அப்படியே வெளிநாடு மாதிரி.. மெல்ல மாறும் கோவை அவினாசி சாலை.. மேஜர் மாற்றம்.. பொதுமக்கள் செம ஹேப்பி
கோவை: கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே அங்கு டிராவிக்கையும் பாதிக்காமல் பொதுமக்களும் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க ஏதுவாக வெளிநாடுகளில் இருப்பது போல பெலிகான் சிக்னல் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து முக்கியமான நகரம் என்றால் அது கோவை தான். ஐடி, விவசாயம், உற்பத்தி என்று அனைத்து துறைகளிலும் முக்கியமான இடத்தில் கோவை இருக்கிறது.

போக்குவரத்து: கோவையில் இதனால் போக்குவரத்து நெரிசலும் கூட அதிகமாகவே இருக்கிறது. சென்னைக்கு பஸ், மின்சார ரயில், மெட்ரோ என்று பொது போக்குவரத்திற்கு பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால், கோவையில் அப்படி இல்லை. பொது போக்குவரத்து என்றால் பேருந்துகள் மட்டுமே உள்ளன. இதனால் கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாகக் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் டிராபிக் உச்சத்தில் இருக்கிறது.
"கோவையின் அடையாளம்.." திடீரென முக்கிய சாலையில் நடந்த மாற்றம்.. பிஎஸ்ஜி அருகே இதை கவனிச்சீங்களா
அங்கு டிராபிக்கை குறைக்க மேம்பாலங்கள், சாலை வசதிகள், உட்கட்டமைப்புகளைத் தமிழ்நாடு அரசு மேம்படுத்தி வருகிறது. இது கோவைவாசிகளுக்கு பெரியளவில் உதவுகிறது. அதேபோல சாலை விபத்துகளைக் குறைக்கவும் கோவை மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
யூடர்ன் சாலைகள்: குறிப்பாக கோவை அவிநாசி சாலையில் உள்ள சிக்னல்கள் அகற்றப்பட்டு யூடர்ன் அடிப்படையிலான சாலைகள் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் அங்குச் சாலையில் வாகனங்கள் நிற்காமல் செல்ல முடிகிறது. அதேநேரம் சிக்னல்கள் அகற்றப்பட்டதால் பாதசாரிகள் சாலையைக் கடக்கச் சிரமப்படுகிறார்கள். இதன் காரணமாக மக்கள் அதிகம் சாலையைக் கடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு வெளிநாடுகளில் இருப்பதைப் போன்ற பெலிகான் சிக்னல் அமைக்கப்பட்டு வருகிறது.
பெலிகான் சிக்னல்: ஏற்கனவே கோவை அவிநாசி சாலையில் 3 இடங்களில் இந்த பெலிகான் சிக்னல் அமைக்கப்பட்டுள்ள நிலையில், நான்காவது சிக்னல் இப்போது கே.எம்.சி.எச். மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதைக் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

எப்படிச் செயல்படும்: அதாவது சாலையைக் கடக்க விரும்புவோர் இந்த பெலிகான் சிக்னலில் சிவப்பு பட்டனை அழுத்த வேண்டும். அப்படி அழுத்தினால் வாகனங்களுக்கு 30 நொடிகள் சிவப்பு லைட் எரியும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி நாம் சாலையைக் கடந்துவிட வேண்டும். இதுபோல சாலையைக் கடக்க விரும்புவோர் சிவப்பு பட்டனை அழுத்தி சாலையைக் கடக்கலாம். அதேநேரம் ஒரு முறை சிவப்பு பட்டனை அழுத்தினால்.. அடுத்து 3 நிமிடங்கள் கழித்தே சிவப்பு பட்டனை அழுத முடியும்.
கோவை மக்களுக்கு மெகா இன்ப செய்தி.. அவிநாசி சாலை மேம்பாலம்.. கட்டுமானம் எப்போது முடியும்! செம தகவல்
கோவையில் இப்போது யூ டர்ன் அடிப்படையிலான சாலைகள் வந்துள்ள நிலையில், பாதசாரிகள் சாலையைக் கடக்கச் சிரமப்படுவதாகப் புகார்கள் எழுந்த நிலையில், இந்த சிக்னலை கோவை போலீசார் கொண்டு வந்துள்ளனர். முதற்கட்டமாக இப்போது 4 இடங்களில் பெலிகான் சிக்னல் அமைக்கப்பட்டுள்ள சூழலில், விரைவில் அவிநாசி சாலையில் மக்கள் அதிகம் சாலையைக் கடக்கும் இடங்களைக் கண்டறிந்து பெலிகான் சிக்னலை அமைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பாதசாரிகளுக்கு உதவும் வகையிலும் இந்த ஸ்மார்ட் சிக்னல் அமைக்கப்பட்டு வருவதாகக் கூறிய கோவை போலீஸ் ஆணையர் பாலகிருஷ்ணன், பொதுமக்கள் முறையான இடங்களில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும் எனத் தெரிவித்தார்..
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications