கோவை வடவள்ளி நர்ஸ் கனிதா சஸ்பெண்ட்.. சமூக ஆர்வலரால் நடந்த பெரிய ட்விஸ்ட்
கோவை: கோவை மாநகராட்சி 36-வது வார்டு வடவள்ளி வி.என்.ஆர்.நகரில் நகர்ப்புற சுகாதார நிலைய கட்டிடம் உள்ளது. இங்கு கனிதா என்பவர் நர்சாக வேலை பார்த்து வருகிறார். அவர் சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியை வீடாக மாற்றி கணவன் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நர்சின் கணவர் திமுக பிரமுகர் ஆவார். இவர் வடவள்ளி சுகாதார நிலையத்தை வீடாக மாற்றியதாக கூறி வீடியோ வெளியானது. இந்நிலையில் நர்சு கனிதாவை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் நடவடிக்கை எடுத்தார்.
கோவை மாநகராட்சி 36-வது வார்டு வடவள்ளி வி.என்.ஆர்.நகரில் நகர்ப்புற சுகாதார நிலைய கட்டிடம் செயல்படுகிறது. இங்கு கனிதா என்பவர் நர்சாக வேலை செய்து வந்தார். அவர் சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நகர்ப்புற சுகாதார நிலையத்தை தி.மு.க. பிரமுகர் ஒருவர் வீடாக மாற்றி பயன்படுத்தி வருவதாக சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட விளக்கத்தில், "கோவை வடவள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டிட வசதி இல்லாததால் வடவள்ளி பெரியார் நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு அறை மட்டுமே கொண்ட கட்டிடத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. வடவள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 14.02.2026 அன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
எனவே இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்த குழு அமைத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன்பேரில் கோவை மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் பாலுசாமி தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை வடவள்ளி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த மே 2025 முதல் மேற்கண்ட துணை சுகாதார நிலைய கட்டிடத்தில் திருமதி.கனிதா என்ற நகர்புற சுகாதார செவிலியர் குடியமர்த்தம் செய்யப்பட்டு திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனைகள் புதன் கிழமைகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் செலுத்துதல் மற்றும் சிறு உபாதைகளுக்கான சிகிச்சைகள் தினம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமதி கனிதாவின் கணவர் திரு ஷ்யாம் சுந்தர் பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பாக பயன்படுத்துவதாக புகார் பெறப்பட்டது.
தற்போது புகார் பெறப்பட்ட உள்ள கட்டிடம் தேசிய நகர்புற வளர்ச்சி நிதியின் கீழ் முதலில் வடவள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. கட்டிடம் நான்கு அறைகள் மட்டுமே கொண்ட சிறிய கட்டிடமாக உள்ள நிலையில் கட்டிடம் துணை சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது.
அந்த துணை சுகாதார நிலையம் இன்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு செய்தபோது சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் திருமதி கனிதா மற்றும் அவரது கணவர் திருமதி. ஷ்யாம் சுந்தர் வீட்டு உபயோகப் பொருட்களை வைத்திருந்தனர். மேலும், அந்த துணை சுகாதார பகுதில் மேற்படி பொருட்களை பயன்டுத்தியதற்காக அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பபட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இதை கவனிக்க தவறிய மாநகர சுகாதார அலுவலர் அவர்களுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது. தற்போது இருக்கின்ற நான்கு அறைகளில் இரண்டு அறைகள் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்குமாறும் இரண்டு அறைகளை மட்டும் தங்குவதற்கும் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது. நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் என்ற பெயரை துணை சுகாதார நிலையம் என மாற்றி எழுதவும், சிகிச்சை அறைகளுக்கும் குடியிருப்பு பகுதிக்கும் இடையில் தடுப்பு சுவர் எழுப்பவும் குடியிருப்பு பகுதிக்கு தனி வாசல் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே இது தொடர்பான விசாரணை அறிக்கை சுகாதாரத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பேரில் நர்சு கனிதா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வடவள்ளி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த நர்சு கனிதாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர் பாலுசாமி நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து அந்த நகர்ப்புற சுகாதார நிலையம், தற்போது துணை சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு அதற்கான நோட்டீசும் ஒட்டப்பட்டிருக்கிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications