கோவையின் இதய பகுதியில் சூப்பர் மாற்றம்.. அதுவும் ஒன்று இல்லை இரண்டு.. மேஜர் பிரச்சினைக்கு தீர்வு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை நகரின் முக்கிய இடங்களில் ஒன்று உக்கடம். இங்கு மேம்பாலப் பணிகள் காரணமாகப் பேருந்து நிலையத்தின் கணிசமான பகுதி இடிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலாக அங்கு இரு பேருந்து நிலையங்களை அமைக்கக் கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரம் என்றால் அது கோவை தான். பல்வேறு துறைகளிலும் கோவை முன்னணி மாவட்டமாகத் திகழ்வதால், அங்கு முதலீடுகளும் பெரியளவில் குவிந்து வருகிறது.

traffic


ஏதோ ஒரு துறை என்று இல்லாமல்.. தொழிற்சாலை, ஐடி, விவசாயம் என்று பல்வேறு துறைகளிலும் கோவை முக்கியமான ஒரு நகரமாகவே இருக்கிறது. இதனால் கோவையில் பல்வேறு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.

உக்கடம்: கோவை நகரில் முக்கியமான இடங்களில் ஒன்று உக்கடம்.. கிட்டதட்ட நகரின் இதய பகுதியில் உள்ள உக்கடத்தில் இருந்து மக்கல் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் தினசரி சென்று வருகிறார்கள். இதற்காக அங்கிருந்து தேவையான பேருந்து சேவைகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே உக்கடம் பேருந்து நிலையம் இப்போது மொத்தமாக மாறப் போகிறது. இது தொடர்பாக மிக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அந்த பகுதியில் புதிதாக மேம்பாலம் ஒன்று அமைக்கப்படுகிறது. இந்த புதிய மேம்பால திட்டத்திற்காக அங்குத் தூண்கள் அமைக்கப்படும் நிலையில், இதன் காரணமாக உக்கடம் பேருந்து நிலையத்தின் கணிசமான பகுதி இடிக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து சேவையை மக்கள் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு உக்கடத்தில் இரண்டு புதிய பேருந்து நிலையங்களை அமைக்கக் கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

என்ன காரணம்: ஏற்கனவே உள்ள இடத்தில் குறிப்பிடத்தக்கப் பகுதி மேம்பால கட்டுமானத்திற்குப் போய்விடும். இதனால் முன்பு போலப் பேருந்துகளை நிறுத்த முடியாது. இடநெருக்கடி காரணமாகப் பேருந்துகளை நிறுத்துவதில் சிரமம் ஏற்படும். இதன் காரணமாகவே அங்கு இரு பேருந்து நிலையங்களை அமைக்கக் கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

எங்கே அமைகிறது: ஒரு பேருந்து நிலையம் ஏற்கனவே தற்போதுள்ள இடத்தில் இருக்கும். செல்வபுரம் சாலையில் மேம்பாலத்தின் சாய்வு பாதை அமையும் நிலையில், அதற்கு அடுத்துள்ள காலி நிலத்தில் மற்றொரு பேருந்து நிலையம் அமைகிறது. இந்த இரு பேருந்து நிலையங்களை அமைக்க ரூ. 21.55 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் 17ம் தேதிக்குள் டெண்டர் கோரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.. டெண்டர் பணிகள் முடிந்த உடனேயே பேருந்து நிலையத்திற்கான கட்டுமானம் தொடங்கும் எனத் தெரிகிறது. தற்போது உள்ள இடத்தில் அமையும் பஸ் ஸ்டாண்டில் 30 பேகளும், செல்வபுரம் ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாண்டில் 28 பேகளும் அமைக்கப்படுகிறது.

என்ன காரணம்: ஆத்துப்பாலம் வழியாகச் செல்லும் பேருந்துகள் ஏற்கனவே உள்ள இடத்தில் அமையும் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். நகரின் மற்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். அங்கு ஏற்படும் டிராபிக்கை குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெண்டர் பணிகள் அடுத்த மாதம் முடியும் நிலையில், 2025 ஜனவரி முதலே கட்டுமானம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+