துடியலூர் பெண்ணை இரவு 2 மணிக்கு நெருங்கிய உருவம்! துரத்தியே ஓட்டிய நாய்! கோவையில் யார்னு பார்த்தால்?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் சாலையோரம் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணை மர்ம நபர் ஒருவர் நெருங்கி பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக கூறப்படும் நிலையில், அப்போது அங்கிருந்த தெருநாய்கள் செய்த செயல் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. . இந்த மொத்த சம்பவமும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி, கடந்த சில நாட்களாகவே இணையத்தில் தொடர்ந்து வைரலாகி கொண்டிருக்கிறது.

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த NGGO காலனி, அசோகபுரம் பகுதியில் பெட்டிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 2-ம் தேதி நள்ளிரவில், அந்த பெட்டிக்கடைக்கு யாரோ தீ வைத்து விட்டார்கள்..

Coimbatore CCTV Incident Thudiyalur Police Dog Saves Woman

இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர், துடியலூர் போலீசில் புகார் தரவும், போலீசாரும் வழக்குப்பதிவு செய்து, பெட்டிக்கடைக்கு தீ வைத்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். இதற்காகவே, சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போதுதான் அதில் பதிவான அந்த காட்சியை கண்டு அதிர்ந்தனர்.

அதிகாலை 2 மணி.. தனியாக இருந்த பெண்

அசோகபுரம் பகுதி ரயில்வே மேம்பாலம் அருகிலுள்ள சர்வீஸ் சாலை பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இரவில் சாலையோரமாக உட்கார்ந்திருந்தார்.. இந்த பெண்ணுடன் எப்போதுமே 2 தெருநாய்கள் வழக்கமாக இருக்குமாம்.. சம்பவத்தன்றும் அந்த நாய்கள் பெண்ணின் அருகிலேயே இருந்துள்ளன.

அதிகாலை சுமார் 2 மணியளவில், 17 வயது சிறுவன் மது போதையில் அங்கு வந்து, அந்த பெண்ணிடம் பேச்சு தந்துள்ளார்.. பிறகு மெல்ல பெண்ணை நெருங்கியதும், அருகிலிருந்த 2 நாய்களும் தொடர்ந்து குரைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் அந்த சிறுவன், முதலில் நாய்களை அங்கிருந்து விரட்ட முயன்றுள்ளார். பிறகு கீழே கிடந்த கல்லை எடுத்தும் நாய்களை விரட்டியுள்ளார்.

பாலியல் தொல்லை

கல்லால் விரட்டப்பட்ட நாய்கள் சில அடி தூரம் சென்றுள்ளன. ஆனால், அங்கிருந்து நகரவில்லை.. மறுபடியும், திரும்பி வந்து, அந்த சிறுவனையே பார்த்து குரைத்தன.. எத்தனை முறை நாய்களை விரட்டினாலும், அவை அந்த பெண்ணை மட்டும் விட்டுவிடத் தயாராக இல்லை. நாய்கள் சற்று தள்ளி இருப்பதை பயன்படுத்திக் கொண்ட அந்த சிறுவன், பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார்.. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், உதவி கேட்டு அலறியுள்ளார். ஆனால், அதிகாலை நேரம் என்பதால் அந்தப் பகுதியில் உடனடியாக உதவிக்கு யாரும் வரவில்லை.

பெண் அலறியதும் பாய்ந்த நாய்

பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டதும், சற்று தள்ளி நின்றிருந்த 2 நாய்களும் மீண்டும் வேகமாக ஓடி வந்து, சிறுவனை நோக்கி பாய்ந்துள்ளன.. ஒருநாள் சிறுவனின் கால்களை கடித்து இழுக்கவும், மற்றொரு நாய், பெண்ணிடம் இருந்து சிறுவனை விலக்க முயன்றுள்ளது.. 2 நாய்களின் இந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் அந்த சிறுவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். ஆனால், அந்த நாய் சிறுவனை விடாமல், அவர் ஓடும் திசையிலேயே பின்னால் ஓடி துரத்தி சென்றுள்ளது.

கேமராவில் தெரிந்த அதிர்ச்சி

பெட்டிக்கடைக்கு தீ வைத்தவரை தேடுவதற்காக ஆய்வு செய்த துடியலூர போலீசாருக்கு, மேற்கண்ட காட்சிகளை வீடியோவில் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.. உடனே அந்த 17 வயது சிறுவனை போலீசார் பிடித்து விசாரித்தனர்.. அப்போதுதான், சிறுவன் போதைக்கு அடிமையானவர் என்பதும், தொடர்ந்து சில பிரச்சினைகளில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது.. இறுதியில் சிறுவனை போலீசார் கைது செய்து, சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நகரில் உள்ள கண்காணிப்பு இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.

ஒரு பக்கம் மனிதர்களால் கவனிக்கப்படாமல் இருந்த ஒரு பெண்... மறுபக்கம் ஆபத்து வந்ததும் அவரை விட்டுவிடாமல் காப்பாற்றியது இரண்டு தெருநாய்கள்... அதனால்தான் இந்த சம்பவத்தின் வீடியோ, 4 நாட்களாகவே இணையத்தில் வைரலாகி வருகிறது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+