டீ பிரியர்களுக்கு அதிர்ச்சி.. கோவையில் ஒரேயடியாக உயர்ந்த விலை.. சென்னையை விடவும் ரேட் அதிகம்!
கோவை: கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் டீ, காபி விலையை உயர்த்தி டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. இதற்கிடையே சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கோவையில் இருக்கும் டீ பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
நம்ம ஊரில் பலருக்கும் டீ குடித்தால் தான் நாளே ஓடும். நமது வீட்டிலேயே கூட பலரும் இதுபோல இருப்பார்கள். குறிப்பாக ஏழை மக்களுக்குத் தான் டீ ரொம்பவே முக்கியம். பலருக்கும் டீ தான் காலை உணவாகவே கூட இருக்கும். ஒரு டீ, இரு பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு காலை உணவையே கூட பலரும் முடித்துக் கொள்வார்கள்.

சென்னை டீ பிரியர்கள்
ஏழைகள் என இல்லை.. அனைத்துத் தரப்பினருமே கட்டாயம் குடிக்கும் விஷயமாக டீ இருக்கிறது. இவர்களுக்குக் காலையும் மாலையும் டீ குடித்தால் தான் வேலையே ஓடும். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் டீ பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சென்னையில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டது. ஒரு டீ ரூ.12க்கும், காபி ரூ.15க்கும் விற்கப்பட்ட நிலையில், டீ ரூ.15, காபி -20 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இவை மட்டுமின்றி லெமன் டீ, ராகிமால்ட் , சுக்கு காபி என அனைத்தின் விலையும் உயர்த்தப்பட்டது.
கோவையிலும் அதிர்ச்சி
இதற்கிடையே சென்னையைத் தொடர்ந்து தற்போது கோவையிலும் டீ பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அதாவது கோவையிலும் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலைப்பட்டியலின்படி கோவையில் ஒரு டீ ரூ.20க்கு விற்கப்படும், ஒரு காபி ரூ. 26க்கும், பிளாக் டீ ரூ. 17க்கும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஞ்சி டீ, பூஸ்ட், ஹார்லிக்ஸ் உள்ளிட்டவை ரூ.30ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் பேக்கரி அல்லது ஹோட்டல் என்றால் இந்த விலையோடு கூடுதலாக ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய விலைப்பட்டியலைப் பார்த்தால் நமக்கு இன்னொரு விஷயமும் புலப்படும். அதாவது சென்னையை விடவே கோவையில் அதிக டீ, காபி விலை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் சென்னை டீ பிரியர்களைக் காட்டிலும் கோவை டீ பிரியர்கள் அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும்.
என்ன காரணம்
கடந்த 4 ஆண்டுகளாக டீ, காபி விலை உயர்த்தப்படாமல் இருந்தது.. கடை வாடகை அதிகரிப்பு, ஊழியர் சம்பளம், மூலப்பொருட்கள் விலையேற்றம் உள்ளிட்டவை காரணமாக டீ, காபி விலையை ஏற்றுவதாக எனக் கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். அவர் சொன்ன காரணங்களில் நியாயம் உள்ளது என்றாலும் விலை அதிகமாக இருப்பதாக மக்கள் கூறியுள்ளனர்.
கோரிக்கை
ஏற்கனவே விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் டீ, காபி விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. தினசரி பார்த்தால் இது குறைவான தொகை போலத் தெரிந்தாலும் மாதச் செலவு எனக் கணக்கிட்டால் இதுவே பெரிய தொகைக்கு வந்துவிடும் என்பதால் ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் குறைக்கவாவது வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications