சார் பேர் ரகுநாதன்.. பூராவும் ஆபாசம்.. மாணவிகளிடம் வாயை தொறந்தாலே டபுள் மீனிங்.. கோவை ஷாக்..!
பாலியல் தொல்லை தந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டார்
கோவை: "வர்றியா.. காரில் ஒரு ரவுண்டு போகலாம்.. டேட்டிங் போகலாம்" என்று தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு டார்ச்சர் தந்துள்ளார் ஒரு பேராசிரியர்.. கோவை அரசு கலைக் கல்லூரியின் பேராசிரியர் ரகுநாதன் தான், அடுத்ததாக சிக்கி உள்ள நபர்.
தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளார் ரகுநாதன்.. பணியவில்லை என்றால் மிரட்டுவாராம்.
ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அதன்பேரில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்கிறார்கள்.
திடீரென Purple நிறத்தில் மாறிய.. எலிசபத் மகாராணியின் கைகள்.. புயலைக் கிளப்பிய ஒற்றை படம்? பரபர தகவல்.

மாணவர்கள்
எனவே, இந்திய மாணவர் சங்கத்தினர் கலெக்டரிடம் உரிய ஆதாரங்களுடன் நேற்றைய தினம் புகார் அளித்தனர். அதுமட்டுமல்ல, அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாகவே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம், பேராசியிர் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் போதாது, சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பானது.

கண்ணீர்
இதனிடையே, ரகுநாதன் குறித்து பல்வேறு புகார்களை மாணவிகள் கண்ணீருடன் சொல்கிறார்கள்.. வாயை தொறந்தாலே, மாணவிகளிடம் டபுள் மீனிங்கில்தான் பேசுவாராம்.. அதுவும் யாரெல்லாம் ஏழை பெண்களோ, அவர்களுக்குதான் முதல் குறி.. பொருளாதரத்தில் பின்தங்கியவர்கள் யார் யார் என்பதை ஒரு லிஸ்ட் எடுத்து வைத்திருப்பாராம்.. அவர்களிடம்தான் எளிதாக அத்துமீறி பேசி வந்துள்ளார்... ஆசிரியர் என்பாலும், வயதில் பெரியவர் என்பதாலும், மாணவிகள் இவரை பற்றி இத்தனை நாளும் வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர்.

கல்யாணம்
"டேட்டிங் போகலாமா? வா என் காரில் போகலாம்.. எனக்கு மனைவி இல்லை... ஆனால், பணம் நிறைய இருக்கு... நீ மட்டும் என்னை கல்யாணம் செய்துகொண்டால், உன்னை ராணி மாதிரி பார்த்துக்கொள்வேன்" என்றெல்லாம் கலர் கலராக உதார் விட்டுள்ளதாக தெரிகிறது.. "கண்ணை மூடு உனக்கு ஒன்னு காட்டறேன்" என்று சொல்லி ஏதாவது கிப்ட் தருவாராம்.. இப்படித்தான் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை, தன்னுடைய ரூமுக்கு அழைத்துள்ளார்.

ரூம்
ஆசிரியர் அழைப்பதால் மாணவியும் அங்கு சென்றுள்ளார்.. அப்போது, "ஏன் என் கண்ணை பார்த்து பேச மாட்டேங்குறே.. " என்று கேட்டுக்கொண்டே தவறாக நடந்துகொண்டிருக்கிறார்... இதனால் அதிர்ச்சியான மாணவி, ரகுநாதனை எச்சரித்துவிட்டு அந்த ரூமைவிட்டு வெளியேறியிருக்கிறார்.. அதற்கு பிறகும்கூட ரகுநாதன் திருந்தவில்லை.. அதே பெண்ணிடம் மறுபடியும் சேட்டையை செய்துள்ளார்.. அந்த மாணவியை எப்போது சந்தித்தாலும், "உன்னை தூக்கிட்டு போய் கல்யாணம் செய்துவிடுவேன், பார்க்கிறியா?" என்று சவால் விட்டு வந்துள்ளார்..

புகார்
அதுமட்டுமல்ல, "இந்த விஷயத்தை வெளியே யார்கிட்டயாவது சொன்னால் கொலையே செய்துடுவேன்" என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார். இது எல்லாவற்றையும்விட கொடுமை, அந்த மாணவிக்கு வாட்ஸ்அப்பில் தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்துவந்திருக்கிறார் ரகுநாதன். கொரோனா காரணமாக காலேஜ் மூடப்பட்டுவிடவும், மாணவியாலும் இதை உடனே யாரிடமும் சொல்ல முடியாமல் போயிருக்கிறது.. இப்போது லாக்டவுன் காலேஜ் திறந்தவுடன் சக மாணவர்களிடம் ரகுநாதன் பற்றி மாணவி சொல்லி உள்ளார்..

அத்துமீறல்
அப்போதுதான் இதே மாதிரி மேலும் சில மாணவிகளிடம் ரகுநாதன் அத்துமீறியது தெரியவந்திருக்கிறது.. அதற்கு பிறகுதான், பாதிக்கப்பட்ட மாணவி ரேஸ் கோர்ஸ் போலீஸில் புகார் தந்தார். அதனடிப்படையில், பந்தய சாலை காவல் நிலைய போலீசார், வழக்கு பதிந்து பேராசிரியர் ரகுநாதனை அதிரடியாக கைது செய்துள்ளனர்...

அதிர்ச்சி
அவரிடம் விசாரணையும் ஆரம்பமாகி உள்ளது.. இதையடுத்து பல்வேறு தகவல்கள், விவரங்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கோவை மாணவி தற்கொலை அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீள முடியாத நிலையில், இன்னொரு கொடுமை நடந்துள்ளது.. ஏற்கனவே ஒரு "சார்" ஜெயிலில் இருக்கிறார்.. இப்போது இன்னொரு சாரும் உள்ளே போயி, கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்...!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications