கோவையில் வாடகை வீடு.. வேலைக்கே போகாமல் தினமும் கொட்டிய பணம்.. மாற்றி யோசித்த 25 வயது இளைஞர் கைது
கோவை: கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த 25 வயதாகும் பரத்குமார் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் வாடகைக்கு வீடு பார்த்து தருவதாக தகவலை வெளியிட்டார். இதனை நம்பி கோவையில் குறிப்பிட்ட பகுதிகளில் வீடு தேவை என்று தொடர்பு கொண்டுள்ளார்கள். அவரும் அந்த பகுதிகளில் காலியாக இருக்கும் வீடுகளை வீடியோ மூலம் அனுப்புவாராம். அதை பார்த்து டோக்கன் அட்வான்ஸ் என்று 5000 , 10000 அனுப்புவார்கள் மக்கள். அப்படி அனுப்பும் பணத்தை இவர் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் வாடகைக்கு வீடு விடுவோரை குறிவைத்து சிலர் நூதன முறையில் ஏமாற்றுகிறார்கள். பலர் சென்னை, கோவை, பெங்களூர் போன்ற ஊர்களில் வீடுகளை வாங்கி போட்டுள்ளார்கள். அப்படி வாங்கி போட்ட வீடுகளை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டிரு வருகிறார்கள். ஆனால் அவர்கள் வெளியூர்களில் இருப்பதால் அதனை செய்ய முடிவது கிடையாது. அப்படிப்பட்டவர்களிடம் வாடகை ஒப்பந்தம் போட்டு, வீடுகளை வாடகைக்கு எடுத்து அதனை லீசுக்கு வீட்டு மோசடி செய்வது அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகிறது.

வீட்டின் உரிமையாளருக்கு பதில் வாடகைக்கு குடியிருப்பவரே வீட்டின் உரிமையாளர் போல் மாறி, அந்த வீட்டை ஒத்திக்கு விடுவது சென்னை போன்ற நகரங்களில் அடிக்கடி நடக்கிறது. இப்படி ஒத்திக்கு விட்டு லட்சங்களை மோசடி செய்யும் கும்பல், கடைசியில் வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைக்கு குடியிருப்போருக்கும் இடையே பெரிய சிக்கலை உண்டாக்கி விடுகிறார்கள். அதேபோல் சிலர் வீட்டின் உரிமையாளர்களிடம் சில தனியார் நிறுவனத்திடம் ஏமாறுகிறார்கள்.
மாதம் மாதம் வாடகை கிடைக்கும், உட்கார்ந்த இடத்திலேயே வருமானம் வரும் என்று ஆசை வார்த்தை கூறி தனியார் நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன. இன்றைய சூழலில் வீட்டை வாடகைக்கு விடும் போது, கவனமாக இருக்க வேண்டும். கோவையில் நூதன முறையில் வாடகைக்கு வீடு தேடுவோரை குறிவைத்து மோசடி செய்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர், நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் பரத்குமார் (வயது25). எம்.ஏ. ஆங்கிலம் படித்து முடித்துள்ளார். ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு, பணியில் இருந்து நின்றுவிட்டார். இந்த நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் மூலம் வாடகைக்கு வீடு பார்த்து தருவதாக தகவலை வெளியிட்டார். இதனை நம்பி கோவையில் குறிப்பிட்ட பகுதிகளில் வீடு தேவை என்றுஅவரை தொடர்பு கொண்டுள்ளார்கள்.
அவரும் அந்த பகுதிகளில் காலியாக இருக்கும் வீடுகளை வீடியோ மூலம் அனுப்புவாராம். மேலும் வீடுகளுக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், பலரும் தயாராக இருக்கிறார்கள் என்றும் பரத்குமார் தெரிவிப்பார். இதனை நம்பி முன்பணமாக செலுத்திய பலரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை மோசடி செய்து வந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து ஏராளமானவர்கள் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, பரத்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய 6 வங்கிகளின் கணக்கு புத்தகம், 6 ஏ.டி.எம். கார்டுகள், 3 சிம்கார்டுகள், ஒருசெல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications