Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இருகூர்- போத்தனூர் இரட்டை ரயில் பாதை.. கோவை அடியோடு மாறுது.. மத்திய அரசு அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையை பொறுத்தவரை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக இருக்கிறது. கோவை சந்திப்பு ரயில் நிலையம், போத்தனூர் ரயில் நிலையம் என இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. சேலம் ரயில்வே கோட்டத்தில் வருவாயை அள்ளித்தரும் ரயில் நிலையமாக கோவை இருக்கிறது. கோவை தொழில்நகரம் மட்டுமல்ல.. கேரளாவின் நுழைவு வாயிலாகவும் இருக்கிறது. கேரளா செல்ல இருகூர், போத்தனூர் வழியாக தனி ரயில் பாதையே உள்ளது. இதில் இருகூர், போத்தனூர் இடைய ஒற்றை பாதை தான் உள்ளது. இதனை இருவழிப்பாதையாக மாற்ற ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

கோவை ரயில் நிலையம் என்பது 150 ஆண்டுகளுக்கு முன்பே உருவானது ஆகும். 1873ம் ஆண்டேஉருவான மிக பழமையான ரயில் நிலையம் ஆகும். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம், இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நகரங்களில் ஒன்று, இந்தியாவில் மிக வேகமாக வளரும் டயர் 2 நகரங்களில் முக்கியமான நகரமாக கோவை இருக்கிறது.

Coimbatore public happy as central government approves Two-lane tracks between irugur and Podanur

மாணவர்கள் விரும்பும் கோவை

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்பதால், பலரும் வேலை தேடி கோவைக்கு தினமும் வருகிறார்கள். பல மாணவ, மாணவியர் படிக்க தேர்வு செய்யும் நகரம் கோவையாக இருக்கிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் உயர்கல்வி படிக்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள். கேரளாவின் நுழைவு வாயிலாக இருப்பதால், கேரள வணிகர்களுக்கும் முக்கியமான நகரமாக கோவை இருக்கிறது. இதனால் தினமும் பல ஆயிரம் பேர் ரயில்களில் வந்து செல்கிறார்கள்.

கேரளா செல்லும் ரயில்கள்

இதுதவிர கோவை செல்லும் ரயில்களை தாண்டி, கேரளா செல்லும் அனைத்து ரயில்களுமே கோவை வழியாகவே செல்கின்றன. இதனால் கோவை ரயில் நிலையத்திற்கு ஏராளமான ரயில்கள் வந்து செல்கின்றன. இதனால் ரயில்களை நிறுத்தி வைக்க போதிய வசதிகள் இருப்பது இல்லை.. இதனால் தற்போது மத்திய அரசு கோவையில் உள்ள வடகோவை, போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களை மேம்படுத்தி வருகிறது.

கோவை சந்திப்பு ரயில் நிலையம்

இடநெருக்கடி அதிகமாக இருப்பதால் கோவை ரயில் நிலையதிற்கு வரும் ரயில்கள் கோவை சந்திப்பு ரயில் நிலையம் வராமல், நேராக இருகூரில் இருந்து போத்தனூர் வழியாக தனி ரயில் பாதை உள்ளது. இதுதான் கேரளாவிற்கான பிரதான ரயில் பாதையாக இருக்கிறது. ஆனால் ஒருவழிப்பாதை என்பதால் அதிக ரயில்கள் வந்து செல்ல முடிவது இல்லை.. எனவே ரயில் பயணிகள் இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார்கள்.

ரயில்கள் காத்திருக்கின்றன

ஏனெனில் இருகூரில் இருந்து போத்தனூர் செல்லும் வழித்தடம் ஒற்றைப்பாதையாக இருப்பதால், ஒரு ரயில் கடந்து செல்லும் வரை எதிரே வரும் இரயில்கள் இருகூரிலோ அல்லது போத்தனூரிலோ நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இது பயண நேரத்தை அதிகரிப்பதோடு, ரயில்வே கால அட்டவணையை பராமரிப்பதிலும் சிக்கலை தொடர்ந்து ஏற்படுகிறது.

கேரள மாநில ரயில்களின் வருகை

கேரளாவிலிருந்து பாலக்காடு வழியாக வரும் பெரும்பாலான இரயில்கள் போத்தனூர் வழியாகத்தான் இருகூர் சென்று, பின்னர் வட மாநிலங்களுக்குச் சென்று வந்தன. இந்த முக்கியமான இணைப்புப் பாதையில் இருவழிப்பாதை இல்லை. இதனால் சில ரயில்கள் கோவை மெயின் ரயில் நிலையத்தை அடைந்து தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்தை மந்தமாக்குகிறது.

கோவை சந்திப்பு நெரிசலைத் தவிர்க்க

கோவை சந்திப்பு இரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருப்பதால், அனைத்து இரயில்களையும் அங்கு கொண்டு செல்வது கடினமாக இருக்கிறது. இருகூர் - போத்தனூர் இருவழிப்பாதை அமைக்கப்பட்டால், கோவை சந்திப்பிற்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத ரயில்களை விரைவாக இயக்க அதிகரிகளால் முடியும். இது கோவை சந்திப்பில் நிலவும் பிளாட்பார்ம் தட்டுப்பாட்டைப் போக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேட்டுப்பாளையம் மற்றும் வட கோவைக்கான இணைப்பு

வடக்கு கோயம்புத்தூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் ரயில்களுக்கு இந்த வழித்தடம் ஒரு முதுகெலும்பாக அமையும். இருவழிப்பாதை அமைப்பதன் மூலம், சரக்கு ரயில்களின் போக்குவரத்தும் எளிதாகும், இதனால் தொழில் நகரமான கோவையின் வணிகம் மேம்படும்.

போத்தனூர் ரயில் நிலையத்தின் முக்கியத்துவம்

மத்திய அரசு போத்தனூர் இரயில் நிலையத்தை அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தி வருகிறது. போத்தனூரை கோவையின் இரண்டாவது முக்கிய முனையமாக மாற்ற வேண்டும் என்றால், அதற்கு இருகூர் - போத்தனூர் இடையிலான இருவழிப்பாதை மிக அடிப்படையான தேவையாக உள்ளது. எனவே சுமார் 11 கிலோமீட்டர் தொலைவுள்ள இந்த வழித்தடத்தை இருவழிப்பாதையாக மாற்றினால், கோவையில் இருந்து பெங்களூரு, சென்னை மற்றும் கேரளா செல்லும் இரயில்களின் வேகம் அதிகரிக்கும். இதுதான் எதார்த்தமான உண்மையாகும்.

எல் முருகன் நன்றி

இது தொடர்பாக பலரும் கோரிக்கை வைத்தார்கள். மத்திய அமைச்சர் எல் முருகன் ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து 277.42 கோடி ரூபாயில் 10.77 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இருகூர்-போத்தனூர் இருவழி ரயில்வே பாதை திட்டத்திற்கு மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளற்காக பிரதமர் மோடிக்கும், ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவிற்கும், மத்திய இணையமைச்சர் எல் முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+