கோவையில் படர்ந்த தாமரை.. "அரசியலில் இருக்கணுமா"னு தோணுது.. அண்ணாமலை சொன்னதுமே திகைத்த கோயம்புத்தூர்

Subscribe to Oneindia Tamil

கோவை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், கோவையில் ஒருஇடம் மிச்சமில்லாமல், சல்லடை சல்லடையாய் பாஜக மாநில அண்ணாமலை பிரச்சாரம் செய்திருந்தார்.. ஆனாலும் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இந்நிலையில், கோவையில் அடைந்த தோல்வி குறித்து அண்ணாமலை தற்போது கருத்து கூறியிருக்கிறார்.

கோவை துடியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசும்போது, கோவையில் அதிக வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து அண்ணாமலை பேசியதாவது:

Coimbatore Kovai Annamalai

தலைவர் பதவி: "பல நேரத்தில் நான் யோசிப்பேன், இந்த அரசியலில் நான் இருக்கணுமா? எனக்கு இப்போது 40 வயதாகிவிட்டது. இந்த 3 ஆண்டுகளாகத்தான் கஷ்டப்பட்டுதான் தலைவர் பதவியில் உட்கார்ந்திருக்கேன். எதற்கும் ரியாக்சன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். அரசியலில் இருக்கணுமா? என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது.

ஒரு சாதாரண மனிதனைபோல எதையும் பேச முடியவில்லை.. எதையும் எடுத்தெறிந்தும் பேச முடியவில்லை.. சாதாரண மனிதனை போல கருப்பு, வெள்ளை என்று பார்க்க முடியாது.. ஒரு சாதாரண மனிதனை போல, இவன் சரி, இவன் தவறு என்று எதையும் கூற முடியவில்லை.

பொறுமை முக்கியம்: நம்மை தவறாக புரிந்துகொண்டு யாராவது, ஏதாவதுசொன்னால்கூட பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.. ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்ல முடியவில்லை..

நம்மை பற்றி அபாண்டமான குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளில் வந்தால், அதை படித்துவிட்டு, ரியாக்ட் எதுவுமே செய்யக்கூடாது.. இன்றைக்கு அரசியலுக்கு வரக்கூடியவர்கள், பாஜகவில் சேர்க்கக்கூடியவர்களுக்கு வைக்கக்கூடிய முதல் பரீட்சையே இதுதான்.. பாஜகவில் சேர பொறுமை, சகிப்புத்தன்மை, சமரசம் ஆகிய மூன்றும் அவசியம்.. பாஜக தேசத்தை ஒருமைப்படுத்தும் கட்சி. எந்த கட்சிக்கும் இல்லாத ஆன்மா பாஜகவிற்கு உள்ளது.

குறைபாடுகள்: பாஜகவை பலர் குறை சொல்வார்கள்.. அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும். மற்றொருபுறம் பிரச்சனைகளை கையாள வேண்டும். எதிர்க்கட்சிகளை சமாளிக்க வேண்டும்.. மணிப்பூரில் நடந்த தாக்குதல் உயிரிழப்புகளை பார்த்தால், 2004-லிருந்து 2014வரையும், 2014-லிருந்து 2024வரைஒப்பிட்டு பார்த்தால், காங்கிரஸ் ஆட்சியைவிட, பாஜக ஆட்சியில் குறைவுதான்.. 10-ல் ஒன்றுதான் நடந்திருக்கும். ஆனால், இதை ட்விஸ்ட் செய்து சொல்கிறார்கள்.. இதையும் பொறுமையாக கடந்து செல்ல வேண்டியிருக்கிறது.

எதிர்க்கட்சிகள்: அதேபோல எந்த சட்டம் கொண்டுவந்தாலும், அதையும் எதிர்க்கட்சிகள் மாற்றிதான் சொல்வார்கள்.. அதையும் கடந்து போக வேண்டியிருக்கிறது..

உதாரணத்துக்கு சட்டப்பிரிவு 370 எடுத்துக் கொள்ளுங்கள்.. முதன்முதலில் ராஜ்ய சபாவில் தான் கொண்டுவந்தார்கள்.. இத்தனைக்கும் ராஜ்ய சபாவில் நமக்கு மெஜாரிட்டி இல்லை.. அப்படியிருந்தும் ராஜ்யசபாவிலிருந்தே லோக்சபாவுக்கு சென்றது. மோடிஜியின் வாழ்க்கையை உன்னிப்பாக கவனித்து பார்த்தால், இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் அவரது பயணம் உள்ளது.

தமிழ்நாட்டில் பாஜகவின் வேர்களை நாம் வலுவாக்கிக் கொண்டிருக்கிறோம். எந்த கட்சிக்கும் இல்லாத ஒரு ஆன்மா பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. காரணம் இந்த கட்சிக்காக தங்கள் சொத்துக்களை இழந்த தலைவர்கள் ஏராளம். இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்ககூடியவர்கள் பாஜகவினர்.

கடந்த தேர்தலில் 8,000 பூத்களில் பாஜக முதலிடம் பெற்றிருக்கிறது.. அதனாலேயே இந்த வேர் வலுவாகிறது. கோவையில் பாஜக தோல்வி அடைந்தது என்று பார்க்காதீர்கள்.. நம்முடைய வெற்றி கொஞ்சம் தள்ளிபோய் இருக்கிறது என்று பாருங்கள்..

கோவை : இதை நாம் ஒரு ஆன்மீக பயணமாக எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பைசாகூடு வாக்காளர்களுக்கு பணம் தராமல், நேரடியாக வே மக்களை சந்தித்து, அவர்களின் வாக்குகளை இனி பெற வேண்டும். கோவையில் இப்போது கிடைத்திருக்கக்கூடிய 4 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் நமக்கு மிக முக்கியமானது. இந்த வாக்குகள் நமக்கு பெருத்த நம்பிக்கையையே தந்துள்ளது" என்றார் அண்ணாமலை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+