ஊருக்கு போறீங்களா மக்களே? கோயம்புத்தூருக்கு வந்தது ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசின் சரவெடியை பாருங்க
கோவை: தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது கோவை உள்ளிட்ட கொங்கு பகுதி மக்களுக்கு பெருத்த மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
தமிழகத்தில் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம். இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது... ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களையும் இயக்கி வருகிறது.

சிறப்பு பஸ்கள்: 10 நாட்களுக்கு முன்புகூட, சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் கிடைத்தன.. அதாவது, 12ம் தேதி சனிக்கிழமை, மறுநாள் ஞாயிற்றுக் கிழமை 13ம் தேதி, ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம்.. அன்றைய தினமும் அரசு விடுமுறை தினம் என்பதால், சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதுமட்டுமல்லாமல், ஆடி மாதம் என்பதால், நிறைய பேர், கோயில் திருவிழாக்களுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காகவே, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பஸ்கள் ஸ்பெஷலாக ஏற்பாடு செய்யப்பட்டதுடன், லீவு முடிந்து, சொந்த ஊரிலிருந்து கிளம்பி வருவதற்கும் பஸ்கள் பிரத்யேகமாக விடப்பட்டிருந்தன. 4 நாட்களுக்கு முன்பும், ஆவணி சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
பண்டிகை காலம்: இந்நிலையில், இப்போது வார இறுதி வரப்போகிறது. அத்துடன், ஓணம் பண்டிகையும் நெருங்கிவிட்டது.. பொதுவாக இப்படி பண்டிகை காலங்களில் அனைத்து போக்குவரத்துகளிலம் மக்கள் கூட்டம் அலைமோதும்.. அதனால்தான், மக்கள் தேவையை கருத்தில் கொண்டு, கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை அறிவித்துள்ளது.
ஓணம் பண்டிகை + வார இறுதி நாட்கள் + சுப முகூர்த்த திருநாள் என மொத்தமாக சேர்ந்துவருகிறது. அதன்படி, நாளை முதல் அதாவது, 26, 27, 29ம் தேதிகளில் விடுமுறை நாளாகிறது.
இதையடுத்து, கோவையில் இருந்து 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.. கோவையில் இருந்து கேரளா, மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்து குறிப்பில் கூறியதாவது:
அறிவிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தின் சார்பாக வார இறுதி நாட்கள், சுப முகூர்த்தம் (26.08.2023 மற்றும் 27.08.2023) மற்றும் ஓணம் பண்டிகை (29.08.2023) ஆகிய நாட்களில் கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து கேரளா, மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை போன்ற ஊர்களுக்கு செல்லவும் மற்றும் சென்று மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
-
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications