கோவை ரோட்டில் பறந்த டூவீலர்.. பெண்ணோடு லாட்ஜில் சென்றது நினைவிருக்கா? இப்ப இன்ஸ்டாவில் அடுத்த கொடுமை

Subscribe to Oneindia Tamil

கோவை: பள்ளி மாணவிகள் பலரும், இன்ஸ்டாகிராமில் முகம் தெரியாத ஆட்களோடு பழகி தங்களையே தொலைத்து விடுகிறார்கள். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் இன்ஸ்டாகிராமில் யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை கண்காணித்து அவர்களை பத்திரப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பிள்ளைகளின் வாழ்க்கையே பாழாகிவிடும்" என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.. ஆனால், இளம்பெண்கள் சிலர், இன்ஸ்டாகிராமில் தங்கள் மோசடிகளை தொடர்ந்து வருகிறார்கள்.. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

நாளுக்கு நாள் தொழில்நுட்பம் அதிகரிக்க, மோசடிகளும் அதிகரித்தவாறே உள்ளன.. யூடியூப் வீடியோக்களால், பணம் கிடைக்கும் என்று கூறியும் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரும் பொதுமக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி கொண்டேயிருக்கிறார்கள்.

Coimbatore Chennai instagram

அதேபோல, இன்ஸ்டா அட்டூழியங்களும் அதிகரித்தவாறே உள்ளன.. இதில் பெரும்பாலும் சிக்கி சீரழிவது இளம் தலைமுறைகளாக உள்ளது, பெரும் வேதனையையும் கவலையையும் உண்டுபண்ணி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் மூழ்கிய மாணவி

சமீபத்தில் சென்னையில் ஒரு கொடுமை நடந்தது.. சென்னை ஆவடி பகுதியில் 8ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி, தன்னுடைய தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.. இந்த மாணவி எந்நேரமும் இன்ஸ்டாவில் மூழ்குபவர்.. தெரிந்தவர், தெரிந்தவர்கள் என எல்லாருக்கும் மெசேஜ் மூலம் மணிக்கணக்கில் இன்ஸ்டாவில் பேசுவாராம்.

அந்தவகையில், 19 வயது பொள்ளாச்சி சூர்யா என்பவர் அறிமுகமாகியிருக்கிறார்.. 3 மாதத்திலேயே இருவரும் காதலித்துள்ளனர். இரவெல்லாம் அரைகுறை உடையில் வீடியோகாலில் பேசி வந்துள்ளனர்.

பொள்ளாச்சி டூ சென்னை

ஒருநாள் இந்த மாணவியை நேரில் பார்க்க ஆசைப்பட்டு, பொள்ளாச்சியில் இருந்து பைக்கிலேயே சென்னை ஆவடியிலுள்ள மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளார் சூர்யா.. வாசலில் நின்றுகொண்டு, வீட்டிலிருந்து வெளியே வரும்படி சொல்லவும், மாணவியும் அவசரமாக ரெடியானார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து பாட்டி, பேத்தியை தடுத்துள்ளார். ஆனால், பாட்டியை கீழே தள்ளிவிட்டு சூர்யாவுடன் பைக்கில் ஏறி பறந்தார் மாணவி.

இதற்கு பிறகுதான் ஆவடி போலீசுக்கு தாத்தா சென்று புகார் தந்தார்.. போலீசாரும் மாணவியை தேட துவங்கினர். அதற்குள் தாம்பரம் லாட்ஜுக்கு மாணவியை அழைத்து சென்று ரூம் புக் செய்தார் சூர்யா.. அப்போது லாட்ஜ் தரப்பினர் சூர்யாவிடம் செல்போன் நம்பர் கேட்கவும், உடனே மாணவி, தன்னுடைய தாத்தாவின் போன் நம்பரை தந்திருக்கிறார்.. உடனே இவர்களுக்கு அறை ஒதுக்கி தரப்பட்டுள்ளது.

லாட்ஜ்ஜில் ரூம் புக்கிங் செய்யப்பட்டுவிட்டது

பிறகு "லாட்ஜ்ஜில் ரூம் புக்கிங் செய்யப்பட்டுவிட்டது" என்ற மெசேஜ் லாட்ஜ் நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்டது. லாட்ஜிலிருந்து மெசேஜ் வந்ததுமே தாத்தா பதறிப்போய், மீண்டும் போலீசாரிடம் சொல்லியிருக்கிறார். இதற்கு பிறகே ஆவடியிலிருந்து தாம்பரத்துக்கு போலீசார் விரைந்து சென்று, லாட்ஜிலிருந்து மாணவியை மீட்டனர். வெறும் 3 மணி நேரத்திற்குள் மாணவியை மீட்டதுடன், சூர்யாவையும் போக்சோவில் கைது செய்திருந்தனர்..

