Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் நம்ம தமிழ்நாடு.. கோவையில் வெளிப்பட்ட இந்து-முஸ்லிம் ஒற்றுமை.. நேசத்தால் நெகிழும் துடியலூர்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை துடியலூர் பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அரவான் திருக்கோவில் திருவிழா வெகு விமரிசையாக நேற்றைய தினம் நடந்துள்ளது.. ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சிறப்பாக நடத்தப்படும் விழா என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. இந்த நிகழ்வின்போது நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இது இணையவாசிகளையும் நெகிழ்ச்சியடைய செய்து வருகிறது.

இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை என்றாலே, திருப்புவம் முதுவந்திடல் கிராமம் முதல் தஞ்சாவூர் காசவளநாடு புதூர் கிராமம் வரை களைகட்டிவிடுவது இயல்பாகும்.. காரணம், இங்குள்ள இந்துக்களும் மிக சிறப்பாக மொகரம் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்.

Coimbatore Thudiyalur Kovai

இந்து முஸ்லிம்

ரம்ஜான், மொகரம், தீபாவளி என 2 மத பண்டிகைகளையும், இங்குள்ள முஸ்லிம்களும், இந்துக்களும் பல்லாண்டு காலமாக சேர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.. தை மாதம் அறுவடையாகட்டும், திருமணங்கள், தொழில் துவங்குவது என எந்த நிகழ்வாகட்டும் பள்ளிவாசலில் வந்து அனுமதியை பெற்ற பிறகே இந்துக்கள் அவைகளை அங்கு ஆரம்பிப்பார்கள்.

அதுபோலவே, இஸ்லாமியர்கள் வேண்டுதல் முறைகள் கடுமையாக இருக்கும் என்பதால், இந்துக்களும் தங்களை வருத்தி கொண்டு தீ மிதித்து நேர்த்திகடனை செலுத்துவர். இதற்காக பள்ளிவாசலில் காப்பு கட்டி ஆண்களும், பெண்களும் ஒரு வாரம் விரதம் இருந்து, வேண்டுதல் நிறைவேறிய பிறகே, விறகு கட்டைகளை தானமாக தருகின்றனர்..

பிள்ளையார் சதுர்த்தி - தீக்குழி

பள்ளி வாசல் முன்பாக, மிகப்பெரிய அளவில் குழி வெட்டி, அதிகாலையில் கண்மாயில் நீராடிய பிறகு, ஆண்கள் வரிசையாக 3 முறை தீக்குழி இறங்குவார்கள்.

Coimbatore Thudiyalur Kovai

பிள்ளையார் சதுர்த்தி வந்தாலும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மிலாடி நபி குழு சார்பில் பூஜை பொருட்களை வழங்குவார்கள்.. அதுமட்டுமல்ல பூஜைக்கு தேவையான பூமாலை, பழங்கள் போன்றவற்றை வைத்து, இந்துக்களின் வீடுகளுக்கு நேரிலேயே கொண்டு சென்று வழங்குவார்கள்.. இந்த ஒவ்வொரு நிகழ்வும் இந்து-முஸ்லிம் சகோதர ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டிருக்கின்றன.

கோவை துடியலூர் அரவான் கோயில்

இந்நிலையில், கோவை மாவட்டம் துடியலூரிலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் தற்போது நடந்துள்ளது.. கோவை துடியலூர் பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு அரவான் திருக்கோவில் உள்ளது..

இதுமிகவும் பிரபலமான கோயிலும் கூட.. இந்த கோயிலில் திருவிழா ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பாக நடத்தப்படுகிறது. அந்தவகையில், இந்த வருடத்துக்கான திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த திருவிழாவிற்கு துடியலூர் மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஊர்வலமாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Coimbatore Thudiyalur Kovai

இஸ்லாமியர்கள் நெகிழ்ச்சி

அப்படித்தான் நேற்று மாலை திருவிழா முடிந்து கோவில் நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக பக்தர்கள் சென்றனர்..

இந்த கோவிலுக்கு பக்கத்திலேயே 300 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான பள்ளிவாசல் உள்ளது.. அந்த பள்ளிவாசல் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக சென்றபோது, அங்கு மாலை தொழுகையை முடித்த இஸ்லாமியர்கள் மனிதநேயத்தின் அடையாளமாக அந்த பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை தந்தனர்.. மேலும் பலர் பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.. ஊர்வலமாக சென்ற பக்தர்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

மதங்களை தாண்டிய இந்த அன்பும் ஒற்றுமையும் நிரம்பிய செயல், திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.. திருவிழாவில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கானோர், இஸ்லாமியர்களின் இந்த மனிதநேயத்தை பாராட்டியபடியே சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+