கோவை மக்களை மறுபடியும் மிரட்டும் கொரோனா.. ஒரே நாளில் 188 கேஸ்கள் பதிவு..!
கோவையில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது
கோவை: கோவையில் மறுபடியும் தொற்று அதிகரிக்க ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது.. நேற்று மட்டும் ஒரே நாளில் 198 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.. இது அம்மாவட்ட மக்களை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்தது.. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை தீவிரமான முன்னேற்பாடுகளை செய்தது..

முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே கோவை சென்று வந்தார். தொற்றை தடுக்க பல்வேறு வழிகளையும், அதிகாரிகள் கையாண்டனர்..
இதையடுத்து, மெல்ல மெல்ல கோவை மீண்டு வந்தது.. கடந்த 26-ந் தேதி 164 பேருக்கு தொற்று இருந்தது.. ஆனால், திடீரென மறுநாளே பாதிப்பு எண்ணிக்கை உயர தொடங்கி விட்டது..
நேற்று முன்தினம் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.. ஆனால், நேற்று 188 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.. இப்படி தொடர்ந்து 3 நாட்களாக கேஸ்கள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இது மக்களுக்கு அச்சத்தைய்ம் தந்து வருகிறது..
கோவை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,28,874 பேருக்கு தொற்று உறுதியானது... இப்போதைக்கு 2,24,797 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 2,172-ஆக உயர்ந்துள்ளது.. 1,905 பேர் சிகிச்சையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications