கோவையில் நள்ளிரவில் தெருநாய்களை குறிவைத்து செக்ஸ் டார்ச்சர்.. கையும், களவுமாகப் பிடித்த மக்கள்
கோவை: கோவை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடங்கி ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற கார் விரட்டப்பட்டது, கோவையில் கல்லூரி மாணவிக்கு சாலையில் முத்தம் கொடுத்து அத்துமீறிய இளைஞர் என்று பல சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கோவையில் தெருநாய்க்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த சைகோவை மக்கள் பிடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பிலும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம், கிட்டம்பாளையம் அருகே உள்ள மங்கல் கரைபுதூரில் டெம்புள் டவுன் என்ற குடியிருப்புப் பகுதி உள்ளது. அங்கு ஒரு நபர் தெரு நாய்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் காரமடை காவல் ஆய்வாளரிடம் அளித்துள்ள புகாரில், "நேற்று இரவு இங்கு ஒரு நபர் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றி வந்தார். அவரிடம் பேசியபோது, தன்னுடைய பெயர் மாதேஸ்.. இங்கு கட்டிட வேலை பார்க்க வந்துள்ளேன் என்று கூறினார். அவரின் நடவடிக்கையை கண்காணித்தபோது அவர் குடிபோதையில் தெரு நாய்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தது தெரியவந்தது.
இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறோம். அந்த நபரின் செயல் இங்கு குடியிருக்கும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மேற்கொண்டு இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்." என்று கூறியிருந்தனர்.
இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், "இரவு சத்தம் கேட்டதால் வெளியில் சென்று பார்த்தோம். அப்போது அந்த நபர் ஒரு நாயை இழுத்து வந்து கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்தபோது கட்டிடத்தில் வேலை பார்ப்பதாக கூறினார். இது குடியிருப்புப் பகுதி இந்த நேரத்தில் எல்லாம் சுத்தக் கூடாது என்று கூறினோம்.
அந்த நபரும் சென்றுவிட்டார். ஆனால் அவரின் கையில் அப்போது முழுவதுமாக எண்ணெய் போட்டிருந்தார். பொதுவாக திருடர்கள் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக கைகளில் எண்ணெய் போடுவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். அதனால் எங்களுக்கு சந்தேகமாகவே இருந்தது. நாங்கள் வீட்டுக்கு சென்றபோது நாய் அழுகும் சத்தம் கேட்டது.
நாங்கள் அங்கு சென்ற பார்த்தபோது அந்த நபர் நாய்க்கு செக்ஸ் டார்ச்சர் செய்ததை கண்களால் பார்த்தோம். எங்களைப் பார்த்தவுடன் அந்த நபர் உள்ளாடைகளை சரிசெய்துவிட்டு தப்பிக்க பார்த்தார்.நாங்கள் அவரை கையும், களவுமாக பிடித்துவிட்டோம். நேற்று மட்டுமல்ல அவர் இதேபோல பல நாட்கள், தெருவில் உள்ள பல நாய்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் எங்கெங்கோ நடக்கிறது என்று கேள்விபட்டோம். கடைசியில் அது எங்கள் பகுதியில் நடப்பதை ஏற்க முடியவில்லை. இங்கு ஏராளமான பெண்கள், பெண் குழந்தைகள் இருக்கிறோம். நாயாக இருந்தாலும் கடந்து செல்ல முடியவில்லை. அந்த இடத்தில் நாயை எங்கள் குழந்தை போல தான் பார்த்தோம். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.
மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், விலங்குகள் நல ஆர்வலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். தொடர்ந்து அந்த நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications