வேற மாதிரி மாறப்போகுது சிங்காநல்லூர் பேருந்து நிலையம்.. கோவை மக்களுக்கு சூப்பரான புத்தாண்டு பரிசு
கோவை: கோவை மாவட்டம் விரைவில் மெட்ரோ சிட்டி அந்தஸ்தை பெறவுள்ளது. ஆனால் அங்குள்ள பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் கூட செய்யப்படாமல் உள்ளன. ஏற்கனவே காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளது. தற்போது சிங்காநல்லூர் மற்றும் சாய்பாபாகோவில் பேருந்து நிலையம் புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. கோவை விமான நிலையம் விரிவாக்கம், கோவை ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்கள் மேம்படுத்துதல் பணிகள் தொடங்க உள்ளன. அதேபோல முக்கியப் பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன.

அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் தொடங்கி நீலாம்பூர் வரை உயர் மட்ட மேம்பாலம், சாய்பாபா காலனி பகுதியில் 2 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. ரூ.200 கோடி மதிப்பில் கோவை சாலைகளை புனரமைக்கும் பணிகள், மேற்கு புறவழிச்சாலை திட்டம், அவிநாசி - மேட்டுப்பாளையம் 4 வழிச்சாலை பணிகள், காளம்பாளையம் - மாதம்பட்டி 4 வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது. இதேபோல தங்கநகை பூங்கா அமைப்பதற்கான டெண்டர் விடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. ஐ.டி துறையிலும் கோவை முக்கிய ஹப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது. டெக் சிட்டி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதுதவிர செம்மொழி பூங்கா, பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. காந்திபுரம் பகுதியில் புதிதாக ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு காந்திபுரம் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடப்பற்றாக்குறையை போக்கி பார்க்கிங், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் காந்திபுரம் பேருந்து நிலையம் புனரமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதே பாணியில் உக்கடம் பேருந்து நிலையத்தை மேம்படுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் சென்னை ஐஐடி வல்லுநர் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் சிங்காநல்லூர் மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபாகோவில் பேருந்து நிலையங்களை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கரூர், திருச்சி தொடங்கி மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்துதான் புறப்படுகின்றன. ஆனால் அங்கும் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. இதனால் பண்டிகை காலங்களில் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.
நீலகிரி மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கான பேருந்துகள் சாய்பாபாகோவில் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். அந்த பேருந்து நிலையத்திலும் அடிப்படை வசதிகள் குறைவால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சிங்காநல்லூர் மற்றும் சாய்பாபாகோவில் பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications