ஜெகஜால கில்லாடி.. கோவையில் ரொம்ப அசிங்கமா சிக்கிட்டாங்க.. அதுவும் இரவு நேரம்.. திணறிய கோயம்புத்தூர்
கோவை: இரவுநேரம் கோவையையே திணறடித்திருக்கிறார் இந்த பெண்.. யாரிவர்? என்ன காரணம்? இப்போது ஏன் போலீஸ் இவரிடம் விசாரித்துகொண்டிருக்கிறது?
நாளுக்கு நாள் தொழில்நுட்பம் பெருக பெருக, மோசடிகளும் அதிகரித்தவாறே உள்ளன.. அதேபோல, யூடியூப் வீடியோக்களால், பணம் கிடைக்கும் என்று கூறியும் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

2 மாதத்துக்கு முன்புகூட, கோவையில் யூடியூபில் விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என்று கூறி ஆயிரக்கணக்கானோரிடம் டெபாசிட் பெற்று மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்ததுடன், அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு கோவையை திணறடித்திருந்தனர்..
சைபர் கிரைம்: அதனால்தான், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்க சொல்லி, சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து பொதுமக்களை எச்சரித்தபடியே உள்ளனர்.. ஆனாலும், ஏமாற்றுபவர்கள், ஏமாறுபவர்கள் எண்ணிக்கைகள் குறைவதில்லை.. இதோ இதே கோவையில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.
ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் கொடுப்பதாக கூறி, பொதுமக்களை ஏமாற்றியிருக்கிறார் ஒரு பெண்.. கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்த இவரது பெயர் மதுமிதா. 32 வயதாகிறது..
மதுமிதா: ஆன்லைன் டிரேடிங் மூலம் புதிதாக பிசினஸ் செய்வதாகவும், இதில், முதலீடு செய்தால் மாதந்தோறும் முதலீட்டிற்கான லாபத்தொகையை தருவதாகவும் தனக்கு தெரிந்தவர்களிடம் ஆசைவார்த்தை கூறியிருக்கிறார். அதாவது, ஒரு லட்சம் ரூபாய்க்கு 20 ஆயிரம் ரூபாய் லாபம் என்று ஆசைகாட்டியிருக்கிறார்.
இதை நம்பி, பலரும் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடாக செலுத்தியிருக்கிறார்கள்.. ஒவ்வொருவருக்கும் முதல் மாதம் மட்டும், லாபம் என்று சிறிய தொகையை தந்த மதுமிதா, அதற்கு பிறகு பணம் எதையும் தரவில்லையம்.. இந்த பிசினஸில் திடீரென இழப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், விரைவில் அனைவரது பணத்தையும் தருவதாகவும் சொன்னார். அதற்கு பிறகு மதுமிதா தலைமறைவாகிவிட்டார்.
துபாய்: இவ்வளவு நாளும் மதுமிதாவை கண்டுபிடிக்கவே முடியவில்லை.. எனினும், பாதிக்கப்பட்டவர்கள் அவரை விடாமல் தேடிவந்த நிலையில், மதுமிதா துபாயில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், மதுமிதா துபாயிலும் சேட்டையை காட்டியிருக்கிறார்.. அதனால், துபாயில் பாதிக்கப்பட்டவர்களும் போலீசுக்கு செல்வதை பார்த்ததுமே, அங்கிருந்து தப்பிய மதுமிதா, கேரளாவிற்கு தப்பி செல்ல முயன்றுள்ளார்.
கேரளாவிற்கு மதுமிதா தப்பி செல்வதை அறிந்த பாதிக்கப்பட்ட கோவை, துபாய்வாசிகள், கேரளாவில் ஏற்கனவே, மதுமிதாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு இதுகுறித்து தகவல் தந்தனர்.. உடனே அலர்ட் ஆன கேரள நபர்கள், மதுமிதாவுக்கு அறிமுகமில்லாத சிலரை, எர்ணாகுளம் ஏர்போர்ட்டிற்கு முன்கூட்டியே அனுப்பி வைத்தார்கள்..
ஏர்போர்ட்: மதுமிதா ஏர்போர்ட்டில் கால் வைத்ததுமே, அங்கே தயாராக காத்திருந்த அறிமுகமில்லாத நபர்கள், நைசாக மதுமிதாவிடம் பேச்சு தந்தார்கள்.. அவருக்கு உதவி செய்வதுபோல, காரில் ஏற்றி அப்படியே கோவைக்கு அழைத்து வந்து, நேற்றிரவு ரேஸ்கோர்ஸ் போலீசிலும் ஒப்படைத்தனர்.
ஆனால், இரவு நேரம் இந்த கேஸ் எடுத்துக்கொள்ள முடியாது, காலையில் மாநகர குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு போலீசார் சொல்லிவிட்டார்கள். எனவே, விடிய விடிய 5 கார்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷனிலேயே அந்த பெண்ணுடன் காத்திருந்தார்கள்.
தன்னை சுற்றி 5 கார்களிலும் ஆட்கள் இருந்தும்கூட, மதுமிதா இப்போது மீண்டும் தன் வேலையை காட்டினார்.. நள்ளிரவில் அனைவரும் கண்ணயர்ந்த நேரம், காரிலிருந்து தப்பி கோவை ரோட்டில் வேகமாக ஓட துவங்கினார். அதற்குள் காரில் இருந்தவர்கள் சுதாரித்துகொண்டு பின்னாடியே ஓடினார்கள்.. பொதுமக்களும் சேர்ந்து மதுமிதாவை மடக்கிப்பிடித்தனர்..
கோவை பந்தய சாலையிலேயே வைத்து மதுமிதாவை, விடியும் வரையில் ரவுண்டு கட்டி தாக்கியிருக்கிறார்கள்.. அதற்குள் விடிந்துவிட்டதால், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் கொண்டுபோய் ஒப்படைத்தனர்.
பரபரப்பு: அதுமட்டுமல்ல, இரவு நேரமே மதுமிதாவை ஒப்படைக்க சென்றபோதும், போலீஸார் தங்களை அலைக்கழித்ததாகவும், விடிய விடிய வேண்டுமென்றே காத்திருக்க வைத்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றப்பிரிவு போலீசில் புகார் சொன்னார்கள்.. இப்போது வசமாக சிக்கியிருக்கிறார் மதுமிதா.. மாநகர குற்றப்பிரிவு போலீசாரும் தங்கள் கிடுக்கிப்பிடி விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications