போய் டவுசரை போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி
கோவை: கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த போது, அண்ணாமலை ஏற்கனவே மாநில பொறுப்பில் இருந்தார்.. வாரம் ஒரு முறை பார்த்தாரா.. மாதம் ஒரு முறை மக்களை பார்த்தாரா.. இப்போது மட்டும் டெய்லி பார்க்கிறார்.. அவர் ஒரு வார்த்தை கூறியிருந்தார், அறிவாலயத்தில் அடி செங்கல் வரை உருவுவேன் என்றார்.. அவரு செங்கல் உருவிக்கிடக்கு.. போய் டவுசரை போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க" என்று கூறினார்.
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் எப்போதுமே சண்டை தான் இருக்கும். இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக விமர்சனங்கள் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் கோவையில் செந்தில் பாலாஜி பேசும்போது, அண்ணாமலை நேர்மையான அரசியல்வாதியா? கடந்த முறை அவர் போட்டியிட்ட அரவக்குறிச்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.1000 பணம் கொடுக்கவில்லையா?, அண்ணாமலை இதற்கு பதில் சொல்லட்டும் என கூறியிருந்தார். மேலும், யார் யார் எங்க இருக்க வேண்டுமோ அவர்கள் இப்போது அங்கே இருக்கிறார்கள் என அண்ணாமலைக்கு சட்டப்பேரவை தேர்தலில் சீட் கிடைக்காதது குறித்த கேள்விக்கும் செந்தில்பாலாஜி பதில் அளித்தார்.

இதனிடையே பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு நாள் முன்பு கோவையில் செய்தியாளர்களிடம் பேசும் போது, "கோவை நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் அரசியல் செய்வோம் என்று சொன்னோம். இன்றைக்கு நான் சவால் விடுக்கிறேன். கோயம்புத்தூரில் திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 2024 லோக்சபா தேர்தலை எப்படி எதிர்கொண்டது என்பது எல்லாருக்கும் தெரியும்.
செந்தில் பாலாஜி கரூருக்கு செல்கிறார், கோவைக்கு வருகிறார். அவர் என்ன செய்தாலும் இம்முறை தோல்வியை தவிர்க்க முடியாது. செந்தில் பாலாஜி ஒரு நம்பர் 1 ப்ரோக்கர், அவர் 300 நாட்களுக்கும் மேல் சிறையில் இருந்திருக்கிறார். அவரது தம்பி தலைமறைவாக ஓடி ஒளிந்தவர். இப்போது கரூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், இந்த தேர்தலில் செந்தில் பாலாஜிக்கு தோல்வி உறுதி. நான் அரவக்குறிச்சி உள்ளிட்ட எந்த தேர்தலில் போட்டியிட்ட போதும் பணம் கொடுக்கவில்லை. நீங்களே கோவை தொகுதியோ அல்லது அரவக்குறிச்சி தொகுதிக்கோ நேரடியாக சென்று மக்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். அண்ணாமலையாகிய நான் நேர்மையான அரசியலை முன்னெடுக்கிறேன். திமுக கூட்டணிக்குள் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. ராகுல்காந்தி ஒருமுறைகூட புதுச்சேரியில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தவில்லை.
கோவை தெற்கு தொகுதியை பொறுத்தவரை செந்தில்பாலாஜி கரூரில் இருந்து கொண்டு வந்திருக்கக் கூடிய, 18 சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒரே நோட்டரி தான் கையெழுத்து போட்டுள்ளார். வேற ஆள் கிடைக்கவில்லையா? திமுகவின் தோல்வி கோவை கொங்கு மண்டலத்தில் தான் ஆரம்பிக்கும். இங்கு தோல்வி ஆரம்பித்து சேப்பாக்கத்தில் முடியும்.
கோவை வடக்கில் வானதி சீனிவாசனுக்காக நிறைய தன்னார்வலர்கள் வேலை செய்யத்தான் போகின்றனர். ஆனால் கரூரில் இருந்து ஆட்களை கொண்டு வந்து,பாக்கெட்டுகளில் பணத்தை வைத்துக் கொண்டு வீதி, வீதியாக நடந்துபோய் பணம் பிடியுங்க, குண்டா, அண்டா வேண்டுமா பிடியுங்க, ஸ்மார்ட் வாட்ச் வேணுமா பிடியுங்க என்று கோவை திமுகவை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பது யார்? செந்தில் பாலாஜி தான். கரூரைச் சேர்ந்தவர்கள், செந்தில் பாலாஜி சேர்த்து வைத்துள்ள சொத்துகளை கந்துவட்டிக்கு கொடுத்திருக்கக் கூடிய அவரின் பினாமிகளை கோவை கொண்டு வந்து வீடு, வீடாக பணத்தை இறைத்துக் கொண்டு இருக்கின்றனர். இதை தான் நாம் குற்றம்சாட்டுகின்றோம்." என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பேட்டியின் போது கடுமையாக விமர்சித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த போது, அண்ணாமலை ஏற்கனவே மாநில பொறுப்பில் இருந்தார்.. வாரம் ஒரு முறை பார்த்தாரா.. மாதம் ஒரு முறை மக்களை பார்த்தாரா.. இப்போது மட்டும் டெய்லி பார்க்கிறார்.. அவர் ஒரு வார்த்தை கூறியிருந்தார், அறிவாலயத்தில் அடி செங்கல் வரை உருவுவேன் என்றார்.. அவரு செங்கல் உருவிக்கிடக்கு.. போய் டவுசரை போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க" என்று கூறினார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications