கோவைக்கு நற்செய்தி.. "அது பாட்டுக்கு சூப்பரா வேலை பார்க்குது".. அசரடித்த ஆணையர்: பளிச் கோயம்புத்தூர்
கோவை: கோவை மாநகரில் பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றி சரிசெய்யும் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.. இதனால், கோவை மாநகராட்சி ஆணையர் எடுத்துள்ள அதிரடிகள், பலரையும் ஈர்த்து வருகிறது.
நவீனத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருந்தாலும், மனித கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களே பயன்படுத்தும் அவலம்தான் இன்றும் தொடர்ந்து வருகிறது.. இதற்கான முறையான தொழில்நுட்பம் எதுவும் பயன்படுத்தாமல் இருப்பதனால், மனிதர்களை கொண்டு மனித கழிவுகளை சுத்தம் செய்ய சொல்கிறோம்.

செப்டிக் டேங்க்: இந்த செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்வதில், மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று சட்டமே இருக்கிறது.. எனினும், விளிம்பு நிலை மக்களை, இத்தகைய டேங்க்கில் இறக்கி சுத்தப்படுத்துவம் அவலத்தை, இப்பொதுச்சமூகம் தொடர்ந்து அனுமதித்து கொண்டேயிருக்கிறது..
அதிலும், விவசாயம் பொய்த்துப்போய், உயிர்வாழ்வதற்காக நாடியும், நம்பியும் வரும் தொழிலாளர்களை வைத்தே கழிவுநீர் தொட்டிகள் தூய்மை செய்யப்படுகின்றன.. இவர்கள் உழைப்பு சுரண்டலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.. ஊதிய சுரண்டலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். அதைவிட ஒருபடிமேலே போய், உயிரையும் தந்துவிடுகிறார்கள்..
தமிழ்நாடு: மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்திற்கு நம்முடைய தமிழகமும் விலக்கல்ல.. அறிவியல், பொருளாதாரம், கல்வி, வளர்ச்சி இப்படி பல துறைகளில் முன்னோடியாக உள்ள தமிழகம் மனித கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களின் இறப்பில் இடம்பிடித்து வருவதும் வருந்தத்தக்கது..
கழிவுநீர் தொட்டிகள், சாக்கடைகள் அகற்றும் பணி முற்றிலும் எந்திரமயமாக்கப்படும் என்று அரசுகள் ஒவ்வொருமுறையும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. ஆனால், அந்த அறிவிப்புகள், நிரந்தரமாக அறிவிப்புகளாகவே சிலஇடங்களில் நின்றுவிடுகின்றன.. உள்ளாட்சி நிர்வாகங்களில் கழிவகற்றும் இயந்திரங்கள் இருப்பினும், அவைகள் முழுமையாகவும் முறையாகவும் பயன்படுத்துவதில்லை..
கோவை: அதுமட்டுமல்லாமல் தேவைக்கேற்ப இயந்திர பயன்பாடுகளும் தற்போது அதிகளவில் இல்லை என்றே தெரிகிறது. ஆனால், இதையெல்லாம் இன்று தூக்கி எறிந்துவிட்டு, இயந்திரங்களை அதிக பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது சென்னை மாநகராட்சி.
கோவை மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது... ஆனால், சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்படும்போதெல்லாம, தொழிலாளர்கள்தான், இறங்கி கழிவுகளை சுத்தப்படுத்தும் நிலைமை உள்ளது.
பாதாள சாக்கடை: இதையடுத்து, பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், மனித கழிவுகளை அகற்றவும், தனியார் நிறுவனத்தினரால் ரோபோ இயந்திரம் தயாரிக்கப்பட்டன.. கடந்த 2019-ல், ரூ.36 லட்சம் மதிப்புள்ள முதல் ரோபோ இயந்திரம் தனியார் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்தவகையில், உப்பிலிபாளையம் சிக்னல் அருகே பக்கத்தில்தான், முதன்முதலில், இந்த ரோபோ இயந்திரம் பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டது.
சாக்கடை கழிவுகள்: இதனிடையே பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் ரூ. 2.12 கோடியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்காக 5 நவீன ரோபோக்கள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டன... இந்த இயந்திரங்கள் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டன.. ஆனால், போதிய பயிற்சி இல்லாததால் பயன்படுத்தப்படுவது குறைந்தது. எனவே, இந்த இயந்திரங்களும், கொஞ்ச நாளிலேயே கிடப்பில் போடப்பட்டுவிட்டன.
இந்நிலையில், தற்போதைய மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், மீண்டும் அவைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்தார்.. இதற்காக அந்த இயந்திரங்களை மறுபடியும் சரி செய்ய முடிவெடுத்தார்.. அதன்படி, 5 ரோபோட்டிக் இயந்திரங்களும் சீரமைக்கப்பட்டன... இதைத்தவிர, அந்த இயந்திரங்களை எப்படி பயன்படுத்து என்பது குறித்தும் ஊழியர்களுக்கு டிரெயினிங் தரப்பட்டது.
இப்போது, பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்வதற்கான ரோபோட்டிக் இயந்திரங்கள் கோவை மாநகரில் கடந்த சில நாட்களாகவே பயன்பாட்டில் உள்ளன. இந்த ரோபோக்கள் அனைத்தும் தங்களது பணிகளை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றன...
சபாஷ் பணிகள்: இப்போது, இந்த ரோபோக்களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாம்.. எதிர்பார்த்த அளவுக்கு, ரோபோக்களும் அடைப்புகளை சுத்தம் செய்து வருகின்றனவாம்.. முக்கியமாக, மழை காலங்களில் ரோபோக்கள் மூலம் எளிதாக சுத்தம் செய்ய முடிகிறது என்கிறார்கள். எனவே, இன்னும் கூடுதலான ரோபோக்களை வாங்கவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications