கோவையில் ஸ்பாவில் விபச்சாரம்.. ரெஸ்டோபார், பப்களில் இப்படியா? இனிமேல் இன்ஸ்பெக்டர் மீதும் நடவடிக்கை?
கோவை: கோவை மாநகரில் ஸ்பா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தவண்ணம் உள்ளது.. அத்துடன் சில ரெஸ்டோ பார்கள், பப்களில் பெண்களுக்கு பாலியல் குற்றங்கள் இழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கோவை துணை கமிஷனர் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் சமீப காலமாகவே, பாலியல் தொழில் அதிகளவு நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. சர்வதேச புரோக்கர்களின் நெட்வொர்க்குடன் ஸ்டார் ஹோட்டல்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.. இதற்காக, உள்ளூர் தொடங்கி வெளி மாநில மற்றும் வெளி நாட்டு பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள்.

ஸ்பா: அதேபோல, நட்சத்திர விடுதிகள், ஸ்பா, மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதைக்கட்டுப்படுத்த துணை கமிஷனர்கள் தலைமையில் செயல்படும் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சில முக்கிய டீம்களை ஏற்கனவே கைது செய்துள்ளது.
கடந்த வாரம்கூட, கோவை ஸ்டார் ஹோட்டல் ஸ்பாவில் பகிரங்கமாக நடைபெற்ற பாலியல் தொழில் வழக்கில் 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், ஒருசில இடங்களில் விபச்சாரம் நடப்பது போலீசாருக்கு தெரிந்திருந்தும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக துணை கமிஷனர் தேவநாதனுக்கு தகவல் சென்றது..
எச்சரிக்கை: அதுமட்டுமல்ல, ரெஸ்டோ பார், பப்களிலும் பாலியல் குற்றங்களும் நடப்பதாகவும், ரெஸ்டோ பார்கள், பப்களில் பெண்களுக்கு இலவசமாக மது அளிப்பதாகவும், இதனால், மது போதையில் இருக்கும் பெண்களை பாலியில் துன்புறுத்தல் செய்வதாகவும் கூறப்படுகிறது.
இதற்குதான், கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன், கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.. ''கோவை மாநகரில் விபச்சாரம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை வேரோடு அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விபச்சாரம் நடைபெறும் இடங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது. இதற்கு துணை போகும் போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..
கன்ட்ரோல் ரூம்: ஒரு சில இடங்களில், சிலர் பணம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் புகார் வந்துள்ளது.. அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சமீபத்தில் 3 போலீசார் கன்ட்ரோல் ரூமுக்கு மாற்றப்பட்டனர். இதேபோல் எந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபச்சாரம் நடக்கிறதோ அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று எச்சரித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications