கோவை 8 ஆம் வகுப்பு மாணவனை ஓரினச்சேர்க்கைக்காக கொடூர தாக்குதல் – கசாப்பு கடைக்காரர் கைது
கோவை: கோவை மாவட்டம், சூலூர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு ஆபாச படம் காண்பித்து, மது அருந்த வைத்து ஓரினச் சேர்க்கைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதற்கு மறுத்த மாணவனை கொடூரமாக தாக்கியதற்காக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், அன்னூர் அருகே சொக்கம்பாளையத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி 8 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுவன் பள்ளி விடுதியில் இருந்து வெளியே வந்துள்ளார். தொடர்ந்து சிறுவன் சொக்கம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.

அந்த இளைஞரும் சிறுவனுக்கு லிப்ட் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த இளைஞர் சிறுவனை சூலூர் அருகே காடாம்பாடி விஐபி நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அது ஆள் நடமாட்டமற்ற பகுதியாகும். அங்கு அவர் சிறுவனிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயற்து செய்துள்ளார். இதற்கு சிறுவன் மறுக்கவே, இளைஞர் மரக்கட்டையில் தாக்கியுள்ளார்.
இதில் சிறுவனின் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சாலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கியுள்ளார். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அவர்கள் சூலூர் காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக போட்டோ, வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சூலூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் சிறுவனை ஏற்றிச் சென்ற நபர் திருப்பூர் மாவட்டம், கோடாங்கி பாளையம் ஆராக்குளம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் வசந்தகுமார் (வயது 23) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து சூலூர் காவல்துறையினர் கூறுகையில், "வசந்தகுமார் இறைச்சிக் கடையில் பணியாற்றி வருகிறார். அன்றைய தினம் சிறுவன் பள்ளிக்கு செல்லவில்லை. அவன் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டு வசந்தகுமாரிடம் லிப்ட் கேட்டுள்ளார். வசந்தகுமார் சிறுவனை கருமத்தம்பட்டி வழியாக அழைத்துச் சென்று, சோமனூரில் உள்ள ஒரு மதுக்கடையில் மது வாங்கியுள்ளார்.
பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவனுக்கு தன் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்துள்ளார். மேலும் சிறுவனை மது அருந்த வைத்து, ஓரின சேர்க்கையில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். இதற்கு சிறுவன் மறுத்துள்ளான். ஆத்திரமடைந்த வசந்தகுமார், சிறுவனை கற்கள் மற்றும் மரக்கட்டையால் தாக்கியுள்ளான்.
சிறுவன் தலைப்பகுதியில் காயமடைந்து மயங்கியுள்ளான். இதையடுத்து வசந்தகுமார் அந்தப் பகுதியில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டான். சிறுவன் மயக்கம் தெளிந்து சிறிது தூரம் சாலையில் சென்றுள்ளான். அங்கு மீண்டும் மயக்கடைந்தபோது, பொது மக்கள் மீட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் வசந்தகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்." என்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications