தமிழ்த் தாய் வாழ்த்து, தமிழ் கல்வெட்டு புறக்கணிப்பு-நிர்மலா சீதாரமன் நிகழ்ச்சிகளில் கிளம்பிய சர்ச்சை
கோவை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் தமிழ் கல்வெட்டுகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோவை தனியார் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிப்பு: இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சரஸ்வதி வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் தாய் வாழ்த்து இந்த நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு, தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை அரசு பாடலாக பிரகடனம் செய்திருந்தும் இந்த நிகழ்ச்சியில் அப்பாடல் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டது.

தமிழில் கல்வெட்டு இல்லை: இதேபோல வங்கியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கல்வெட்டுகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். இந்த கல்வெட்டுகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இடம் பெற்றிருந்தன. தமிழ்நாட்டில் உள்ள வங்கி கிளையில் தமிழ் கல்வெட்டு வைக்கப்படவில்லை. இது சர்ச்சையாக வெடித்தது. கடந்த ஆண்டும் கோவை நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

அட்வைஸ் செய்த நிர்மலா சீதாராமன்: இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், வங்கியில் கல்வெட்டுகளைத் திறந்து வைத்த உடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி அதிகாரிகளை அழைத்து எந்த ஊரில் நீங்கள் கிளைகள் திறந்தாலும் அந்த ஊர் மொழியில் கல்வெட்டுகள் வைக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் முன்னிலையிதான் கூறினார். தமிழ் அங்கு புறக்கணிக்கப்படவில்லை. கல்லூரியின் நிகழ்ச்சி நிரல் எனக்கு முன்னரே தெரியாது. நிகழ்ச்சி தொடங்கிய பின்னர்தான் எங்களுக்கு தெரியும். நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துக்கொண்டதால் ஒருவேளை எனக்கு டக்கென தோணலை. நீங்க சொன்னதுக்கு பிறகுதான் தோணுது.. ஏனெனில் நிறைய புரோகிராம் காலையில் இருந்து..எந்த புரோகிராமில் என்ன பாடினாங்கன்னு கொஞ்சம் ஞாபகம் இல்லை என்றார்.

கோவையில் வரவேற்பு: முன்னதாக கோவைக்கு நேற்று முன்தினம் இரவு வருகை தந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு பாஜகவினர் மிக பிரம்மாண்டமான வரவேற்பளித்தனர். விமான நிலையத்தில் பாஜக மகளிரணியினர் மலர்கள் தூவி பூமழை பொழிந்து நிர்மலா சீதாராமனை வரவேற்றனர்.
— மா.ச. மதிவாணன் (@masamathi) October 4, 2023
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications