லஞ்ச பணத்துடன் கோவை குளத்தில் குதிச்சாரே விஏஓ.. இப்ப என்னாச்சு தெரியுமா? கிடைத்த மறக்க முடியாத பரிசு
கோவை: கோவை, தொம்பிலிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், சான்று வழங்க மத்வராயபுரம் விஏஓ வெற்றிவேல், 5,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். கிருஷ்ணசாமி 1,000 ரூபாய் கொடுத்தார். மிச்ச பணம் ரூ.3500 தந்தபோதுதான், அதிகாரிகளிடம் வசமாக சிக்கிவிட்டார். அங்கிருந்த குளத்தில் லஞ்சப்பணத்தை வீசிவிட்டு தப்ப முயன்றார். ஆனால், போலீசாரிடம் வசமாக மாட்டிக் கொண்டார். இப்போது இது தொடர்பான விசாரணையில் நடந்து வரும்நிலையில், முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கோவையில் வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்டாராம் விஏஓ வெற்றிவேல்.. அந்த லஞ்ச பணத்தை வாங்க முயன்றபோதுதான், இந்த சம்பவம் நடந்துள்ளது.. இப்போது விஏஓ கைதாகி உள்ளார்.. அவரிடம் விசாரணை நடக்கிறது.. பேரூர் குளத்தில் போலீசார் தீவிரமான தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். இதனால் இந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.
விஏஓ வெற்றிவேல் பேரம்

கோவை பேரூர் அடுத்துள்ள ஆலாந்துறை பகுதியை சேர்ந்த 62 வயது கிருஷ்ணசாமி, வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம் 35 வயதான விஏஓ வெற்றிவேல் என்பவரை அணுகியிருக்கிறார்.. அதற்கு வெற்றிவேல் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.. ஆனால், லஞ்சம் தர விரும்பாத கிருஷ்ணசாமி, கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் தந்திருக்கிறார்.. உடனே அதிகாரிகளும், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிருஷ்ணசாமியிடம் தந்து, விஏஓவுடம் தர சொல்லி உள்ளார்.
அதன்படியே, கிருஷ்ணசாமி லஞ்ச பணத்தை தந்தபோது, அதை விஏஓ வெற்றிவேல் பெற்றுள்ளார்.. உடனே அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வெற்றிவேலை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். திடீரென போலீசாரை கண்டதும் சுதாரித்து கொண்ட விஏஓ வெற்றிவேல், பைக்கில் அங்கிருந்து தப்பி சென்றார்.. போலீசார் விடாமல் வெற்றிவேலை விரட்டி சென்றனர்.
சுற்றிவளைத்து கைது
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், பேரூர் குளத்தில் இறங்கிய விஏஓ வெற்றிவேல், லஞ்சமாக வாங்கிய பணத்தையும் அதே குளத்தில் வீசிவிட்டார்.. இதையடுத்து, குளத்தை போலீசார் சுற்றி வளைத்து, வெற்றிவேலை கைது செய்தனர்.. குளத்தில் வீசப்பட்ட லஞ்சப்பணத்தை தேட முயன்றனர். ஆனால் பணம் கிடைக்கவில்லை..
அதுமட்டுமல்லாமல், அந்த நேரம் இருட்டி விட்டதால், அதற்கு மேல் இரவில் பணத்தை தேட முடியாமல், மறுநாள் பேரூர் பேரூராட்சி ஊழியர்கள் 4 பேர் உதவியுடன், குளத்தில் வீசப்பட்ட பணத்தை தேடும் பணி மீண்டும் நடந்தது.
இதற்காகவே புல்டோசர்கள் வரவழைக்கப்பட்டு, குளத்திலிருந்த சேற்றினை தோண்டி எடுத்தனர்.. அப்போதும் பணம் கிடைக்கவில்லை..இதனால் குழப்பமடைந்த போலீசார், வெற்றிவேல் பணத்தை எங்கு வீசினார் என்பது குறித்து, அவரிடம் விசாரணையை துவங்கினர்.
விஏஓ மீது அதிரடி உத்தரவு
இந்நிலையில், விஏஓ வெற்றிவேலை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய, 3,500 ரூபாய் பணத்தை, கிருஷ்ணசாமியிடமிருந்து வெற்றிவேல் பெற்றுக்கொண்டதால், துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், குளத்தில் வீசிய பணம் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. கிருஷ்ணசாமியிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கொடுத்து அனுப்பிய ரூ.3500 நோட்டுகளில் இருக்கும் சீரியல் நம்பரும், குளத்தில் இருந்து மீட்கப்படும் ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரும் ஒன்றாக இருக்க வேண்டுமாம். எனினும் பணம் குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை.


Click it and Unblock the Notifications
