கோவையில் தங்க நகைகளை உற்று உற்றுப்பார்த்த 2 பெண்கள்.. உல்லாச வாழ்க்கையால் ஆடிப்போன கோயம்புத்தூர்
கோவை: கோவையில் 2 பெண்களின் சொகுசு பங்களா, உல்லாச வாழ்க்கையை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள் போலீசார்.. இந்த 2 பணக்கார லுக் பெண்களையும் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தபோதுதான், ஏராளமான தகவல்கள் வெளியாகின.
கோவையை சேர்ந்தவர்கள் 2 மூதாட்டிகள்.. ஆய்ஷம்மாள் (75), வசந்தா (75) இவர்கள் இருவரிடமும் சமீபத்தில் 11 சவரன் நகையை மர்மநபர்கள் அபகரித்து சென்றுவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட 2 மூதாட்டிகளும், போலீசில் புகார் தந்ததையடுத்து, போலீசாரும் தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்டனர்.

2 பெண்கள்: அப்போதுதான் சந்தேகத்திற்கு இடமான முறையில் 2 பெண்கள் சுற்றித்திரிவதை உக்கடம் போலீசார் கவனித்தனர்.. இதையடுத்து, அவர்களை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில், இருவருமே திருட்டு தொழிலை செய்பவர்கள் என்பவதும், 2 பாட்டிகளிடம் நகையை கொள்ளையடித்ததும் இவர்கள்தான் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்களது பெயர் நந்தினி (28), காளிஸ்வரி (28) என்பதும், இருவருமே தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது.
அப்போது 2 பெண்களும் கூறிய தகவலை கேட்டு, போலீசார் அதிர்ந்தனர்.. அதாவது, "கைது செய்யப்பட்ட நந்தினி, காளிஸ்வரி இருவருமே அண்ணன், தம்பியை திருமணம் செய்துள்ளனர்.. இவர்களுக்கு திருட்டு தான் குடும்ப தொழிலாக இருந்து வந்துள்ளது.. இதில் காளிஸ்வரி என்பவர், தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து 12 வயதிலேயே திருட ஆரம்பித்துவிட்டாராம்.
கோயில் விழா: திருமணத்திற்கு பிறகு, கணவரின் அண்ணியான நந்தினியை தன்னுடன் சேர்த்து கொண்டு திருட்டை தொடர்ந்துள்ளார்.. தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடும்பத்தினருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள்.. இவர்களது முக்கிய குறி கோயில் திருவிழாக்கள் மட்டுமே.
திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகைகளை பறித்து வந்துள்ளனர்... எங்கு நகையை திருடுகிறார்களோ, அந்தந்த ஊரிலேயே, திருடிய நகையை விற்று காசாக்கிவிடுவார்கள்.. இப்படி திருடி திருடியே 2 பெண்களும் சேர்ந்து, தூத்துக்குடியில் பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.. தங்களது பிள்ளைகளையும் பெரிய கான்வென்ட்டில் படிக்க வைத்து வருகிறார்கள். இதைத்தவிர, பல இடங்களுக்கு சுற்றுலா சென்று உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
டென்ட்: திருடச் செல்லும் பகுதியில் டென்ட் அமைத்து விடுவார்களாம். அப்படித்தான், கோவையில் பேரூர் மற்றும் கோனியம்மன் கோயில் திருவிழா நடக்க இருப்பதை தெரிந்து, முன்கூட்டியே துடியலூரில் டென்ட் அமைத்துதங்கியிருககிறார்கள்.. அப்போதுதான், 2 பாட்டிகளிடமும் நகையை பறித்துள்ளனர.. இப்போது பாட்டிகளின் 11 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது.. தொடர்ந்து திருட்டு பெண்களிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications