கோவையில் தங்க நகை பறித்த திருடன்.. அடுத்த சில நிமிடங்களில் கடவுளே தந்த ட்விஸ்ட்
கோவை: கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 55 வயது பெண், அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர், திடீரென்று அந்த பெண் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்துள்ளார். மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றவருக்கு பெரிய சம்பவம் நடந்துள்ளது. அவர் கீழே விழுந்ததில் கை முறிந்திருக்கிறது.கை முறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை, கோவை உள்பட பல்வேறு நகரங்களில் தங்க நகை அணிந்து வெளியில் செல்லும் பெண்களிடம் கண் இமைக்கும் நேரத்தில் சில திருடர்கள் வழிபறி செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. பொதுவாக நகரங்களில் இதுபோல் வழிபறி கொள்ளையில் ஈடுபடும் திருடர்களை போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளைவைத்து அடையாளம் கண்டுபிடித்துவிடுவார்கள்.

அந்த நேரத்தில் எந்தெந்த வாகனங்கள் சென்றன, இறுதியாக அந்த வாகனங்கள் சென்ற பாதை, அந்த பகுதியில் ஏற்கனவே நோட்டமிட்டவர்கள் யார், செல்போனில் பேசியவர்கள் என எப்படியாவது திருடர்களை பிடித்துவிடுவார்கள். திருடர்களின் வாகன பதிவுஎண் உள்பட ஏதாவது ஒரு குளு கிடைத்துவிடும். எனினும் சிசிடிவி கேமரா இல்லாத பகுதிகள் என்றால் தான் சிக்கலாக முடியும். அங்கு விசாரிப்பதற்கு பெரிய சவாலையே போலீஸ் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் தங்க நகை திருடிய திருடனுக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் அங்குள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர், திடீரென்று அந்த பெண் கழுத்தில் கிடந்த 4.5 பவுன் தங்க நகையை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அத்துடன் அந்த பெண்ணிடம் இருந்து நகையை பறித்துச்சென்ற நபரை பிடிக்க கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின்பேரில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில், வீரபாண்டி பூங்கா அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்து கை முறிந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர் நாமக்கல்லை சேர்ந்த 30 வயதாகும் மணிகண்டன் என்பதும், நடந்து சென்ற பெண்ணிடம் 4.5 தங்க பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்து கைது செய்ததுடன், 4.5 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைதான மணிகண்டன் மீது திருப்பூர், ஈரோடு, திருச்செங்கோடு, பல்லடம், அவினாசிபாளையம், கோவில்பாளையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications