களமிறங்கிய மகளிர் ஆணையம்.. கோவை மாணவிக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி
கோவை: கோவை விமான நிலையம் பின் பகுதியில் ஆண் நண்பருடன் காரில் இருந்த தனியார் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி நேரில் விசாரணை நடத்தினார். அப்போது அவர் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்துள்ளது கொடூர செயல். இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டிருப்பதால் கட்டாயம் நீதி வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தின் பின்புற பகுதியில் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தனியார் கல்லூரி மாணவி 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வெளியூரைச் சேர்ந்த 20 வயதான அவர், கோவை தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். ஒண்டிப்புதூரில் உள்ள 25 வயது இளைஞர் அவரின் ஆண் நண்பராக உள்ளார்.

கோவை மாணவிக்கு சிகிச்சை
கடந்த ஞாயிற்றுக்கிழமை விமான நிலையம் அருகில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் ஆண் நண்பரை ஆயுதங்களால் தாக்கி, மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பி ஓடினார்கள். பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மற்றும் அவரின் ஆண் நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ், குணா, கார்த்தி ஆகிய 3 இளைஞர்களை வெள்ளகிணறு பகுதியில் நேற்று நள்ளிரவு காவல்துறையினர் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். அவர்களிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகளிர் ஆணையம் தலைவர்
இந்நிலையில், இந்த பாலியல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணையம் தலைவர் குமாரி இன்று நேரடியாக விசாரணை நடத்தினார். இன்று கோவை வந்த குமாரி, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை மருத்துவமனையில் நேரில் விசாரித்து ஆறுதலும் கூறினார். மருத்துவமனையில் மாணவிக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு கொண்டார்.
அதேபோல கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியின் நண்பரை சந்தித்தும் குமாரி ஆறுதல் கூறி விசாரணை நடத்தினார். அப்போது குமாரி செய்தியாளர்களிடம் கூறுகையில் "பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை சந்தித்து அவரின் தற்போதைய நிலை மற்றும் தேவைகளை கேட்டறிந்தேன். இந்த வழக்கில் காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். மாணவியின் நண்பரையும் பார்த்துள்ளேன்.
ஒரு மாதத்தில் குற்றப் பத்திரிகை
பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை தேவை. மாணவிக்கு உளவியல் ஆலோசனை தர வேண்டும். குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இது ஒரு கொடூர செயல். முதலமைச்சர் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த இடத்தையும் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். சமீப காலமாக பெண்களுக்கு எதிரான வழக்குகளில் விரைவாக, அதேநேரத்தில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மகளிருக்கு எதிரான குற்றங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக வெளியில் வந்து புகார் அளிக்கிறார்கள்.
தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் 30 - 40 சதவீதம் வரை புகார்கள் அதிகரித்துள்ளன. குற்றங்களுக்கான தண்டனை அதிகரித்தால் தான் குற்ற சம்பவங்கள் குறையும். இந்த சம்பவம் குறித்து அதிகம் பேசக்கூடாது. அதை மீண்டும் மீண்டும் பேசுவதால், பாதிக்கப்பட்ட பெண்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். பாதிக்கட்டவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்" என்றார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications