கோயம்புத்தூரில் குபீர்னு பூத்த காதல்.. தமிழரசி போலீசில் சொன்ன வார்த்தை.. திகைத்த கோவை சிங்காநல்லூர்
கோவை: நாளுக்குநாள் கள்ளக்காதல்கள் பெருகி வரும்நிலையில், குடும்ப வன்முறைகளும் தலைதூக்கி வருகின்றன.. இதனால் தம்பதிகள் பிரிந்து விவாகரத்தைநோக்கி செல்வதுடன், இதனால் அவர்களது குழந்தைகளின் எதிர்காலமும் சேர்ந்தே பாதிக்கப்பட்டுவிடுகிறது.. சிலசமயம், பச்சிளம் குழந்தைகளை , பெற்ற தாய்களே கொல்லும் கொடுமையும் நடந்துவிடுகிறது. நேற்று மதியம் ஒரு குழந்தையின் உயிர் பறிபோயிருக்கிறது. என்ன நடந்தது கோவையில்?
சிங்காநல்லூரை அடுத்துள்ளது இருகூர் மாணிக்கம் நகர்.. இங்கு வசித்து வரும் தம்பதி ரகுபதி - தமிழரசி.. இவர்களது 4 வயது மகள் அபர்ணாஸ்ரீ.. தம்பதி இருவரும் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தநிலையில்தான், கடந்த ஒரு வருடமாக 30 வயதான தமிழரசியின் நடத்தையில் மாற்றம் தென்பட்டுள்ளதை ரகுபதி கவனித்துள்ளார்..
இதனால் அதிருப்திக்கும், அதிர்ச்சிக்கும் ஆளான ரகுபதி, மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்..பிறகு, குழந்தையுடன் தமிழரசி தனியாக வசித்து வந்துள்ளார்.. அப்போதுதான், அதே பகுதியை சேர்ந்த வசந்த் என்பருடன் தமிழரசிக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.. இது கள்ளக்காதலாகவும் மாறியுள்ளது.. தமிழரசி வீட்டில் தனியாக இருப்பதால், வசந்த் அடிக்கடி வீட்டுக்கு வந்து, தமிழரசியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு சென்றுள்ளார்..

இதனை அக்கம்பக்கத்தினர் தொடர்ந்து கவனித்துவிட்டு, தமிழரசியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.. உடனே குடும்பத்தினரும், தமிழரசியை கண்டித்து, கணவருடன் சேர்ந்து வாழும்படி அறிவுறுத்தி வந்துள்ளனர்.. எனினும், தமிழரசி யார் சொன்னதையும் காதில் வாங்கவில்லை..
இந்நிலையில், நேற்று மதியம் குழந்தை அபர்ணாஸ்ரீக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாம்.. குழந்தை திடீரென வாந்தி எடுத்து மயங்கி விட்டதாக சொல்லி, கோவை அரசு மருத்துவமனைக்கு தூக்கி வந்துள்ளார் தமிழரசி.. டாக்டர்களும் குழந்தையை பரிசோதித்துவிட்டு, வழியிலேயே உயிர் போய்விட்டதாக கூறிவிட்டனர். இதைக்கேட்டு தமிழரசியின் குடும்பத்தினர் மனம் உடைந்து கதறி அழுதார்கள்.. குழந்தையின் கழுத்தில் காயங்கள் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..
தமிழரசி கணவர்
இதனிடையே, குழந்தை மரணம் குறித்த தகவலறிந்து சிங்காநல்லூர் போலீசார், விரைந்து வந்து விசாரணையை துவங்கினர்.. அப்போது குழந்தையின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக, தமிழரசியின் குடும்பத்தினரே பகிரங்க குற்றச்சாட்டை கூறினார்கள்.. பிறகு போலீசார் தமிழரசியை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போதுதான், தமிழரசியின் கள்ளக்காதல் அம்பலமானது.. அதாவது, குழந்தையை பிரிந்து வந்தால்தான், தமிழரசியுடன் குடும்பம் நடத்துவேன் என்று கள்ளக்காதலர் வசந்த் கறாராக சொல்லிவிட்டாராம்.. குழந்தை உயிருடன் இருக்கும்வரை, வசந்த்துடன் சந்தோஷமாக இருக்க முடியாது என்பதால், மகளை கொன்றுவிட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்துள்ளார் தமிழரசி.
கள்ளக்காதலனுடன் உல்லாசம்
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, "தமிழ்ச்செல்வி ஒரு வருடமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கட்டிட வேலைக்கு சென்றபோது அவருக்கு தன்னுடன் வேலை செய்யும் 35 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர் பலமுறை அந்த இளைஞருடன் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் தமிழ்ச்செல்வி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார்... இதை அந்த கள்ளக்காதலனிடம் சொன்னதற்கு, "தாராளமாக நாம் சேர்ந்து வாழலாம். ஆனால் உனது குழந்தையை அழைத்து வரக்கூடாது. குழந்தை இல்லாமல் நீ மட்டும் தனியாக வந்தால் சேர்த்துக்கொள்கிறேன்" என்றாராம்.
தமிழ்ச்செல்வி வாக்குமூலம்
இதனால் தனது குழந்தையை விட கள்ளக்காதலன்தான் தமிழ்ச்செல்விக்கு முக்கியமாக தோன்றியது. எனவே அவர் தனது குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்தில் வீட்டுக்குள் சென்றிருக்கிறது..
அப்போதுதான், திடீரென தன்னுடைய குழந்தையின் கழுத்தை இறுக்கி நெரித்துள்ளார் தமிழ்ச்செல்வி.. இதில் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளது..கழுத்தை நெரித்து கொன்றதையும் தமிழ்ச்செல்வி ஒப்புக் கொண்டுள்ளார்.. ஆனால், இந்த கொலையில் அவருடைய கள்ளக்காதலனுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.
இதனிடையே சம்பந்தப்பட்ட கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளார்.. அவரிடமும் விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications