம் 15,500 ரூபாய், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள் மீது மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.
பெங்களூரில் இருந்து மொத்தமாக மெத்தபெட்டமைன் போதை பொருளை வாங்கி இங்கு வந்து விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது ஏற்கனவே விசாகப்பட்டினம் மற்றும் கோவையில் கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications