பொள்ளாச்சி ரோட்டில் "அது" பக்கத்திலேயே உட்கார்ந்துட்ட பெயிண்டர்! கோவை சாக்கடைக்குள் ஸ்வேதா பட்ட பாடு
கோவை: கோவை மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே குடும்ப வன்முறைகள் அதிகரித்தபடியே உள்ளன. கணவன் மனைவிக்குள் எழும் தகராறுகள், அதையொட்டிய கொலைகள், தற்கொலைகள், விவாகரத்துகள் என பெருகி வருகின்றன.. இதற்கு பெரும்பாலும் கள்ளக்காதல், சந்தேகம், புரிதல் குறைபாடுகள் காரணமாக உள்ளதாக மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்து, அம்மாவட்ட மக்களை பதற வைத்து வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ளது மரப்பேட்டை என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் பாரதி என்பவருக்கு 27 வயதாகிறது.. இவர் பெயிண்ட்டராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் சுவேதா.. அவருக்கு 26 வயதாகிறது..

பாரதியும், சுவேதாவும் 9 வருடங்களுக்கு முன்பே தீவிரமாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. இவர்களுக்கு தற்போது கிரேஷ்(9), கேப்ரியல்(7) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
கோவை பொள்ளாச்சி ரோடு
குடும்ப சூழ்நிலைக்காக அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கடையில் சுவேதா வேலை செய்து வருகிறார்.. ஆனால், சுவேதாவின் நடத்தையில் பாரதிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.. இந்த சந்தேகம் தம்பதிக்குள் தகராறாக வெடித்து வந்துள்ளது..
தினந்தோறும் இருவருக்குள்ளும் சண்டை வெடித்து வந்ததால், ஸ்வேதா மனம் வெறுப்படைந்து கணவனை பிரிந்து வாழ முடிவு செய்தார்.. இதற்காக ஏபிடி ரோட்டில் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து குழந்தைகளுடன் சுவேதா அங்கு வசித்து வருகிறார்.. குழந்தைகளும் அங்குள்ள பள்ளியிலேயே படித்து வருகிறார்கள்.
காதல் தம்பதி
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் குழந்தைகளை அழைத்து சென்று ஸ்கூலில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார்.. உடனடியாக தான் வேலை பார்க்கும் கடைக்கு கிளம்பி சென்றார்.. அப்போது தெருவில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த பாரதி, ஸ்வேதாவை வழிமறித்து நிறுத்தியிருக்கிறார்.
தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு ஸ்வேதாவை அழைத்திருக்கிறார் போலும்.. ஆனால், அதற்கு சுவேதா மறுத்துள்ளார்.. உடனே மறுபடியும் தெருவிலேயே வாக்குவாதம் வெடித்துள்ளது.. பிறகு கடைக்கு நேரமாவதால், அங்கிருந்து சுவேதா புறப்பட்டு சென்றார். ஆனாலும் பாரதி விடவில்லை..
ஸ்வேதாவை விரட்டிய பாரதி
ஸ்வேதாவை விரட்டியபடியே சென்று தகராறு செய்தார்.. பிறகு ஆவேசமடைந்து மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து, சுவேதாவை குத்த முயன்றார்.. கத்தியை பார்த்ததுமே அதிர்ச்சியடைந்த ஸ்வேதா, கத்தி கூச்சலிட்டார்.. அவரது கதறலை கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்து பாரதியை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றார்..
ஆனால் பாரதியோ எதற்கும் அசராமல், யாராவது கிட்ட வந்தால், குத்தி கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார்..
கத்தியுடன் ஆக்ரோஷமாக நின்ற பாரதியை கண்டு பயந்துபோன பொதுமக்களும், அவரிடம் செல்லவில்லை.. எனவே உடனடியாக பொள்ளாச்சி போலீசுக்கு உடனே தகவல் அளித்தனர்.. ஆனால், ஆவேசம் அடங்காமல் இருந்த பாரதி, கண்ணிமைக்கும் நேரத்தில் சுவேதாவின் உடலில் சரமாரியாக குத்தினார்..
சாக்கடைக்குள் ஸ்வேதா
இதில் வலி தாங்க முடியாமல் சுவேதா, ரத்த வெள்ளத்தில் அங்கேயே விழுந்து துடிதுடித்தார்.. அப்போதும் ஸ்வேதா மீதான ஆத்திரம் அடங்காத பாரதி, உயிருக்கு போராடி கொண்டிருந்த ஸ்வேதாவை, பக்கத்திலிருந்த சாக்கடைக்குள் தள்ளினார்.. அப்போதும் ஆவேசம் அடங்காமல், அவரது கழுத்தை நெரித்தார்.. பிறகு தன்னுடைய கால்களால் கழுத்தை முறித்தார்.. சில நிமிடங்களிலேயே ஸ்வேதாவின் மூச்சு அடங்கியது..
பிறகு சாக்கடைக்குள்ளிருந்த ஸ்வேதாவின் சடலத்தை எடுத்து, சாலையில் கொண்டு வந்து போட்டுவிட்டு, அங்கேயே நின்று கொண்டிருந்தார்... பிறகு சடலம் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டார்.. அதற்குள் போலீசார் விரைந்து வந்து பாரதியை பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்..
அப்போது ஸ்வேதாவின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் தந்தார்.. பிறகு போலீசார் சுவேதாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கோவை சிங்காநல்லூரில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது கைது செய்யப்பட்ட பாரதியிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications