கோவையில் வீட்டுமனை வரன்முறை.. பெரியநாயக்கன்பாளையத்தில் பெரிய சம்பவம்.. அதிகாரி சிக்கியது எப்படி?
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் வீட்டுமனையை வரன்முறைப்படுத்த ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலர் சதீஷ்குமார் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து வரி வசூலர் சதீஷ்குமாரின் அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ஷீலா மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த வியாபாரியான 53 வயதாகும் ஆனந்தவேல் என்பவர் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதியில் வீட்டுமனை ஒன்று வாங்கியுள்ளார். இந்த வீட்டு மனையை வரன்முறைப்படுத்தக்கோரி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று அண்மையில் விண்ணப்பித்தார்.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக (வரி வசூலர்) பணியாற்றி வரும் சதீஷ்குமார் என்பவர், அந்த மனையை உள்ளூர் திட்டக் குழுமத்தின் மூலமாக வரன்முறைப்படுத்த கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலவாகும் என்று கூறினாராம். இதுதவிர வீட்டுமனையை வரன்முறைப்படுத்த ரூ.40 ஆயிரம் பணம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தவேல் அவ்வளவு பணம் தர இயலாது என கூறியுள்ளாராம்.
இதனால் அவரது வீட்டு மனையை வரன்முறைப்படுத்தாமல் சதீஷ்குமார் இழுத்தடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் பில் கலெக்டர் சதீஷ்குமாரிடம் இதுகுறித்து முறையிட்டாராம். ஆனால் அதன்பின்பும் ஆனந்தவேலின் வீட்டுமனை வரன்முறைப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது . இதையடுத்து ஆனந்தவேல் இதுகுறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் பில் கலெக்டரை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதன்படி ரூ.40 ஆயிரத்திற்கான ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆனந்தவேலிடம் கொடுத்தனர்.
இந்த ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்ட ஆனந்தவேல் நேற்று பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கு பணியில் இருந்த பில் கலெக்டர் சதீஷ்குமாரிடம் கொடுத்திருக்கிறார். இதை மறைந்திருந்து கண்காணித்த கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி மற்றும் போலீசார், சதீஷ்குமாரை பிடித்து கைது செய்தனர்.பின்னர் அவரிடம் இருந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ஷீலா மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டார்கள். சோதனையின் விவரங்கள் வெளியாகவில்லை..இந்த சம்பவம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications