மொத்தமாக மாற போகுது கோவை ரயில் நிலையம்! மேஜர் பிரச்னைக்கு வந்தாச்சு தீர்வு! இனி ஜாலி பயணம் கன்பார்ம்
கோவை: கோவையில் ரயில் பயணிகளைக் கவரும் வகையில் ரயில்வே நிர்வாகம் மிக முக்கிய நடவடிக்கையை எடுக்க உள்ளது. இது நிச்சயம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும்,
உலகளவில் மிகவும் விரிவான ரயில் நெட்வொர்க்கை கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. ஆங்கிலேயர்கள் காலம் முதலே ரயில்கள் தான் நாடு முழுக்க செல்ல ஏற்ற ஒன்றாக இருக்கிறது. மத்திய அரசு ரயில் சேவையை மேம்படுத்தத் தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக வந்தே பாரத், சதாப்தி போன்ற ரயில்கள் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துகிறது. இது மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாகப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்திய ரயில்வே நிர்வாகம் வேறு பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அப்படியொரு மேஜர் அப்கிரேட் தான் கோவைக்கு வரவுள்ளது.
கோவை ரயில் நிலையம்: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து முக்கியமான ரயில் நிலையமாகக் கோவை இருக்கிறது. ஐடி, தொழில்துறை என்று கோவை பல்வேறு துறைகளிலும் கோவை வளர்ந்த நகரமாகவே இருக்கிறது. அதேபோல கோவை ரயில் நிலையமும் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். தினசரி பல லட்சம் பேர் பயன்படுத்தினாலும் கூட கோவை ரயில் நிலையத்தில் பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட ஒரு இடம் கூட இல்லை.
இது கோவையில் ரயில் பயணிகளுக்கு பெரும் அவதியைக் கொடுத்து வந்தது. ஆனால், அந்த பிரச்சினைக்கு இப்போது தீர்வு வந்துவிட்டது. . அதாவது கோவையில் ரயில் பயணிகளைக் கவரும் வகையில் கோவை ரயில்வே ஜங்ஷன் வளாகத்தில் ரயில் பெட்டி உணவகத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட பணிகள்: மிக விரைவில் கோவை ரயில் நிலையத்தில் அமைக்கப்படும் இந்த ரயில் பெட்டி உணவகம் செயல்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாகக் கோவை ரயில்வே ஜங்ஷன் வளாகத்தில் ஒரு மூலையில் பயன்படுத்தப்படாத ரயில்வே பெட்டியை வைத்துள்ளனர்.
அந்த ரயில் பெட்டியைப் பயன்படுத்தப்படாத ரயில் பெட்டியை சீரமைத்து, அதை உணவகமாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். அந்த ரயில் பெட்டியின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டும் புதுப்பிக்கப்பட்டு ஹோட்டல் போல மாற்றப்படுமாம். ஏற்கனவே, சென்னை உட்பட சில இடங்களில் இதுபோன்ற உணவகங்களை அமைத்துள்ளனர். இதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இப்போது கோவையிலும் இந்த ரயில் பெட்டி உணவகத்தை அமைக்க உள்ளனர்.
எப்படிச் செயல்படும்: இதில் உணவகத்தை நடத்த விரும்பும் நபர்கள் ஏலம் எடுக்கலாம். யார் அதிக தொகை ஏலம் கேட்கிறார்களோ.. அவர்களுக்கே இந்த ரயில் பெட்டி உணவகம் ஒதுக்கப்படும். ரயில்வே துறை டிக்கெட் தவிர்த்து மற்ற வழிகளில் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த ரயில் பெட்டி உணவகத்திற்கான உரிம கட்டணம் வசூலிக்கப்படும்.
ஏற்கனவே கோவை ரயில் நிலையத்தில் இந்த ரயில் பெட்டி உணவகத்தை ஏலம் எடுக்க சில தனியார் நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கிறது. இதை ரயில்வே நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளன. அதேநேரம் தனியாருக்கு ஹோட்டலை நடத்துவதற்கு மட்டுமே ஏலம் விடப்படுகிறது. மற்றபடி, அந்த இடமும் ரயில் பெட்டியும் இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் தான் தொடர்ந்து இருக்கும்.
ரயில்களை இயக்க ஆகும் செலவுகள் அதிகரிப்பதால் இதுபோல டிக்கெட் தவிர்த்து மற்ற வழிகளில் வருமானத்தை ஈட்டும் கொள்கையை 1917ஆம் ஆண்டே ரயில்வே துறை வகித்தது. ரயில்வே துறையின் மொத்த வருவாயில் 10-20 % வரை இந்த முறையில் வருமானம் கிடைக்க வேண்டும் என்பதே திட்டமாகும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகத் தான் இந்த முறையில் வருமானம் ஈட்டுவதில் ரயில்வே துறை தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications