கோவை மக்களே முக்கிய அறிவிப்பு.. இந்த வழியா போகாதீங்க.. நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
கோவை: கோவை துடியலூர் என்ஜிஜிஓ காலனி முதல் கோவில்பாளையம் செல்லும் சாலையில் ரயில்வே பாதையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ளதால் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கோவை மாநகர காவல் துறை எல்லைக்கு உட்பட்ட துடியலூர் NGGO காலனியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாதையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகள் டிசம்பர் 23 ஆம் தேதி (நாளை) முதல் நடைபெற உள்ளதால் துடியலூர் NGGO காலனியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் வாகனங்கள் மற்றும் கோவில்பாளையத்திலிருந்து துடியலூர் NGGO காலனி செல்லும் வாகனப்போக்குவரத்தில் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது.

இலகு ரக வாகனங்கள்: துடியலூர் NGGO காலனி வழியாக கோவில்பாளையம் செல்லும் வழித்தடம் தடைசெய்யப்பட்டுள்ளது. மாற்றாக வாகனங்கள் துடியலூர் பஸ் நிறுத்தம். வெள்ளக்கிணர். வெள்ளக்கிணர் ஹவுசிங் போர்டு, NGGO காலனி கணபதி நகர் சென்று வலதுபுறம் திரும்பி அத்திப்பாளையம் வழியாக கோவில்பாளையம் செல்லலாம்.
கோவில்பாளையத்திலிருந்து துடியலூர் NGGO காலனி வழியாக மேட்டுப்பாளையம் 6500 செல்லும் வழித்தடம் தடைசெய்யப்பட்டுள்ளது. மாற்றாக. வாகனங்கள் கோவில்பாளையம், அத்திப்பாளையம் வழியாக கணபதி நகரில் இடது புறம் திரும்பி வெள்ளக்கிணர் ஹவுசிங் போர்டு வெள்ளக்கிணர் வழியாக துடியலூர் செல்லலாம்.
கனரக வாகனங்கள்: துடியலூர் NGGO காலனி வழியாக கோவில்பாளையம் செல்லும் வழித்தடம் தடை செய்யப்பட்டுள்ளது மாற்றாக, வாகனங்கள் துடியலூர் பஸ் நிறுத்தம். வெள்ளக்கிணர். சரவணம்பட்டி ரோடு, சுண்ணாம்புக்காலவாயில் இடதுபுறம் திரும்பி அத்திப்பாளையம் சென்று கோவில்பாளையம் செல்லலாம்.
கோவில்பாளையத்திலிருந்து துடியலூர் NGGO காலனி வழியாக மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லும் வழித்தடம் தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றாக, வாகனங்கள் கோவில்பாளையம், அத்திப்பாளையத்தில் இடது புறம் திரும்பி கண்ணாம்புக்காலவாய் வழியாக சரவணம்பட்டி சாலையில் வலது புறம் திரும்பி வெள்ளக்கிணர் வழியாக துடியலூர் செல்லலாம்.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தங்களுடைய பயணங்களை திட்டம் போட்டுக் கொள்ளுமாறு கோவை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications