கோவை மாணவி பலாத்கார விவகாரம்: நாளை களமிறங்கும் அதிமுக மகளிர் அணி.. போராட்டம் அறிவிப்பு
கோவை: கோவை விமான நிலையம் பின்புறம் நேற்று இரவில் காரில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை போதையில் 3 நபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். வானதி சீனிவாசன் தலைமையில் கோவையில் பாஜகவினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கோவை மாணவி வன்கொடுமையைக் கண்டித்து நாளை காலை கோவை மாவட்ட அதிமுக மகளிர் அணி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாளை அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது. கடந்த 2 ஆம் தேதி இரவில், கோவை விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பாதிப்புக்குள்ளான அந்த மாணவி, 3.11.2025 அன்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இது போன்ற பாலியல் பலத்காரம் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதன் மூலம் தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதோடு அதிமுகவினர், 'ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. எனவே, அன்புச் சகோதரிகளே- உங்களுக்கு நீங்களே பாதுகாப்பு. PEPPER SPRAY, EMERGENCY SOS ALARM, டார்ச், குடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை உங்களோடு எப்போதும் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று விழிப்புணர்வு பரப்புரை செய்துவந்தனர்.
இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை ) பீளமேடு பகுதியில் நாளை காலை கோவை மாவட்ட மகளிர் அணி போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications