கோவையில் நாளை இந்த ரூட்டு வழியா போயிடாதீங்க.. போக்குவரத்து மாற்றம்.. காவல் துறை முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை, இஸ்கான் தேர்த்திருவிழா ஜூலை 5 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, மாநகரில் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கோவை மாநகர காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எந்தெந்தப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ளலாம்.

கோவை, இஸ்கான் தேர் திருவிழா ஜூலை 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் மாநகரில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. அந்த வகையில், மாநகரின் முக்கியப் பகுதிகளில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக, உக்கடம், பேரூர் ரோடு, ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை தெலுங்குவீதி, செட்டிவீதி மற்றும் சலிவன் வீதி பகுதிகளில் மாற்றுப் பாதை வழியாகச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Coimbatore Traffic change

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போக்குவரத்தில் கீழ்க்கண்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. பேரூர் ரோடு

(i) பேரூரில் இருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக, நகருக்குள் வாகனங்கள் வருவது தடை செய்யப்படுகிறது. மாற்றாக, பேரூரில் இருந்து வரும் வாகனங்கள், செல்வபுரம் மாநகராட்சிப் பள்ளி அருகில், வலதுபுறம் திரும்பி, அசோக் நகர ரவுண்டானா, பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் நால் ரோடு ரவுண்டானா வந்து சுங்கம் வழியாகவும் ஆத்துப்பாலம் வழியாகவும் செல்லலாம்.

(ii) வைசியாள் வீதி, செட்டிவீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம், பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு வழியாக இடது புறம் திரும்பி பேரூர் வழிச்சாலையில் செல்லலாம்.

2. மருதமலை, தடாகம்,ரோடு

(i) மருதமலை, தடாகம் சாலையிலிருந்து தெலுங்கு வீதி (TK Street) வழியாக வாகனங்கள் வருவது தடை செய்யப்படுகிறது. மாற்றாக, மருதமலை, தடாகம் சாலையில் இருந்து காந்திபார்க், பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்லலாம்.

(ii) பொள்ளாச்சி பாலக்காடு பேரூர் வழியாக வரும் வாகனங்கள் ஒப்பணக்கார வீதியில் செல்லாமல் உக்கடம் நான்கு வழி சந்திப்பை அடைந்து சுங்கம் பைபாஸ் வழியாக சுங்கம் ரவுண்டானா வழியாக செல்லலாம்.

(ii) உக்கடத்திலிருந்து, ஒப்பணக்கார வீதி வழியாக, தடாகம் ரோடு, மருதமலை, மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும், உக்கடம் ஐந்து முக்கு சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயாசந்திப்பு, ராமமூர்த்திசாலை, சொக்கம்புதூர், பொன்னய்யராஜபுரம், காந்திபார்க் வழியாக செல்லலாம்.

(iv) சுக்கிரவார்பேட்டை சாலையில் இருந்து, தியாகிகுமரன் வீதி வழியாக, ராஜ வீதிக்கு, வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது.

(v) கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் ஜூலை 5 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் வர தடை செய்யப்படுகிறது.

(vi) தேர் திருவிழா நடைபெறும் ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, வைசியாள் வீதி, K.G.வீதி ஆகிய சாலைகளில் ஜூலை 5 ஆம் தேதி காலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.

வாகன நிறுத்தம்: இஸ்கான் தேர்திருவிழாவிற்கு, இருசக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள், ராஜவீதி மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் பெரியகடைவீதி கோணியம்மன் கோவிலுக்கு எதிர்புறமுள்ள வாகனம் நிறுத்துமிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த

போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+