ஏற்கனவே இப்படித்தான் இன்ஸ்டாவில் மணிகண்டன் என்பவருடனும் இந்த மாணவி பழகிவந்தாராம்.. அப்போதும் இதுபோலவே பெரிய பிரச்சனையாகி, அது சம்பந்தப்பட்ட வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளதாம்.. அப்படியிருந்தும் மறுபடியும் சூர்யாவிடம் பழகி வந்திருக்கிறார் இந்த 8ம் வகுப்பு மாணவி...!

காதல் ஜோடி

இன்ஸ்டாவில் இப்படி சில மாணவ, மாணவிகள் சிக்கி சீரழிகிறார்கள் என்றால், சிலபெண்களும் இளைஞர்களை தவறாக பயன்படுத்தி மோசடிகளில் இறங்கிவிடுகிறார்கள். நேற்று உத்தர பிரதேசத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.

மீரட் நகரை சேர்ந்தவர் அமித் ஆர்யா. ஏடிஎம்-களுக்கு பணம் கொண்டு செல்லும் வேன் டிரைவராக ஆர்யா வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிஜ்னோர் நகரை சேர்ந்த ஜோதி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராமில் அறிமுகமானார்.. பிறகு இருவரும் காதலிக்க துவங்கியிருக்கிறார்கள்..

இன்ஸ்டா ஜோதி

இருவருமே சாட்டிங்கிலேயே காதலை வளர்த்து வந்துள்ளனர்.. ஒரு நாள் ஜோதியை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆர்யாவுக்கு ஆசை ஏற்படவும், அதை ஜோதியிடம் சொல்லியிருக்கிறார்.. இதைக்கேட்ட ஜோதி, உடனே பிஜ்னோருக்கு வரும்படி ஆர்யாவிடம் சொல்ல, உடனே ஜோதியை பார்க்க கிளம்பினார்.

கடந்த ஜூலை 11-ந்தேதி வேலைக்கு சென்ற ஆர்யா, பாதி நாள் லீவு வேண்டும் என்று கேட்டுவிட்டு, ஆபீசிலிருந்து கிளம்பி, ஜோதியை பார்க்க சென்றுவிட்டார்..

அன்றைய தினம் இரவு ஆர்யா வீட்டுக்கு வரவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் பதறிவிட்டார்கள்.. பல இடங்களில் தேடியும் ஆர்யா கிடைக்கவில்லை.. 2 நாட்களாக ஆர்யா கிடைக்கவில்லை என்பதால் 13ம்தேதி போலீசில் புகார் தந்தனர்..

கண்டுபிடிக்க முடியவில்லை

ஆனால், 40 நாளாகியும் போலீசாராலும் ஆர்யாவை கண்டுபிடிக்க முடியவில்லை.. இப்படிப்பட்ட சூழலில்தான், வீடியோ ஒன்று வைரலானது. அதில், இளம்பெண் ஒருவர் பேண்ட், சட்டை அணிந்து, துப்பட்டாவில் தன்னுடைய முகத்தையும் முழுவதுமாக மூடிக் கொண்டு, ஆர்யாவின் கழுத்து பகுதியில் பூட்ஸ் காலாலேயே மிதிக்கிறார்.. பிறகு ஆர்யாவை நீளமான கம்பு எடுத்து கொடூரமாகவும் தாக்குகிறார்..

பிறகு, 2 ஆண்களும் சேர்ந்து, பெல்ட், கம்பால் ஆர்யாவை தாக்கி மிதிக்கிறார்கள்.. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஆர்யா குடும்பத்தினருக்கு கடுமையான அதிர்ச்சியை தந்திருந்தது..

ஆர்யா எங்கே

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக ஜோதி மற்றும் சச்சின், சோட்டு என்ற 2 ஆண் நண்பர்களை போலீசார் ஜூலை 26-ந்தேதி கைது செய்தனர்.. ஆனால், ஆர்யாவை கடுமையாக தாக்கியவர்கள் யார் என்று தெரியவில்லை.. ஆர்யாவின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதன் காரணமும் தெரியவில்லை.. இன்னும் ஆர்யாவும் கிடைக்கவில்லை..

எனவே, வீடியோ ஆதாரங்களை ஆர்யாவை தேடி, மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். கைதானவர்களிடமும் விசாரணையை நடத்த உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+