கோவை மாநகராட்சிப் பகுதி மக்களுக்கு குட் நியூஸ்.. ஆணையர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
கோவை: கோவையில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தும் வகையில், சிறப்பு முகாம் நாளை ஜனவரி 18, 19 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி சார்பில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் அவ்வப்போது சிறப்பு முகாம் அமைத்து வசூலிக்கப்படுகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) வரிவசூல் பணி நடைபெறும்.
நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்களாக) வரிவசூல் பணி நடைபெறும்.
மேலும், அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் ஜனவரி 18, 19 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும். சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்: வார்டு எண் 57, 58க்கு நெசவாளர் காலனி, மாநகராட்சி ஆரம்ப பள்ளி, வார்டு எண் 23க்கு
பூங்கா நகர், விநாயகர் கோவிலிலும், வார்டு எண் 39க்கு குஜன்ஸ் அட்ரியா பரிபாலனா அப்பார்ட்மெண்ட் அஜ்ஜனூர் ரோடு, வடவள்ளியிலும் நடைபெறவுள்ளது.
வார்டு எண் 38க்கு மருதமலை மெயின் ரோடு ஓணாபாளையத்திலும், வார்டு எண் 21க்கு விநாயகாபுரம் 2வது வீதியிலும், வார்டு எண் 94க்கு மாரியம்மன் கோவில்,மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையத்திலும், வார்டு எண் 97க்கு மாரியம்மன் கோவில்,பாடசாலை வீதி, ஈச்சனாரியிலும் முகாம் நடைபெறுகிறது.
அதேபோல, வார்டு எண் 32க்கு சிறுவர் பூங்கா, நாராயணசாமி வீதி, சங்கனூரிலும், வார்டு எண் 80க்கு ஒக்கிலியர் காலனி ஸ்கூல், கெம்பட்டி காலனியிலும் முகாம் நடைபெறவுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் மேற்கண்ட சிறப்பு வரிவசூல் முகாம்கள் சனிக்கிழமை (18.01.2025) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (19.01.2025) ஆகிய இரண்டு நாட்களிலும் வழக்கம் போல் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக செயல்படும். எனவே. பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications