கோவை அவிநாசி சாலை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் சொதப்பல் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு
கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து வேகமாக முன்னேறும் மாவட்டமாக கோவை உள்ளது. தொழில்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் கோவை முன்னேறி கொண்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. கோவை இதய பகுதியான அவிநாசி சாலையில் சமீபத்தில் ஜிடி நாயுடு மேம்பாலம் திறக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக, கோவை சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு ரூ.1,791 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கியது. தமிழ்நாட்டின் மிகவும் நீண்ட மேம்பாலமான இது கடந்த 2025 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. மக்கள் பயன்பாட்டிற்கு வந்த மாதங்களாகியும் அதுதொடர்பான சர்ச்சைகள் ஓயவில்லை.

சுரங்கப்பாதைகள்
அவிநாசி சாலை ரெசிடென்ஸி ஹோட்டல் அருகே தூண் அமைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் அங்கு ஏறுதளம் அமைக்கப்படாமல் உள்ளது. தற்போது மற்றொரு விவகாரமும் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அந்த மேம்பாலத்துக்கு ஒப்புதல் வழங்கிய போது பாதசாரிகள் எளிதாக சாலையை கடப்பதற்காக 5 சுரங்கப்பாதைகள் கட்டவும் அனுமதி கொடுக்கப்பட்டது.
இதற்காக ரூ.15 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. பாலம் பணிகள் நிறைவடையும் தருவாயில் திடீரென்று சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கைவிட்டனர். கோவை மாநகரில் மட்டுமே கடந்த 2023 ஜனவரி மாதம் முதல் 2025 வரை ஜூன் மாதம் வரை 238 பாதசாரிகள் சாலை விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறையின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் எழுப்பிய புகாரின் அடிப்படையில் கோவை ஆட்சியர், 'லிப்ட் வசதியுடன் சுரங்கப்பாதை அல்லது நடைபாலம் அமைக்க வேண்டும்.' என்று உத்தரவிட்டார். ஆட்சியரின் உத்தரவையே அவர்கள் ஏற்கவில்லை. இதை எதிர்த்து கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கதிர்மதியோன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் அவர், "போக்குவரத்து நிறைந்த அவிநாசி சாலையில் மூத்தகுடி மக்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக சாலையை கடப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதால் தான் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. பாதசாரிகளின் அடிப்படை உரிமைகளை மறுப்பது மிகப்பெரிய விதிமீறலாகும். மேம்பாலம் உள்ள 10.10 கி.மீ மட்டுமல்ல, 16 தொலைவுள்ள மொத்த அவிநாசி சாலையில் ஒரு இடத்தில் கூட பாதசாரிகள் சாலையை கடக்க சுரங்கப்பாதை அல்லது நடைபாலம் அமைக்கவில்லை.
விதிமீறலா
இந்த 16 கி.மீ தொலைவில் 14 சுரங்கப்பாதைகள் அவசியம் என்று கோவை காவல்துறை கூறியுள்ளது. அவிநாசி சாலையில் டிராபிக் சிக்னல் முறை ஒழிக்கப்பட்டு யூடர்ன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது பாதசாரிகள் சாலையை கடப்பதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே காந்திபுரம் மேம்பாலம் கட்டியபோதும், இதேபோல சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட்டனர். இந்திய சாலை காங்கிரஸ் விதிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மீறி வருகிறார்கள்.
அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அவர்களின் மாணவர்களுக்காக மேம்பாலம் கட்டிய பிறகு, நடைபாலம் கட்டுகின்றனர். அதிகாரிகள் அரசு ஒதுக்கிய நிதியில் மக்கள் பாதுகாப்பிற்காக சுரங்கப்பாதை அமைக்க மறுக்கிறார்கள். மக்களின் பாதுகாப்புக்காக சுரங்கப்பாதை, நடைபாலம் அமைப்பது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அவிநாசி சாலையில் சுரங்கப்பாதை அமைக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications