அதே நாள்.. அதே இரவு.. கோவை மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் செய்த கொடூர கொலை
கோவை: கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி கடந்த மாதம் மூன்று நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் சகோதரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட அதே நாளில் அந்த 3 பேரும் மற்றொரு கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் அருகே கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் தேதி நள்ளிரவு, தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் மூன்று பேர் கொண்டு கொடூர கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்கிற சதீஷ் (30), கார்த்திக் என்கிற காளீஸ்வரன் ( 28), மற்றும் தவசி என்கிற குணா ஆகியோர் காவல்துறையினரால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

மாணவி பாலியல் வழக்கு
கைது செய்யப்பட்ட 3 பேரும் சகோதரர்கள் ஆவர். கோவில்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு, மதுபோதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்டதால் அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்தது. இதையடுத்து கோவை நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினர் கைது செய்யப்பட்ட 3 பேரையும், கடந்த நவம்பர் 27 ஆம் தேதி ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட அதே நாளில் அந்த கும்பல் மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நாளில் கொலை
இதுகுறித்து கோவை காவல்துறையினர் கூறுகையில், "ஆரம்பத்தில் அந்த மூன்று குற்றவாளிகளும் மாறி மாறி தகவல் கூறி குழப்பி வந்தனர். அன்னூர் அருகே ஆட்டு வியாபாரியை கடந்த 2 ஆம் தேதி இரவு முதல் காணவில்லை என்று அவரின் மனைவி கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கைது செய்யப்பட்ட இந்த மூன்று பேரும் அன்றைய தினம் இரவு அங்கு தான் இருந்துள்ளார்.
செரையாம்பாளையம் உள்ள தேவராஜ் ஆட்டு பண்ணையை ஒட்டி தான் இரவு தங்குவார். அன்றைய தினமும் தேவராஜ் ஓய்வுக்காக சென்றபோது இவர்கள் பேரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதைப் பார்த்து அதிர்ச்சியான தேவராஜ் அவர்கள் யார் என்ன என்று விசாரித்து கண்டித்துள்ளார். அப்போது தலைக்கேறிய மதுபோதையில் இருந்த அந்த கும்பல் தேவராஜை கட்டையால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
ஆட்டு வியாபாரிக்கு நடந்த சோகம்
தேவராஜை அன்றைய தினம் அவர் மனைவி தொடர்பு கொண்டபோது எடுக்கவில்லை. அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் தேவராஜின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நவம்பர் 6 ஆம் தேதி கோவில்பாளையம் எல்லையில் தேவராஜின் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டது. காவல்துறை விசாரணையில் இவர்கள் அதை மேலோட்டமாக கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் விரிவான விசாரணை நடத்த கோவில்பாளையம் காவல்துறையினர் முடிவு செந்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கொலை வழக்கில் அவர்களை காவலில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவராஜை கொலை செய்துவிட்டு, அவர்கள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். " என்றார்கள்.
-
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications