"தேவியின் திருவிளையாடல்".. காய்கறி நறுக்கும் கத்தியுடன் ஸ்டேஷனுக்கு போன கணேசன்.. அதுக்குன்னு 27 இடமா?
கோவை: போலீஸ் ஸ்டேஷனுக்குள் காய்கறி நறுக்கும் கத்தியுடன் நுழைந்துள்ளார் கணேசன்.. அதற்கு பிறகு ஒன்றுவிடாமல் அவர் சொன்ன தகவலை கேட்டு, சூலூர் போலீசாரே அதிர்ந்து போனார்கள்.
கோவை சூலூர் அருகே உள்ள பள்ளப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன்.. 30 வயதாகிறது.. இவர் ஒரு டிரைவர்.. மனைவி பெயர் நிவேதா.. 24 வயதாகிறது.. இவர்களுக்கு 7 வயதில் ஹரீஸ் என்ற மகனும், 5 வயதில் பூஜா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
தம்பதிக்குள் அடிக்கடி தகராறு வந்துபோகுமாம்.. ஆனால், உடனே இருவரும் சமாதானமாகிவிடுவார்களாம்.. அப்படித்தான் சம்பவத்தன்றும் கணேசனுக்கும், நிவேதாவுக்கும் திடீரென தகராறு வந்துள்ளது.

ஆத்திரம் மனைவி: இதில் ஆத்திரம் அடைந்த கணேசன், நிவேதாவை கத்தியால் குத்திவிட்டார்.. இதில் ரத்த வெள்ளத்தில் நிவேதா சரிந்து விழுந்து உயிரிந்தார்.. மனைவியின் சடலத்தை பார்த்ததுமே அதிர்ந்து போன கணேசன், நேராக சூலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரண் அடைந்துவிட்டார்.. மனைவியை குத்தி கொன்றதாக போலீசாரிடம் சொல்லவும், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.. அப்போது, கணேசன் தந்த வாக்குமூலம் இதுதான்:
"நான் அந்தமான் நிகோபார் தீவில் பிறந்தேன்... பெற்றோரை இழந்தவன்.. என்னை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் தத்து எடுத்து வளர்த்தார்... 8 வருடத்துக்கு முன்பு அன்னூரில் உள்ள ஒரு பஞ்சு மில்லில் வேலை பார்த்து வந்தேன்... அப்போதுதான் நிவேதாவை சந்தித்தேன்.. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மணச்சநல்லூரை சேர்ந்தவர் நிவேதா.. நெருங்கி பழகினேன்.. நாங்கள் 2 பேருமே காதலித்தோம்.. பிறகு திருமணம் செய்து கொண்டோம்.

கள்ளக்காதல்: எங்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள்.. 3 வருடங்களுக்கு முன்பு சூலூர் அருகே உள்ள பள்ளப்பாளையத்தில் வசித்து வந்தோம்... அங்கே நான் லோடு ஆட்டோ ஓட்டி வந்தேன்... கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நிவேதா, கண்ணம்பாளையத்தில் உள்ள மில்லுக்கு வேலைக்கு போனார்.. அப்போது அதே மில்லில் வேலை பார்த்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது... நாளடைவில் அவர்களுக்குள் அது கள்ளக்காதலாக மாறியது... நான் வீட்டில் இல்லாத சமயம், முருகனை வீட்டிற்கு அழைத்து, என் மனைவி ஜாலியாக இருந்திருக்கிறார்.
இது அடிக்கடி நடந்துள்ளது.. அதனால், அக்கம் பக்கத்தினர் இதை பார்த்துவிட்டு, எனக்கு சொன்னார்கள்.. அதனால், நான் நிவேதாவை கண்டித்தேன்... இதன் காரணமாக எங்களுக்குள் தகராறு வந்தது.. அதனால், நிவேதாவை வேலைக்கு போக வேண்டாம் என்று சொன்னேன்.. அதன்படியே நிவேதா வேலைக்கு போகவில்லை.. ஆனால், முருகனுடன் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருந்தார்.. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

மாமியார் சரோஜா: என்னுடைய குழந்தைகளை பார்ப்பதற்காக என்னுடைய மாமியார் சரோஜா, கடந்த சில நாட்களுக்கு முன்பு என் வீட்டிற்கு வந்திருந்தார்.. நேற்று நான் வேலைக்கு போய்விட்டு, குடிபோதையில் வீட்டிற்கு போனேன்.. அப்போது மாமியாரிடம் என்னுடைய குழந்தைகளுக்கு ஜூஸ் வாங்கி கொடுக்கும்படி சொல்லி வெளியே அனுப்பி வைத்தேன்... அப்போது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நிவேதாவுக்கும் எனக்கும் மறுபடியும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து நிவேதாவின் கழுத்தில் 5 இடங்களில் குத்தினேன்...
இதில் ரத்த வெள்ளத்தில் நிவேதா கீழே விழுந்தார். ஆனால், ஆத்திரம் அப்போதும் எனக்கு அடங்கவில்லை.. அதனால், மறுபடியும் நிவேதாவின் மார்பு, வயிறு, தொடை, கால் என மொத்தம் 27 இடங்களில் கத்தியால் குத்தினேன்.. இதில் சம்பவ இடத்திலேயே நிவேதா துடிதுடித்து இறந்தார்.. அதற்கு பிறகுதான் அந்த கத்தியை எடுத்துக் கொண்டு, ஆட்டோவில் ஏறி, சூலூர் போலீசில் சரணடைய வந்தேன் என்றார்.. காதல் மனைவியை 27 இடங்களில் கத்தியால் குத்திய கணேசன் இப்போது சிறையில் உள்ளார்.. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
கண்ணெதிரே : அதாவது நேற்றுமுன்தினம், டியூட்டி முடித்துவிட்டு, கணேசன் வீடு திரும்பியிருக்கிறார்.. அப்போது, நிவேதாவுடன் முருகன் தனிமையில் இருந்துள்ளதாக தெரிகிறது. கணேசனை பார்த்ததுமே பதறிப்போன முருகன், அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதுதான் கணேசனுக்கு ஆத்திரத்தை தந்துள்ளதாகவும், அதனாலேயே சம்பவத்தன்று மாமியாரை குழந்தைகளுடன் கடைக்கு அனுப்பிவிட்டு, நிவேதாவிடம் இதை பற்றி விசாரித்ததாகவும் தெரிகிறது.. இறுதியில் இது வாக்குவாதமாக மாறி, கொலை வரை சென்றுள்ளதே தவிர, கொலை செய்ய வேண்டும் நோக்கத்தில் கணேசன் இதை செய்யவில்லை என்கிறார்கள்.. எனினும் கொலை, கொலை தானே.. தாய், தந்தையை காணோம் என்று அந்த குழந்தைகள் அழுதுகொண்டிருக்கிறார்களாம்..!!
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications