அப்பாடா.. கோவைக்கு நல்ல நேரம் தொடங்கிருச்சு.. சிங்காநல்லூரே அடியோடு மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை - திருச்சி சாலையில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சிங்காநல்லூரில் மேம்பால கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான டெண்டர் வரும் 28 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

சென்னைக்கு அடுத்த பெரிய நகரமாகவும், தொழில் நகரமாகவும் விளங்கி வருகிறது கோவை மாவட்டம். மாவட்டத்தின் பிரதானப் பிரச்னையாக உள்ளது போக்குவரத்து நெரிசல். கேரள மாநிலத்தின் நுழைவுப் பகுதியாகவும் கோவை உள்ளது. பிரபல தொழில் நிறுவனங்கள், கல்லூரிகள், ஜவுளி ஆலைகள், பம்புசெட்டுகள், மோட்டார், கன ரக வாகனங்களின் உதிரிபாகங்கள் தயாரிப்பு ஆலைகள், கிரைண்டர், மிக்சி உற்பத்தி ஆலைகள், ஐடி நிறுவனங்கள் என பல்வேறு தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன.

traffic singanallur flyover

மாநிலத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ள கோவையில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், மருத்துவம் என பல்வேறு தேவைகளுக்காக அதிக அளவிலான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால், வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாக கோவை மாறிவிட்டது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு முக்கிய சிக்னல்களில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில், பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, கோவை - திருச்சி சாலையில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வெளியூருக்குச் செல்லும் பொதுமக்கள் பலரும் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்துக்கு சென்றுதான் செல்கின்றனர். நான்கு முக்கிய சாலைகள் சந்திக்கும் இப்பகுதியில் வாகன நெரிசல் மிகவும் அதிகமாக உள்ளது.

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் தொலைதூர பேருந்துகள் மற்றும் திருச்சி சாலையில் ஒண்டிப்புதூரில் இருந்து வந்து திரும்பும் பேருந்துகள், கோவை பீளமேடு செல்லும் வாகனங்கள் உக்கடம் செல்லும் வாகனங்கள் என நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. சிங்காநல்லூர் சிக்னல் அருகே திருச்சி சாலையில் தற்போது யூ டர்ன் வசதி உள்ளது.

இருந்தாலும் வாகனங்கள் கடும் நெரிசலில் சிக்குவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்ட கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. ஆனால், மெட்ரோ ரயில் திருச்சி சாலை வழியாக போகும் என்று கூறப்பட்டதால் இந்த மேம்பாலப் பணி தாமதமானது.

தற்போது அவிநாசி சாலை மற்றும் சக்தி சாலையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். திருச்சி சாலையில் செயல்படுத்தப்படாது என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிங்காநல்லூரில் மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1 கோடியில் திட்டம் தயாராகியுள்ளது. அதாவது, சிங்காநல்லூர் பேருந்து நிலைய சந்திப்பில் இருந்து 2.4 கிலோ மீட் டர் தூரத்துக்கு இந்த மேம்பாலம் கட்ட திட்ட வரைவு தயாராகியுள்ளது.

திருச்சி சாலையில் இருபுறமும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, மேம்பால பணிகளை விரைந்து மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த மார்ச் மாதம் வரை 3 முறை டெண்டர் விடப்பட்டது. ஆனால், யாரும் டெண்டர் எடுக்கவில்லை. இதனால் மேம்பால பணிகள் துவங்குவதில் சற்று தொய்வு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, நான்காவது முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டர் வருகிற 18ம் தேதி திறக்கப்படவுள்ளது. டெண்டர் எடுக்கப்பட்டவுடன் உடனடியாக இப்பகுதியில் மேம்பால பணியை துவக்க நெடுஞ்சாலைத் துறை தயாராக உள்ளது. மண் பரிசோதனை ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுவிட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்குள் இப்பகுதியில் மேம்பாலம் கட்டி முடிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+