இந்தியன் தாத்தா மாதிரி பைக் ஓட்ட போகும் கோவை போலீஸ்.. சிறிய தெருக்களில் வரப்போகும் ‘டிரைக் பைக்’
கோவை: கோவை மாநகரில் சிறிய தெருக்களில் போலீசார் ரோந்துப் பணியை மேற்கொள்ள 'டிரைக் பைக்' என்ற அதிநவீன வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தில் எப்படி இந்தியன் தாத்தா ஒரு வாகனத்தில் செல்வாரோ அதே பாணியில் வாகனம் இருப்பதாக இந்த வாகனத்தை பற்றி நெட்டிசன்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த பைக் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
கோவை மாநகரம் சென்னைக்கு அடுத்தபடியாக மிகவேகமாக வளர்ந்து வரும் நகரம் ஆகும். 90களில் ஸ்பின்னிங்க் மில்களும், தறி மில்களும் அதிக அளவில் இயங்கி வந்த கோவை, ஒரு காலக்கட்டத்தில் தொழிலாளர்களின் நகரமாக இயங்கி வந்தது. இன்று கோவை மாநகரம் மிகப்பெரிய வளர்ந்துவிட்டதால் ஏராளமான தொழிற்சாலைகள் கோவை நகரில் இருந்து வெளியேறி புறநகர் பகுதிகளுக்கு போய் விட்டன. பல புதிய நிறுவனங்களுமே புறநகர் பகுதிகளிலேயே செயல்படுகின்றன. கோவை முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளும், வீடுகளும் கடந்த 20 வருடங்களில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்து விட்டது.

தொழிற்சாலைகள் இருந்த இடங்கள் மால்களாக மாறி உள்ளன. பல சிறிய நிறுவனங்கள் இருந்த இடம் எல்லாமே முழுமையாக குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன. கோவை மாநகரம் உக்கடத்தில் தொடங்கி நீலாம்பூர் வரை அவினாசி சாலையில் நகரமாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. இதேபோல் திருச்சி சாலையில் சூலூர் வரையிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொண்டாமுத்தூர் வரையிலும் நகரம் விரிவடைந்துவிட்டது.
கோவையில் சிறிய தெருக்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ள கோவை மாநகர காவல்துறையினர் புதுவகை வாகனத்தை அறிமுகம் செய்தனர்"டிரைக் பைக்" காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவர்கள் ஆய்வு .@ipspolicetn @policecbecity @NewsTamilTV24x7 pic.twitter.com/ONDt1p2tmN
— pari (@Pari8889) August 14, 2024
பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி வரையிலும், பாலக்காடு சாலையில் மதுக்கரை வரையிலும், மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை வரையிலும், சத்தி சாலையில் கோவில்பாளையம் வரையிலும் கோவை மாநகரம் வளர்ந்துவிட்டது. ஆனால் கோவை மாநகராட்சி பகுதி என்பது கோவையின் 100 வார்டுகள் மட்டுமே உள்ளன. இங்கு சுமார் 7000 தெருக்கள் உள்ளன. இதில் பலத்தெருக்கள் மிகவும் குறுகலானவையாகவும் உள்ளன. இந்த தெருக்களில் போலீசார் ரோந்துப் பணியை மேற்கொள்ள 'டிரைக் பைக்' என்ற அதிநவீன வாகனம் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் "டிரைக் பைக்" இந்த பைக்கில் ஏறி ஆய்வு செய்து தொடங்கி வைத்தார். இருசக்கர வாகனம் போல் இல்லாமல் ஆட்டோவில் பாடி இல்லாமல் இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் டிரைக் பைக் இருக்கிறது. மூன்று சக்கரம் உள்ள இந்த வாகனத்தை சிறிய தெருக்களில் எளிதாக ஓட்டிச் செல்ல முடியும். எலக்ட்ரிக் வாகனமாக உள்ள இந்த வாகனத்தில் போலீசார் இனி ஆய்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications