தமிழகத்தில் பிரச்னை நிறைய இருக்கு.! கூட்டணியில் இருப்பதால் சொல்ல முடியல..! கார்த்தி சிதம்பரம் பரபர
கோவை: கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம், தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினை நிறைய உள்ளதாகத் தெரிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் இப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியில் உள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பார். இதனிடையே இந்த முறை தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினை நிறைய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கோவையில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க விமானம் மூலம் கோவை சென்றிருந்தார். அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ராகுல் காந்தி பொதுமக்களை நாடி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை புனித பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணம் நிச்சயம் வெற்றி பெறும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டும். பொதுமக்களைச் சந்திக்க இது சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது" என்றார்

விசித்திரமான சூழல்
சமீபத்தில் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில், இது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், "காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் விலகிச் சென்றாலும் அது எங்களுக்குப் பின்னடைவு தான். தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சி மிகவும் விசித்திரமான சூழலில் தமிழ்நாட்டில் இருக்கிறது. இங்கு நாங்கள் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும், அரசாங்கத்தில் எங்களுக்குப் பங்கு இல்லை.

மக்கள் பிரச்சினை
இதனால் மக்கள் பிரச்சினைகளைச் சரியான முறையில் எடுத்துக் கூற முடிவதில்லை. அதேபோல எதிர்க்கட்சியாகவும் செயல்பட முடியவில்லை. இது விசித்திரமான சூழல் தான். மத்திய அரசு மக்கள் மீது அதிக அழுத்தம் தருகிறது. இன்று முதல் சுங்கக் கட்டணம் கூட உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஜி.எஸ்.டி பண மதிப்பிழப்பு, லாக் டவுன் சமயங்களில் எந்தப் பிரிவினருக்கும் ஊக்கத்தொகை வழங்கவில்லை. இதனால் மக்கள் மீதான சுமை அதிகரித்து உள்ளது.

எதுவும் கிடைக்காது
இந்த பிரதமரும், நிதியமைச்சரும் இருக்கும் வரை யாருக்கும் எதுவும் கிடைக்காது. எதிர்க்கட்சிகள் மீது திட்டமிட்டு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றை ஏவி விடுகிறார்கள். இதன் மூலம் எம்எல்ஏக்களை இழுத்து வந்து, தவறான வழியில் ஆட்சியைக் கவிழ்க்கின்றனர். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்குக் குறைவான எம்பிக்களே உள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியால் வலிமையாகக் கேள்விகளை எழுப்ப முடிவதில்லை.

இந்துத்துவா கொள்கைகள்
இந்தியாவில் ஏற்கனவே இந்துத்துவா கொள்கைகள் வேரூன்றி உள்ளது. இதன் காரணமாகவே இந்தத்துவாவை நாங்கள் எதிர்த்து வைக்கும் வாதம் எடுபடவில்லை. உலக பணக்காரர்கள் வரிசையில் அதானி இப்போது மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. இதை நிச்சயம் பாஜகவின் சாதனை பட்டியலில் இடம்பெற வேண்டும்.

ஏகப்பட்ட பிரச்சினை
இங்குத் தமிழ்நாட்டில் ஏகப்பட்ட மக்கள் பிரச்சனைகள் உள்ளன. தமிழக காங்கிரஸ் கட்சி அடிக்கடி பொதுமக்களை சந்திக்க வேண்டும். பொதுமக்கள் பிரச்சனைக்குக் காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் கூட்டணியில் இருப்பதால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை எடுத்துக் கூற முடியவில்லை. அதேநேரம் கடந்த ஒன்றரை ஆண்டில் தமிழக முதலமைச்சர் சுறுசுறுப்புடனும் வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட்டு வருகிறார். மேலும், எளிதில் அணுகக் கூடியவராகவும் உள்ளார்" என்றார்.

பரபரப்பு
முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கோவை விமான நிலையத்திற்கு வர இருந்தார். இதனால் பாஜக ஆதரவாளர்களும் அங்குத் திரண்டு இருந்தனர். அப்போது பாஜகவினர் அண்ணாமலைக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர். அதேபோல காங்கிரஸ் கட்சியினரும் எதிர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்குச் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications