Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை பால் வியாபாரிக்கு விபூதி அடித்த 'ஐடி நிறுவனம்' .. ஒரே நாளில் 70 லட்சம் காலி.. தம்பதி கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: சதுரங்க வேட்டை படம் பாணியில் ஆசை வார்த்தை கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்க இங்கே நிறைய பேர் ரெடியாக இருக்கிறார்கள். அவர்களை நம்பி செல்வோர் ஏமாற்றப்படுகிறார்கள்.ஒன்றுமே இல்லை.. நீங்கள் மாதம் மாதம் 3 வட்டி தருவதாக கூறி கவர்ச்சிகரமான நிதி நிறுவனம் ஆரம்பித்தால், இப்போதும் ஏமாறுவார்கள். அதேபோல் பணம் டபுள் ஆகும் விஷயங்களை கூறினாலும் ஏமாறுகிறார்கள். அப்படித்தான்கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் பங்குதாரர் ஆசையைக் காட்டி, ஒரு பால் வியாபாரியிடம் சுமார் ரூ.70 லட்சம் மோசடி செய்திருக்கிறார்கள். ஒருதம்பதி எப்படி இதை செய்தார்கள் என்பதை பார்ப்போம்.

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 71 வயதாகும் கோவிந்தராஜ் என்ற பால் வியாபாரிதான் இந்த மோசடியில் பணத்தைஏமாந்துள்ளார். காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ராஜாராம் (44) மற்றும் அவரது மனைவி சவுந்தர்யா (32) ஆகிய இருவரும் இவருக்கு அறிமுகம் ஆகியுள்ளனர்.

Couple in Coimbatore earns Rs 70 lakhs by pretending to be an IT company

ஐடி நிறுவனம்

தங்கள் இருவரும் ஐடி நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருவதாக பால் வியாபாரி கோவிந்தராஜ்விடம் கூறியிருக்கிறார்கள். மேலும் அதை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப் போவதாகவும் ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்கள். "எங்கள் நிறுவனத்தில் பங்குதாரராகச் சேர்ந்தால், குறுகிய காலத்தில் பெரும் லாபம் ஈட்டலாம்" என்று சொல்லியிருக்கிறார்கள். தொழிலில் பெரிய லாபம் என்று ஆசை வார்த்தையில் பால் வியாபாரி கோவிந்தராஜ் மயங்கினார்.

70 லட்சம் மோசடி

முதற்கட்டமாகத் தான் சேர்த்து வைத்திருந்த ரூ.6 லட்சத்தையும், பின்னர் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி ரூ.64 லட்சத்தையும் என மொத்தம் ரூ.70 லட்சத்தை அந்தத் தம்பதியிடம் முதலீடாகக் கொடுத்துள்ளார். ஆரம்பித்தில் ஆசை வார்த்தை காட்டியவர்கள், பின்னாளில் லாபம் எதுவும் தரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்த கோவிந்தராஜ், முதலீட்டுப் பணத்தையாவது திரும்பக் கொடுக்கும்படி கேட்டாராம். ஆனால் ராஜாராம் மற்றும் சவுந்தர்யா இருவரும் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன், பால் வியாபாரி கோவிந்தராஜை மிரட்டவும் செய்தார்களாம்

தம்பதி கைது

இதனைத் தொடர்ந்து, கோவிந்தராஜ் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடிக்குப் பின்னணியில் இருந்த ராஜாராம், சவுந்தர்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அப்போது நடத்திய விசாரணையில், இந்தத் தம்பதி கோவிந்தராஜைப் போலவே பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.

மக்கள் ஏமாறாமல் இருக்க வழி என்ன?

இந்தச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பதற்குக் காரணம் சதுரங்க வேட்டை படம் பாணி தான்.. "குறுகிய காலத்தில் பெரும் பணம் ஈட்டலாம்" என்ற பேராசைதான். இது போன்ற முதலீட்டு மோசடிகளில் சிக்காமல் இருக்க மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
நீங்கள் முதலீடு செய்யவிருக்கும் நிறுவனத்தின் சட்டப்பூர்வ பதிவை சரிபார்க்க வேண்டும். நிறுவனத்தின் CIN அல்லது GST எண்ணைக் கொண்டு அதன் நம்பகத்தன்மையைச் சோதிக்க வேண்டும்.

ஆவணங்கள் வேண்டும்

நிறுவனம் உண்மையிலேயே இயங்குகிறதா? அதன் அலுவலகம், ஊழியர்கள், மற்றும் தயாரிப்புகளை நேரடியாகச் சென்று பார்க்கவும். வெற்றுப் பேச்சுக்களையும், கவர்ச்சியான இணையதளங்களையும் மட்டும் நம்பக்கூடாது. நீங்கள் வழங்கும் முதலீட்டிற்கு, நிறுவனம் பங்குதாரர் ஒப்பந்தம் அல்லது முதலீட்டு ஒப்பந்தம் கொடுக்கிறதா? அதில் உள்ள நிபந்தனைகள், லாபப் பங்கீடு மற்றும் வெளியேறும் வழிமுறைகள் தெளிவாக இருக்கிறதா என்பது முக்கியம். எந்தவிதமான ஒப்பந்த ஆவணமும் இல்லாமல் பணத்தைக் கொடுக்கவே கூடாது.

ஏமாந்தால் என்ன செய்ய வேண்டும்

ஒருவேளை மோசடி செய்பவர்களிடம் சிக்கிக் கொண்டால், பீதியடையாமல், மோசடி என்பதை உணர்ந்தவுடன், தாமதமின்றி உங்கள் மாவட்டத்தின் குற்றப்பிரிவுபோலீஸ் நிலையத்திலோ அல்லது சைபர் கிரைம் பிரிவிலோ எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்க வேண்டும்.
மோசடி நபர்களுடன் நடந்த அத்தனை உரையாடல்களின் ஆதாரங்களையும் (வாட்ஸ்அப் சாட்டிங், இ-மெயில்கள், குரல் பதிவுகள்) பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும், பணம் அனுப்பப்பட்ட வங்கி பரிவர்த்தனை விவரங்கள் மிகவும் முக்கியமான சட்ட ஆதாரங்களாகும்.அதேபோல் நீங்கள் ஏமாற்றப்பட்டதை வெளியே சொல்லத் தயங்க வேண்டாம், உங்கள் அனுபவம் மேலும் பல பொதுமக்கள் சிக்காமல் இருக்க உதவியாக இருக்கும்.
விளம்பரங்களையும், ஆசையூட்டும் வார்த்தைகளை நம்பி பணத்தை தொலைக்க வேண்டாம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+